Friday, April 17, 2020

கைமா இட்லி

கைமா இட்லி என்பது ஹோட்டல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது .அதில் சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி மிகவும் பெயர் பெற்றது அதை வீட்டிலேயே செய்யலாம்..

அதற்கு தேவையான பொருட்கள்

ஆறிய இட்லி--------------------------5
பெரிய வெங்காயம்--------------ஒன்று
தக்காளி----------------------------------இரண்டு
குடைமிளகாய்------------------------1
பச்சை பட்டாணி-----------------------ஒரு பிடி
இஞ்சி பூண்டு விழுது----------------1டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா பவுடர்--+------------1ஸ்பூன்
மிளகாய்த்தூள்---------------------------1ஸ்பூன்
எண்ணெய்--------------------------------1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை&கொத்தமல்லி-கொஞ்சம
செய்முறை
இட்லியை சதுரத் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வை
ஒரு வாணலியிஎண்ணெய்யை விட்டு கடுகு தாளி அத்துடன் கருவேப்பிலை வெங்காயம் போட்டு வ.தக்கு, அத்துடன் பூண்டு இஞ்சி விழுதைப் போட்டு வதக்கு. நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு மசியும்படி வதக்கு. குடைமிளகாய் பட்டாணி போட்டு வதக்கவும்அத்துடன் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடு. தண்ணீர் குறைந்ததும் வறுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு நன்கு கிளறு. அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவுகைமா இட்லி யைகீழே இறக்கி வை. இப்பொழுது கலர்ஃபுல்லான கைமா இட்லி தயார்.

கைமா இட்லி

கைமா இட்லி  ஹோட்டல் களில்