green apple புளிப்பாக இருப்பதால் அதிகம் உபயோகிப்பது கிடையாது .நான் இங்கிலாந்து செல்லும் சமயங்களில் அதை தொக்கு செய்ய உபயோகிப்பேன் .அது மிக நன்றாக இருக்கும் அதை நீங்களும் செய்துபாருங்கள்
தேவையான பொருட்கள்
க்ரீன் ஆப்பிள் =====================================2
மிளகாய் பொடி ===================================2ஸ்பூன்
பெருங்காயத்தூள் ================================கால் ஸ்பூன்
எண்ணெய் =======================================4டேபிள் ஸ்பூன்
உப்பு =============================================தேவையான அளவு
வெல்லம் =========================================கோலிக்குண்டு அளவு
கடுகு ==============================================1ஸ்பூன்
செய்முறை
முதலில் ஆப்பிளை துருவி கொள்ளவேண்டும்
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில்
துருவிய ஆப்பிளை போட்டு வதக்க வேண்டும் .பின்பு மிளகாய் பொடி
பெருங்காயம் உப்பு போட்டு கிளறி நன்றாக சுருண்டு வரும் சமயம் மீதமுள்ள எண்ணெய் விட்டு வெல்லம் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்
முதலில் ஆப்பிளை துருவி கொள்ள வேண்டும்
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு
No comments:
Post a Comment