கேல் பருப்புஉசிலி
t
t
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு -----------------------------------------1கப்
கடலைப்பருப்பு --------------------------------------அரை கப்
கேல் -------------------------------------------------------300கிராம்
உடைத்தஉளுத்தம்பருப்பு -----------------------1டேபிள் ஸ்பூன்
கடுகு ---------------------------------------------------------1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ----------------------------------------5
எண்ணெய் ----------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
செய்முறை
கேல் கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீர் விட்டு அலசு
பிறகு பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வை பிறகு
கீரையை இட்லீ தட்டில் வேக வை பருப்புகளை வடிய வைத்து
மிக்ஸியில் மிளகாய் தேவையான உப்பு போட்டு அரை
அதை இட்லீ தட்டில் வேகவை . ஆறவிடு .ஆறியதும்
மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரை இப்பொழுது
உதிரி உதிரியாக இருக்கும் .வாணலியில் எண்ணெய் விட்டு
கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து
அதில் கேல் போட்டு ஒரு நிமிடம் வதக்கு பின் அரைத்த
பருப்பைபோட்டு கிளறு தேவை
யானால் இன்னும் கொஞ்சம்
எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கு உசிலி தயார்
இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் .இதற்க்கு
தொட்டுக்கொள்ள மோர்குழம்பு ,வத்தக்குழம்பு சரியான காம்பினேஷன்
இந்த receipy US இல் உள்ள விமலா மன்னி கூறியது .இதை நா ன்
செய்து பார்த்தேன் .பிரமாதமாக இருந்தது .எனவே நான் பெற்ற
இன்பம் அனைவரும் பெற இதை எழுதி உள்ளேன் .விமலா மன்னிக்கு என் நன்றி
No comments:
Post a Comment