தயிர் பச்சிடி
--------------------
இது மிக சுலபமான ஒன்று .ஆனால் மிக
அவசியமானது .கலப்பு சாதம் ,பிரியாணி ,
போன்றவற்றிற்கு சைடு டிஷ் ஆக இது
பயன்படும் .
ஒரு கப் கெட்டி தயிர எடுத்து ஒரு கிண்ணத்தில்
போட்டுகொள்ளவும் .ஒருஅங்குலம் சதுரம் அளவு
தேங்காய் , ஒரு பச்சை மிளகாய் அரை டீஸ்பூன்
உப்பு முன்றையும் மிக்ஸ்யில் அராய்த்து தயிரில்
கலக்கவும் கடுகு தாளிக்கவும் .இது விசேஷங்களுக்கு
ஏற்றது
இரண்டா வது வகை
-------------------------------
மேலே உள்ள பச்சிடியில் தக்காளியை பொடியாக
நறுக்கி அரை ஸ்பூன் ஆயில் விட்டு இலேசாக வதக்கி
போடவும் . இது அணைத்து வகை சாததிறக்கும்
சைடு டிஷ் ஆக பயன்படும்
முன்றாவது வகை
-----------------------------
இரண்டு கப் தயிரில் பெரிய கேரட் ஒன்றை
துருவி போட்டு தேவை ஆன உப்பு போட்டு
கலக்கவும் .இது போல் வெள்ளரிக்காய் .பச்சை
ஆப்பிள், வெங்காயம் ஆகியவற்றில் செயலாம்
நான்காவது வகை
------------------------------
ஒரு கப் தயிரில் தேவையான உப்பு போட்டு
அதில் காராபூந்தியை போட்டு கலக்காமல்
உடனே பரிமாற வேண்டும் .இது குழந்தை கள்
விரும்பி சாப்பிடுவார்கள்
n