Wednesday, March 16, 2016

aingayapodi

இந்த  ஐங்காயபொடி   திருவாரூர்   styie  .என்   மாமியார்   சொல்லி  கொடுத்தது .இதை   சூடான  சாதத்தில் போட்டு  கொஞ்சம்  நெய்  அல்லது   நல்ல எண்ணை  விட்டு   பிசைந்து   சாப்பிட  வேண்டும் . இது  உடம்பிற்கு   மிக நல்லது .ஜீரண
கோளாறுகள்   சரியாகும் பிரசவித்த பெண்கள்  தினமும்  சாப்பிடல் வேண்டும் .


இதற்க்கு   தேவையான   பொருட்கள் ;
---------------------------------------------------

கடுகு , வெள்ளை  உளுத்தம்   பருப்பு ,கடலை  பருப்பு ,துவரம் பருப்பு , மல்லி

மிளகு ,ஜீரகம் ,  வேப்பம்பூ ,  சுண்டைகாய்  வற்றல் ,  கொள்ளு ஆகிய  பத்து

பொருட்களை  தலா    100   கிராம்  என   எடுத்து கொள்ளவேண்டும் .

சுக்கு  50  கிராம் ,  காய்ந்த   மிளகாய் 25  கிராம் ,   பெருங்காயம் 25  கிராம்

கறிவேப்பிலை    இரண்டு   பிடி    ,,உப்பு     2 டேபிள்    ஸ்பூன்
செய்முறை '
----------------
ஒவொன்றையும்   தனித்தனியாக  சிவக்க  வறுத்து எடுத்து   கொள்ளவேண்டும் கரிவேப்பிலையையும் அப்படியே   வறுத்து  எடுத்து கொள்ள வேண்டும்  , அனைத்தையும்   உப்பு   சேர்த்து    ஆறியதும்  மிக்ஸ்யில்   அரைத்து  வைத்து    கொள்ளவேண்டும் . இது
எவ்வளவு  நாட்கள்   வைத்திருந்தாலும்   கெட்டு  போகாது







No comments:

Post a Comment