Sunday, September 11, 2011

thayir pachidi (reitha)

தயிர்   பச்சிடி 
--------------------
 இது  மிக    சுலபமான    ஒன்று .ஆனால்   மிக
 அவசியமானது .கலப்பு  சாதம் ,பிரியாணி , 
 போன்றவற்றிற்கு    சைடு  டிஷ்    ஆக இது
பயன்படும் .
   ஒரு  கப்  கெட்டி  தயிர   எடுத்து   ஒரு  கிண்ணத்தில் 
 போட்டுகொள்ளவும் .ஒருஅங்குலம் சதுரம்   அளவு 
 தேங்காய் , ஒரு பச்சை  மிளகாய்   அரை   டீஸ்பூன் 
  உப்பு   முன்றையும்   மிக்ஸ்யில் அராய்த்து   தயிரில் 
   கலக்கவும் கடுகு   தாளிக்கவும் .இது  விசேஷங்களுக்கு 
 ஏற்றது 
 இரண்டா வது    வகை 
-------------------------------
மேலே   உள்ள பச்சிடியில்   தக்காளியை  பொடியாக 
  நறுக்கி   அரை ஸ்பூன் ஆயில் விட்டு  இலேசாக வதக்கி
   போடவும் . இது  அணைத்து   வகை   சாததிறக்கும் 
    சைடு  டிஷ்  ஆக   பயன்படும்
 முன்றாவது   வகை  
-----------------------------
   இரண்டு   கப்   தயிரில்   பெரிய கேரட்    ஒன்றை 
     துருவி  போட்டு    தேவை ஆன  உப்பு போட்டு  
   கலக்கவும் .இது   போல் வெள்ளரிக்காய் .பச்சை
 ஆப்பிள், வெங்காயம்  ஆகியவற்றில்  செயலாம் 
   நான்காவது    வகை
------------------------------
      ஒரு   கப்   தயிரில்  தேவையான    உப்பு   போட்டு
 அதில்   காராபூந்தியை   போட்டு   கலக்காமல் 
 உடனே   பரிமாற வேண்டும் .இது  குழந்தை கள் 
விரும்பி   சாப்பிடுவார்கள்








n

fruit pachidi

நாம்  விருந்து   என்றாலே   இனிப்பு   தான் 
முதலில்  பரிமாறுவோம் .எனவே   முதலில் 
பழ பச்சிடியை   செய்வதை  பார்போம் .
தக்காளி .ஆப்பில் ,பப்பாளி ,மாம்பழம் ,திராட்சை ,
  பேரீச்சை ,காய்ந்த திராட்சை  ஆகியவை  சிறந்தது .
இ தில்   எது   கைவசம்     உள்ளதோ   அந்த   பழங்களை 
நன்கு  கழுவி   துணியால்   துடைத்து   சிறிய  துண்டு களாக
 நறுக்கி  ஒரு   கிண்ணத்தில்   போடவேண்டும் . பின்பு    ஒரு
    கப் பழங்கல்லுக்கு   ஒரு கப்  சர்க்கரையை கால்   கப்  தண்ணீர்
   விட்டு அடுப்பில்   வைத்து  பாகுகாயிச்ச    வேண்டும் ..சர்க்கரை 
    நன்றாக கரைந்து   கொதி க்க   வேண்டும்..பின்   இறக்கி   ஆரிய பின்
    பழ   கலவையில்   கலந்து   பரிமாற   வேண்டும்  இதுவே   பழ  பச்சிடி
இதை    குழந்தைகளுக்கு    மாலை யில்      சிற்றுண்டியாக   கொடுக்கலாம்     



Sunday, September 4, 2011

samaiyal,

சமையல்    என்பது    மிக   கடினமான வேலை 
என்பது    அனைவரின்   நினைப்பு .என்னதான் 
பணம்,, புகழ்  இருந்தாலும் நாக்கிற்கு    ருசியான 
உணவு  கிடைத்தால்   தான்  வாழ்க்கை  சந்தோஷமாக 
இருக்கும் .நாம்   உலகில்   எங்கு  சென்றாலும்  முதலில் 
 கேட்பது   இந்த    ஊரில்  நல்ல  ஓட்டல்   எது ?  அது  எங்கு
உள்ளது? அதில்   என்ன  உண்வு ஸ்பெஷல் ?என்றுதான் 
 கேட்கிறோம் .நம்  வீடிற்கு   விருந்திநர்  நாமே   சமையல்
செய்து   உபசரிக்கும்   பொழுது   இருக்கும்   மகிழ்ச்சி 
 சொல்லமுடியாத   ஒன்று .அதுவும்   அவர்கள்   நம்
 சமையலை ஆஹா .பிரமாதம்    என புழ்ந்தால்   நாம்
 அடையும்   ஆனந்தம்    அளவிடமுடியாத   ஒன்று .
அதை  அனைவரும்  அடைய  வேண்டும்   என்பதற்காக 
 இந்த  பகுதியை   எழுத   தொடங்கியுள்ளேன் .