தற்பொழுது sugar அதாவது சர்க்கரை நோய் என்பது உலகில் உள்ள
அணைத்து தரப்பினருக்கும் உள்ளது .அதற்க்கு சிறந்த நிவாரிணி
பாகற்காய் .அதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நம்
உடலில் சர்க்கரை அதிகம் ஆகாமல் கட்டுப்பாட்டில் இருக்கும் .
பிட்லை செய்ய துவரம் பருப்பு கொண்டை கடலை அல்லது வேர்க்கடலை
சேர்ப்பதால் ப்ரோட்டீன் ஆகியவையும் நமக்கு தேவையான அளவு
கிடைக்கிறது .இதில் கசப்பு தெரியாமல் இருக்கநெல்லிக்காய் அளவு
வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்தும் தேங்காய் சேர்ப்பதால் பொட்டாசியம்
ஆகியவை நமக்கு கிடைக்கிறது ..இது செய்யும் முறையை கூறுகிறேன்
அனைவரும் செய்து பயனடையவும்
செய்முறை
தேவையான பொருட்கள்
1பாகற்காய் ------------------------------------------------கால்கிலோ
2புளி ----------------------------------------------------------எலுமிச்சை அளவு
3சாம்பார்பொடி --------------------------------------------இரண்டு டீஸ்பூன்
4வேகவைத்த துவரம் பருப்பு -----------------------இரண்டு கரண்டி
5வேகவைத்த கொண்டைக்கடலை
அல்லது
வேர்க்கடலை ============================200கிராம்
6பெருங்காயம் ==================-----------------கால்ஸ்பூன்
7வெல்லம் ================================நெல்லிக்காய் அளவு
8கடலைப்பருப்பு -----------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
9கொத்தமல்லி விதை ----------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
10சிகப்பு மிளகாய் ------------------------------------------------நான்கு
11வெந்தயம் =================================அரைஸ்பூன்
12எண்ணெய் =================================நான்கு டேபிள் ஸ்பூன்
13உப்பு =======================================தேவையான அளவு
14கறிவேப்பிலை ===============================இரண்டு கொத்து
15கடுகு ,உடைத்த உளுத்தம் பருப்பு ================தலா ஒரு ஸ்பூன்
16தேங்காய் துருவல் =============================இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு மிளகாய்ஆகியவற்றை சிறிது
எண்ணெய் விட்டுபொன்னிறமாக வறுத்து அதனுடன் தேங்காய் துருவல்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்
பாகற்காயில் இரண்டு கப் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்றவும்
அதில் மிளகாய்ப்பொடி ,பெருங்காயம் ,உப்பு போட்டு நான்றாக கொதிக்க
விடவும் .காய் நான்றாக வெந்ததும் வெந்த பருப்பு ,கடலை இரண்டையும்
போட்டு கொதிக்க விடவும் பிறகு அதில் மிக்ஸியில் அரைத்த பொடி
வெல்லம் போட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்க விடவும்
கெட்டியாக வரும் நேரம் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
கொட்டவும் ..பிட்டலை யை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
பிட்டலை தயார் .
க்கொட்டி
No comments:
Post a Comment