Saturday, February 8, 2020

aviyal

அவியல்

அதை கல்யாண சாப்பாடு என்றாலே அவியல் தான் முதலிடம் பெரும் .இலையில் அதை பரிமாறினால் தான் சாப்பாடே சிறப்புறும் .அதை செய்ய 
தேவையான பொருளையும் செய்யும் விதத்தையும் பார்ப்போம் 


தேவையான காய்கள் 
வெள்ளை பூசணிக்காய் --------------------------------------------அரைகிலோ 
சேனைக்கிழங்கு --------------------------------------------------------கால் கிலோ 
புடலங்காய் -----------------------------------------------------------------அரைகிலோ 
உருளை கிழங்கு -----------------------------------------------------------கால் கிலோ 
சௌசௌ -----------------------------------------------------------------------கால் கிலோ 
வாழைக்காய் ------------------------------------------------------------------இரண்டு 
கொத்தவரங்காய் -------------------------------------------------------------நூறு கிராம் 
பச்சைமிளகாய் -----------------------------------------------------------------நூறு கிராம் 
கறிவேப்பிலை ------------------------------------------------------------------ஒரு பிடி 
முருங்கைக்காய் ---------------------------------------------------------------இரண்டு 

தேவையான பொருட்கள் 




தேங்காய் ---------------------------------------------------------------------------------ஒன்று 
சீரகம் ------------------------------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
தயிர் ----------------------------------------------------------------------------------------------நான்கு கப்  
செய்முறை 

காய்களை ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
காய்களை கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும் தேவையான உப்பு போடவும் .தேங்காய் ,ஜீரகம் ,பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் 
நன்றாகமைய அரைக்க வேண்டும் .அதை வெந்த காயில் கொட்டி நன்றாக கிளறி விடவேண்டும் மசிக்க கூடாது .கீழே இறக்கி வைத்து தேங்காய் எண்ணையை பச்சையாக ஊற்றவேண்டும் .கொஞ்சம் ஆறியதும் தயிரை 
கடைந்து ஊற்றவேண்டும் தயிர் கெட்டியாக இருக்கவேண்டும்கறிவேப்பிலையை போடவும் .இலேசாக கிளறி விடவேண்டும் 
கம கம அவியல் தயார் .இலையிலஅதை பரிமாறினால் அதன் அழகே தனிதான் .

No comments:

Post a Comment