Thursday, February 2, 2023

இன்றைய சமையல் இன்று என்ன சமையல் செய்வது என்று பலத்த யோசனை! அப்புறம் திடீரென்று இந்தக் குளிருக்கு மிளகு குழம்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . உடனே களத்தில் இறங்கினேன். அதை எவ்வாறு செய்தேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் காஞ்ச மிளகாய் 10 பெருங்காயம் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை பொடி ஒரு டேபிள் ஸ்பூன்( இந்தியாவிலிருந்து வரும் பொழுது கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொண்டு வந்து விடுவேன் அவ்வப்போது தேவையானவற்றிற்கு போடுவதற்கு)புளி எலுமிச்சைஅளவுமிளகுஒருடிஸ்புன்சீரகம்ஒருடீஸ்பூன் செய்முறை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம் பருப்பு மிளகாய் பெருங்காயம்மிளகு,சீரகம் இவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அனைத்து பொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக மைய அரைக்க வேண்டும். பின்பு ஒரு வானலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரைத்த விழுதை ஒருடம்ளர்தண்ணீர் விட்டு கரைத்து விட வேண்டும். தேவையான உப்பை போட்டு நன்றாக கலக்க வேண்டும் நன்றாக கொதித்து வரும்போது மீதமுள்ள எண்ணெயை விட்டு கிளற வேண்டும் எண்ணெய்பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி விட வேண்டும் இப்பொழுது கமகமவென்ற மிளகு குழம்பு தயார் எதற்கு தொட்டுக்கொள்ள கேரட்டை துருவிதேங்காய்போட்டு பொரியல் செய்தேன்.

No comments:

Post a Comment