இன்றைய காலை டிபன்
இன்று காலை எழுந்தது முதல் மனதிற்குள் ஒரே போராட்டம். என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! காலையில் என்ன டிபன் செய்வது என்று தான்! தினமும் இட்லி தோசை பொங்கல் என்று சாப்பிட்டு அ லுத்துவிட்டது. ஏதாவது மாறுதலா செய்யலாம் என்று தோன்றியது. அப்போது நேற்று வாங்கியmodern whole wheat bread நினைவிற்கு வந்தது. உடனே இரண்டு ஸ்லைஸ் பிரட் எடுத்தேன். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுத்தி ரவை பதத்திற்கு எடுத்தேன் ஒரு வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்தேன். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் கடுகு போட்டேன். அது வெடித்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டேன் அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு கண்ணாடி பதத்திற்கு தேவையான உப்பு போட்டு வதக்கினேன். வதங்கியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பிரட் ரவையை போட்டு ஒரு வதக்கு வதக்கி கீழே இருக்கிறேன். ஆஹா அருமையான பிரட் உப்புமா தயார் இதற்கு சைடு டிஷ் கூட வேண்டாம் பிரமாதமாக இருந்தது உடனே எனக்கு மத்தியமரில் எழுத வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் சாப்பிட்டு விட்டு எழுதலாம் என்று நினைத்தேன் சாப்பிட்டதும் உடனே எழுதி உள்ளேன் மிக நன்றாக இருக்கிறது ஐந்தே நிமிடம் டிபன் ரெடி ஆகிறது எனவே நீங்களும் செய்து அனுபவியுங்கள் செலவும் கம்மி பலனோ அதிகம்! என்ன நான் சொல்வது சரிதானே?
No comments:
Post a Comment