Tuesday, October 10, 2023

ஆப்பிள் ஊறுகாய்நான் யுகே யில் இருக்கும் சமயத்தில் இங்கு கிடைக்கும் ஆப்பிள் வைத்து ஊறுகாய் பண்ணுவேன். அந்த ஊறுகாய் கிட்டத்தட்ட நம்ம ஊர் மாங்காய் ஊறுகாய் போல் இருக்கும். அது செய்யும் முறை பற்றி கூறுகிறேன்தேவையான பொருள்ஆப்பிள் 4எண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன்கடுகு ஒரு ஸ்பூன்பெருங்காயம் ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்காஷ்மீர் சில்லி பவுடர் நாலு டேபிள் ஸ்பூன்செய்முறைஆப்பிளை தோல் சீவி ய பிறகு நன்றாக துருவி கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு பெருங்காயத்தூள் போட்டு வெடிக்க விட்டவுடன் துருவிய ஆப்பிளை போட்டு கிளற வேண்டும் அத்துடன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் கிளற வேண்டும் அதன் பின் மிளகாய்த்தூள் போட்டு மீதமுள்ள எண்ணெய் விட்டு நன்றாக கிளற வேண்டும் எண்ணெய் மிதந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்பொழுது பரிமாறுவதற்கு தயார் நிலையில் ஆப்பிள் ஊறுகாய் நல்ல கலருடன் காட்சியளிக்கும். இந்த ஊறுகாயை நான் சென்னையிலும் செய்வேன் உடலுக்கும் மிக நல்லது

No comments:

Post a Comment