மசால் தோசை
மசால் தோசை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் அதுவும் ஹோட்டல் மசால் தோசை போல செய்தால் ஒரு கை பார்ப்பார்கள் அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி.,..,,,3 கப்
உளுத்தம் பருப்பு.,,.,.1கப்
பயத்தம் பருப்பு....,,,,1 பிடி
கடலைப்பருப்பு.,.....,..1 பிடி
வெந்தயம்........,..,..,......1 ஸ்பூன்
அவல்........,,.,...,.........,,...,.1 பிடி
செய்முறை
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து உப்பு போட்டு வைக்கவும் மறுநாள் தோசை வார்க்கலாம், அதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி உருளைக்கிழங்கு மசாலா ஏற்றது
உருளைக்கிழங்கு மசாலா செய்யும் முறை
நான்கு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும் 2 வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்
செய்யும் முறை
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்விட்டு
அதில் அரை ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொன்னிறமாக வதக்கவும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதில் போட்டு ஒரு டம்பளர் தண்ணீர் விடவும் தேவையான உப்பு போடவும் நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட வேண்டும் நன்றாக கொதித்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது போட்டு இறக்கவும்,
தோசையை வார்த்து அதனுள் கிழங்கை வைத்து மடித்து
கொடுக்க வேண்டும்
இதுவே மசால் தோசை ஆகும்
No comments:
Post a Comment