காரட் அல்வாகாரட் பூமியின் கீழ் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது .இது மிகவும் சத்துள்ளது .இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .மிக சுலபமாக செய்ய
கூடிய இனிப்பு வகையை சேர்ந்த அல்வா செய்ய ஏற்றது .இது
மிகவும் ருசியுள்ளது .
தேவையான பொருட்கள்
காரட் துறுவியது --------------------------------------------------நான்கு கப்
பால் ----------------------------------------------------------------------நான்கு கப்
சர்க்கரை ---------------------------------------------------------------ஒரு கப்
நெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்பொடி -----------------------------------------------------ஒரு ஸ்பூன்
முந்திரி -------------------------------------------------------------------இருபது
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்
செய் முறை
காரட் துருவலில் பாலை ஊற்றி வேக வைக்க வேண்டும் .குக்கரில்
வேகவைப்பது சுலபம் .வெந்ததும் அதை ஒரு வாணலியில் கொட்டி
அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும் .கெட்டியாக வந்ததும்
ஏலக்காய்பொடி சேர்த்து கிளற வேண்டும் .நெய்யில் முந்திரியைபொன்னிறமாக வறுத்துஅத்துடன் திராஷையை போட்டு பொரித்து அல்வாவில் கொட்ட வேண்டும் .அல்வாவை நன்கு கிளறி எடுக்கவேண்டும்
அல்வா வின் கலரும் ருசியும் மிக பிரமாதம் ..
.
No comments:
Post a Comment