Friday, December 22, 2017

poondu rasam

தேவையான  பொருட்கள்

1கொத்தமல்லி  விதை ---------------2   டீஸ்பூன்
2மிளகு ---------------------------------------1  டீஸ்பூன்

3ஜீரகம் ---------------------------------------1 டீஸ்பூன்

4சிகப்பு  மிளகாய் ------------------------2

பூண்டு ----------------------------------------4  பல்

புளி ---------------------------------------------எலுமிச்சை அளவு

தக்காளி ----------------------------------------1   சிறியது

உப்பு ----------------------------------------------தேவையானது

step 1

முதலில் 1.2,3,4  இல் உள்ள  பொருட்களை இலேசாக  வாணலியில் எண்ணெய்

விடாமல்வ றுத்து எடு
step 2

  வறுத்த   பொருட்களோடு  பூண்டை சேர்த்து   மிக்சியில்  அரை

step 3

புளியை  ஒரு  கப்    தண்ணீர்   விட்டு கரை

தக்காளியை பொடிப்பொடியாக  நறுக்கி  புளி கரைசலில்  சேர் தேவையான உப்பு சேர்

அரைத்து   வைத்துள்ள    பொருட்களை   சேர்

அனைத்தையும் மிதமான    தீயில்    கொதிக்கவிடு

நன்கு  கொதித்ததும் 2கப்   தண்ணீர் சேர்

நுரைத்து   வந்ததும்   பச்சை   கொத்தமல்லி   தழையை  பொடியாக நறுக்கி

ரசத்தில் போடு
ஒரு  ஸ்பூன் எண்ணையில்  ஒரு ஸ்பூன்  கடுகை  தாளித்து   கொட்டு



Saturday, May 13, 2017

venthaya dosai

                                                         வெந்தய   தோசை


வெந்திய   தோசை   வெய்யில்  காலத்திற்கு  ஏற்றது .சர்க்கரை நோய்
 உள்ளவர்களுக்கு   மிகவும்   நல்லது .

தேவையான   பொருட்கள்


புழுங்கல்  அரிசி ----------------2  கப்

உளுத்தம் பருப்பு --------------1/2   கப்

வெந்தயம் -----------------------2   டீஸ்பூன்
இவைகளை    இரண்டு   மணிநேரம்   ஊறவைத்து  பின்  மிக்ஸி  அல்லது

கிரைண்டரில்  நன்கு   அரைக்கவும் .உப்பு  தேவையான அளவு   போட்டு

கலக்கவும் .உடனே  தோசை  செய்ய  நினைத்தால்  புளித்த மோர் இரண்டு
கரண்டி   ஊற்றி நன்கு கலக்கி பின்   தோசை  வார்க்க  வேண்டும் .இல்லாவிடில்
அடுத்த   நாள் தோசை  வார்க்கலாம்  .இதற்கு   தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி  தோசை  மிளகாய்  பொடி தொட்டு   கொண்டு   சுவையாக இருக்கும்
 


Monday, February 20, 2017

vadakariவடைகறி

                                                      வடைகறி 

வடைகறி  என்பது    தெனிந்திய  (southindian)உணவு .இதுஇட்லி ,  தோசை .பாராத ஆகியவைகளுடன் தொட்டு  கொண்டு  சாப்பிட கூடிய து .சென்னையில் உள்ள  சிறந்த உணவகங்களில் இது இட்லியுடன் பரிமாறப்படும் .


செய்முறை
----------------------
தேவையான  பொருட்கள்

கடலைபருப்பு -----------------------1 கப்
தேங்காய்  பால் -------------------1கப்   தேங்காயை   மிக்ஸ்யில் அரைத்து பால்
                                                                       எடுக்கவேண்டும்  
பெரிய  வெங்காயம் -------------2
தக்காளி ------------------------------2
மிளகாய்தூள் ----------------------1டீஸ்பூன்
மல்லி தூள் -------------------------1டீஸ்பூன்
மஞ்சதூள்---------------------------1/2டீஸ்பூன்
அரைப்பதற்கு
--------------------

இஞ்சிசிறிய துண்டு ,
பூண்டு ------8பல்
சோம்பு -----1டீஸ்பூன்
மிளகாய்---௩
பட்டை ----சிறிய துண்டு
கிராம்பு  ----2
ஏலக்காய்--1

செய்முறை

கடலை  பருப்பை   ஒரு  மணிநேரம் ஊறவைத்து  கரகரப்பாக அரைத்து
கொள்ளவெண்டும்மசாலா பொருட்களை கெட்டியாகஅரைத்து கொள்ளவெண்டும் இதில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து கடலைமாவுடன் உப்பு சேர்த்து வடை செய்யவேண்டும் அதை ஒரு பேப்பரில் வைக்கவேண்டும் அதிகபடியான எண்ணை நீங்கும் .வேறு ஒரு வாணலியில் 2ஸ்பூன்
எண்ணையில் பொடியாக நறுக்கிய  வெங்காயத்தை நன்கு வதக்கவேண்டும் அத்துடன் தக்காளி அரைத்த விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள்  மல்லி தூள் சேர்த்து
வதக்கு இத்துடன் தேங்காய் பால் ஊற்றிஒரு கொதி வந்ததும் வடைகளை
ஒன்றும் பாதியுமாக பிய்த்து போட்டு சிறிது நீர்ஊ ற்றி  ஒரு  கொதி  வந்ததும்  இறக்கி  பரிமாறலாம்.தேவையானால்  சிறிது உப்பு சேர்க்கலாம்






















9





















9
  
               பருப்பு உசிலி  
துவரம்  பருப்பு --------------1கப்
கடலை பருப்பு --------------1/2   கப்
காய்ந்த  மிளகாய் ---------௪
பெருங்காயம்   --------------சுண்டைகை  அளவு
உப்பு ----------------------------1/2 ஸ்பூன்
 தாளிப்பதற்கு -----------------கடுகு 1 ஸ்பூன்&1  ஸ்பூன் உடைத்த  உளுத்தம்  பருப்பு

வாழைபூ  ஒன்று   அல்லது       பீன்ஸ்200கிராம்   எதாவது   ஒன்று

                         செய் முறை

1       துவரம் பருப்பு  &கடலை பருப்பு  இரண்டையும்  ஒன்றாக ஒருமணி நேரம்

தண்ணீர்  விட்டு   ஊற வை  

2 பின்பு  பருப்பை  தண்ணீர்  இல்லாமல்  வடிய  வை
3பருப்பு மிளகாய்   பெருங்காயம் , உப்பு   சேர்த்து  மிக்ஸ்யில் அரை
4இந்த  விழுதை   இட்லி   தட்டில்   வேக வை
வாழை பூ   அல்லது  பீன்ஸ்   பொடியாக  நறுக்கி 1/4 ஸ்பூன்உப்பு  போட்டு
வேக வை .தண்ணீர்   இல்லாமல்   வடிகட்டு
5இட்லி தட்டில்  வேகவைத்த  பருப்பு  விழுது  ஆறியதும்உதிர்த்து  மிக்ஸ்யில்

இரண்டு சுற்று  சுற்றி  எடுத்து   உதிர்த்து   கொள்

6 கடாயில்   5 ஸ்பூன்   எண்ணை    ஊற்றி  கடுகு  உளுத்தம்  பருப்பு  தாளித்து
அதில் பருப்பு & வேகவைத்த  காய்   இரண்டையும்  போட்டு நன்றாக  கிளறி
இறக்கவும்
இந்த   பருப்பு   உசிலிக்கு    மோர் குழம்பு  சரியானcambination