Thursday, April 11, 2013

                         பிரண்டை     துவையல்


இது    ஒரு    சிறந்த    மருத்துவ    குணமுள்ள    துவையல் '

இது   முட்டி    வலிக்கு    சிறந்த   வலி நிவாரிணி .எலும்பின்

அடர்த்தியை   அதகரிக்க வும்   இணைப்பு திசுக்களை வளரவும்

உதவுகிறது .

பிரண்டை   துவையல்     செய்யும்   முறை ;-

ஒரு    சாண்    அளவு    பிரண்டையை    எடுத்து    நன்கு    கழுவி

சிறு   துண்டுகளாக   நறுக்கி   ஒரு ஸ்பூன்   நெய்விட்டு    வதக்க

வேண்டும் .அதை   தனியாக   எடுத்து வைக்கவேண்டும் .நான்கு ஸ்பூன்

உளுத்தம்  பருப்பு,   ஒரு விரல்  அளவு இஞ்சி,  இரண்டு   ஸ்பூன்   மிளகு 

ஒருஸ்பூன்    சீரகம் ,அரை ஸ்பூன்   பெருங்காய    தூள்   .கறிவேப்பிலை

ஒரு பிடி    ஆகியவற்றை இரண்டு    ஸ்பூன்   எண்ணெய்  விட்டு  சிவக்க


வறுக்கவேண்டும்   .பிரண்டையுடன்    மற்ற   பொருட்களுடன்   சிறிது

(நெல்லிக்காய்)   அளவு    புளி  தேவையான    அளவு   உப்பு    சேர்த்து

மிக்சியில்    அரைத்து    எடுக்க வேண்டும்   இதுவே   பிரண்டை    துவையல்

இதை   பிரிட்ஜில்   வைத்து   ஒரு வாரம் வரை   உபயோக  படுத்தலாம்

சாதத்தில் போட்டு   எண்ணெயுடன் பிசைந்து    தொடர்ந்து    சாப்பிட

வலியின்    தன்மை   குறைந்து    நிவாரணம் அடைவது   நிச்சயம்

இதனால்   பக்க   விளைவு   எதுவும்    ஏற்படாது

No comments:

Post a Comment