அகத்தி கீரை உடல் சூட்டை குறைக்கும் .வயிற்று புண்ணை ஆற்றும் .குடல் புழுக்களை நீக்கும் .இது பொரியல் மட்டுமே செய்யமுடியும் .இந்த கீரையை
உருவி எடுத்து நன்கு தண்ணீர் விட்டு அலசி எடுக்கவேண்டும் .இதில் பழுப்பு
இலை இருந்தால் அதை எடுத்து விடவேண்டும் இல்லாவிட்டால் உடலுக்கு
ஒத்துக்கொள்ளாமல் loosemotion ஏற்படும் அபாயம் ஏற்படும் இந்த பொரியல்
செய்வது மிக சுலபம் ..
செய்முறை
இந்த கீரையை கத்தியால் நறுக்கவோ அரிவாள் மனையில் நறுக்கவோ கூடாது .அவ்வாறு செய்தால் கசப்பு தன்மை ஏற்படும் ..கையால் பிய்த்து
துண்டுகளாக்கவும் .வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
அதில் ஒருஸ்பூன் கடுகு ,இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டு காய்ந்த
மிளகாய் போட்டு தாளித்து அதில் கீரையை போட்டு கிளறி தேவையான
உப்புபோட்டு கிளற வேண்டும் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
சர்க்கரை போட்டு கிளறி இறக்க வேண்டும்
அவ்வளவு தான் பொரியல் ரெடி
No comments:
Post a Comment