Monday, October 30, 2023

வெள்ளை குருமா
 சரவணபவன் வெள்ளை குருமா மிகவும் புகழ்பெற்றது. இது இட்லி சப்பாத்தி தோசை பரோட்டா ஆகியவற்றிற்கு  சைட்டிஷ்ஷாக ஆக பரிமாறப்படும். இதை செய்யும் விதத்தையும் இதற்கு தேவையான பொருட்களையும் பார்ப்போம்
 வதக்குவதற்கு தேவையான பொருட்கள்
 பச்சை மிளகாய் 4
 இஞ்சி ஒரு இன்ச்
 பூண்டு ஆறு பல்
 முந்திரி 15
 கசகசா ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
 தேங்காய் அரை மூடி துருவியது  
 ஸ்டெப் ஒன்
 முதலில் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவைகளை வதக்கி அத்துடன் கசகசா முந்திரியை லேசாக வருத்து தேங்காயையும் நிறம் மாறாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொட்டுகடலையுடன்மைய அரைத்து  வைக்க வேண்டும்
 ஸ்டெப் 2
 வெங்காயம்1
 காலிஃப்ளவர்
கேரட்
 பீன்ஸ்
 இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி  வைக்க வேண்டும் உருளைக்கிழங்கு இரண்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுத்தவும். பச்சை மிளகாய் இரண்டு கீறி வைக்கவும் ஸ்டெப் 3
 எண்ணெயில் பொறிக்க
 சோம்பு ஒரு ஸ்பூன்
 பிரியாணி இலை இரண்டு
 ஸ்டார் ஒன்னு
 மராட்டி மொக்கு ஒன்று
 கிராம்பு மூன்று
 பட்டை ஒரு துண்டு
  ஸ்டெப் 4

 எண்ணெயில் பொறிக்க வேண்டிய பொருட்களை பொரித்துவெங்காயத்தைஇலேசாகவதக்கி அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை நிறம் மாறாமல் லேசாக வதக்கி தண்ணீரில் கொதிக்க விடு காய்கள் வெந்ததும்  தக்காளி ஒன்றை
 நீலவாட்டில் நறுக்கி போடு, பின்பு அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும் இப்பொழுது குருமா கெட்டியாக ஆரம்பிக்கும்,
 அதில் ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சம் கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் இப்பொழுது வெள்ளை வெளேர் என்ற வெள்ளை குருமா கம கம மணத்துடன் ரெடி

No comments:

Post a Comment