Thursday, February 23, 2023

 ஹலோ சமையல்.......... ஆப்பிள் பருப்பு

 எனக்கு விதவிதமாக சமைப்பது என்றால் மிகவும் இஷ்டம் அதுவும் UKஇல் என் பேத்திக்கு & பேரனுக்குபிடிக்கும் சமையலை செய்வதென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படி இந்த வாரம் ஆப்பிள் பருப்பு என்ற டிஷ் செய்தேன். அதை சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள் அதை உங்களுக்கும் கூறுகிறேன் நீங்களும் செய்து பாருங்கள்.


ஆப்பிள் பருப்பு

 தேவையான பொருள்

 பச்சைஆப்பிள் 2
🍏🍈
 பயத்தம் பருப்பு ஒரு கப்
 கடுகு ஒரு ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் நான்கு
 பெருங்காயம் அரை டீஸ்பூன்
 கருவேப்பிலை ஒரு கொத்து
 எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு

 செய்முறை
 ஆப்பிளை சிறியதுண்டங்களாக நெறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பயத்தம்பருப்பை குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்கவும் அதை வெந்தஆப்பிளுடன் சேர்த்து உப்பு போட்டு சிறிது கொதிக்க வைக்க வேண்டும். அதில் கடுகு உளுத்தம் பருப்பு, மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை அனைத்தையும் தாளித்துக் கொண்டு கிளறி இறக்க வேண்டும். இதை சாதத்தில் பிசைந்துசாப்பிடலாம். சப்பாத்தி இட்லிதோசை போன்றவைகளுக்கு சைட் டிஷ் ஆகும் உபயோகப்படுத்தலாம் இதன் ருசி பிரமாதமாக இருக்கிறது என்று என்று எங்கள் வீட்டில் அனைவரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள் நீங்களும் செய்து பாருங்கள்

Sunday, February 5, 2023

இட்லி மிளகாய் பொடி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு ஒரு கப் உளுத்தம் பருப்பு ஒரு கப் எள்இண்டு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் இரண்டு கப் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்செய்முறை மேலே உள்ள பொருட்களை நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் மிளகாய் தனியா வறுக்க வேண்டும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைக்க வேண்டும் வெல்லத்தை கடைசியில் போட்டு ரெண்டு சுற்றியதும் ஆறிய பின் பாட்டிலில் அல்லது எவர்சில்வர் சம்பளத்தில் போட்டு வைக்க வேண்டும் இதை இட்லி தோசைக்கு போட்டுக்கொள்ள நல்லெண்ணெய் விட்டு குழைத்து தொட்டுக்கொண்டு சாப்பிட சூப்பரோ சூப்பர்!!! இட்லி தோசைக்கு மேல் இதை தடவி ஊற வைத்து சாப்பிட அதனுடைய ருசி தனியே தான் !!!!!

Thursday, February 2, 2023

இன்றைய சமையல் இன்று என்ன சமையல் செய்வது என்று பலத்த யோசனை! அப்புறம் திடீரென்று இந்தக் குளிருக்கு மிளகு குழம்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . உடனே களத்தில் இறங்கினேன். அதை எவ்வாறு செய்தேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் காஞ்ச மிளகாய் 10 பெருங்காயம் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை பொடி ஒரு டேபிள் ஸ்பூன்( இந்தியாவிலிருந்து வரும் பொழுது கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொண்டு வந்து விடுவேன் அவ்வப்போது தேவையானவற்றிற்கு போடுவதற்கு)புளி எலுமிச்சைஅளவுமிளகுஒருடிஸ்புன்சீரகம்ஒருடீஸ்பூன் செய்முறை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம் பருப்பு மிளகாய் பெருங்காயம்மிளகு,சீரகம் இவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அனைத்து பொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக மைய அரைக்க வேண்டும். பின்பு ஒரு வானலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரைத்த விழுதை ஒருடம்ளர்தண்ணீர் விட்டு கரைத்து விட வேண்டும். தேவையான உப்பை போட்டு நன்றாக கலக்க வேண்டும் நன்றாக கொதித்து வரும்போது மீதமுள்ள எண்ணெயை விட்டு கிளற வேண்டும் எண்ணெய்பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி விட வேண்டும் இப்பொழுது கமகமவென்ற மிளகு குழம்பு தயார் எதற்கு தொட்டுக்கொள்ள கேரட்டை துருவிதேங்காய்போட்டு பொரியல் செய்தேன்.