
கேல் என்ற கீரை இலை வகையை சேர்ந்தது .இதை
ஆங்கிலத்தில் super food என்பார்கள் இதை வாரம் ஒரு முறையாவது உட்கொள்வது நல்லது இதில் energy ,fibre ,protien ஆகியவை அதிகம் உள்ளது
இதை மசியல் செய்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்
தேவையான பொருள்
கேல் -------------------------------1pocket
ஜீரகம் -----------------------------1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -------------1ஸ்பூன
சிகப்பு மிளகாய் ----------------2
தேங்காய் துருவியது ====2ஸ்பூன்
வேகவைத்த பயத்தம் பருப்பு --1கரண்டி
கடுகு ------------------------------------1ஸ்பூன்
செய்முறை
கீரையை pan இல் வைத்து வேகவை
நன்கு ஆற வை
மிக்ஸியில் ஒரு நிமிடம் அரை
உளுத்தம் பருப்பு ஜீரகம் ஒருமிளகாய் இவற்றை ஒருவரு ஸ்பூன் எண்ணெய்
விட்டு பொன்னிறமாக வறுத்து தேங்காயுடன் மிக்ஸியில் அரை
வேகவைத்த பருப்பு அரைத்த கலவை அனைத்தையும் கீரையுடன் சேர்த்துசேர்த்துநன்குகொதிக்கவை
கீழே இறக்கி வைத்து கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் தாளித்து கொட்டு
இதைத் சாதம் சப்பாத்தி தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .