Saturday, August 12, 2023
சமையல் மிளகு குழம்பு மிளகு குழம்பு என்பது ஒரு பத்திய குழம்பு. இந்த உடம்பு சரி இல்லாதவர்களுக்கும் பிரசவித்தவர்களுக்கும் தரக்கூடியது இதைப் பற்றி எழுத சொல்லி கேட்டார்கள் எனவே அதைப்பற்றி எழுதுகிறேன் தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை ஒரு பிடி உப்பு தேவையான அளவுபுளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு சீரகம் ஒரு டீஸ்பூன்நல்லெண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு செய்முறை அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட வேண்டும் அதில் துவரம் பருப்பை போட்டு பொன் வருவலாக வறு த்துஎடுக்க வேண்டும். பின்பு மிளகு மிளகாய் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை பொன் வருவலாக வறுத்து எடுக்க வேண்டும் கருவேப்பிலையை ஈரம் போக வறுத்தெடுக்க வேண்டும் பின்புஅனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும் புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வாணலியை அடுப்பில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யை விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணியை விட வேண்டும் அது அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும் தேவையான உப்பை போட்டு அடுப்பை மெதுவாக வைத்து கொதிக்க விட வேண்டும் எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும் இது ஒரு பாட்டிலிலோ அல்லது ஒரு சம்படத்திலோ கொட்டி வைத்தால் நல்லது இது ஒரு வாரம் வரை வெளியே வைத்தால் கெடாது ஃப்ரிட்ஜில் ஒரு மாதம் கூட வைக்கலாம் சூடான சாதத்தில் தேவையான அளவு போட்டுக் கொண்டு ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும் உடலுக்கு நல்லது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment