Saturday, August 22, 2020

தட்டை

தேவையான பொருள்
பச்சரிசி மாவு............2 கப்
உளுத்தம் மாவு வறுத்து பொடி செய்தது.,.............1/4 கப்
பொட்டுக்கடலைமாவு 1/4 கப்
காஷ்மீரி சில்லி பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 கைப்பிடி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
செய்முறை
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணையை காய்ச்சி அதில் ஊற்றி தேவையான உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தால் போதும்
இரண்டு அலுமினியம் ஃபாயில் களை எடுத்துக்கொண்டு கோலி குண்டு அளவு உருட்டி ஒரு foil மேல் வைத்து மற்றொரு. Foil மேலே வைத்துஅதை டபராவால் அழுத்தவேண்டும் அப்போது வட்டமாக வரும் அதை எண்ணெய் காய்ந்ததும் போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும் இதுதான் தட்டை செய்யும் முறை



மடம்

Monday, August 17, 2020

கடுபு(Karnataka special)

கடுபு என்பது கர்நாடகாவில் செய்யும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு மாலையாக போடுவார்கள் அதை செய்யும் முறையை கீழே காண்போம்

தேவையான மட்ட
கடலைப்பருப்பு................. ஒரு கப் (டம்ளர்)
வெல்லம்.............................. ஒரு கப்
தேங்காய்.............................. ஒரு மூடி
கோதுமை மாவு................... 200 கிராம்
அரிசி மாவு.............................. ஒரு ஸ்பூன்
கிராம்பு....................................... 4
திராட்சை.................................... 25 கிராம்

செய்முறை
கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவேண்டும் அதை மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு கரகரப்பாக அரைக்கவும் அதை வெல்லத்தில் பாகு வைத்து அதில் போட்டு கிளற வேண்டும் அத்துடன் திராட்சை கிராம்பு அரிசி மாவை போட்டு நன்றாக கிளறி எடுத்து ஆற வைக்க வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்து சிறிய வட்டமாக இட்டு அதில் பூரணத்தை வைத்து boat வடிவத்தில் மூட வேண்டும் அதை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இதுதான் கடுபு



...
.....
.
.. 





......