சௌசௌ ராமேஸ்வரம் கூட்டுஇந்த கூட்டு நாங்கள் ராமேஸ்வரம் போனபொழுது அங்கு
சாப்பிட்டோம் .எனவே இதற்கு நாங்கள் இட்ட பெயர் இது .
செய்மூறைஎ
ஒரு சௌசௌ காயை தோல் சீவி சின்ன சின்னதாக நறுக்கி
ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் நல்ல பால் ஊற்றி
கொதிக்க விட வேண்டும் .காய் வெந்தது ம் தேவையான
உப்பு போடவேண்டும் .அரைகப் தேங்காய் துருவல் ,ஒருஸ்பூன்
சீரகம் ,இரண்டு பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில்
அரைத்து வெந்த காயில் கொட்டி கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன்
அரிசி மாவை கரைத்து விடவேண்டும் .அதன் பின் ஒரு ஸ்பூன்
எண்ணையில் கடுகு ,உடைத்த உளுத்தம்பருப்பு தாளித்து
கொட்டவேண்டும் .இப்பொழுது கூட்டு ரெடி .இதை பார்ப்பதற்கே
மிக ரம்மியமாக இருக்கும் ..
No comments:
Post a Comment