உருளை கிழங்கு ரோஸ்ட்இதன் பெயரை கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும் .ஆனால் இதை
செய்வது கடினம் என நினைத்து ஹோட்டல் சென்று சாப்பிட்டு
ஆசையை நிறைவேற்றி கொள்பவர்களே சுலபமாக சூப்பர்
ரோஸ்ட் செய்யும் முறையை கற்று கொள்ளுங்கள் .
செய்முறை
ஆறு உருளை கிழங்கை நன்றாக அலம்பி ஒவொன்றையும் இரண்டாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்கவும்.அது வெந்ததா என்பதை கூர்மையான முனையுள்ள
கத்தியை கொண்டு அதில் சொருகி பார்த்து எடுக்கவும் .தண்ணீரை வடிக்கவும்
ஆறியதும் அதன் தோலை உரித்து ஒரே அளவாக நறுக்கவும் .அதைஈரமில்லாத பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் சாம்பார்
தூள் ,இரண்டு ஸ்பூன் கடலை மாவு .தேவையான உப்பு ,இரண்டு டேபிள்
ஸ்பூன் கடலை எண்ணெய் அனைத்தையும் போட்டு கலக்கவும் .அப்பொழுது
உடையாமல் கலக்கவும் .அந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம்
ஊற விடவும் .பிறகு ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் .
விட்டு ஒரு ஸ்பூன் கடுகு ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
.அதில் ஊறி கொண்டு இருக்கும் உருளை கிழங்கை கொட்டி மிதமான
சூட்டில் வைத்து கிளறவும் .ரோஸ்ட் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து
இறக்கி பரிமாறவும் .இப்பொழுது மிக coulerful roast ready
பின் குறிப்பு
இதே போன்று சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யலாம்
No comments:
Post a Comment