மார்கழி மாதம் சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம் அந்த நாளை ஆருத்ரா தரிசனம்
என்று கூறுவார்கள் களி செய்யும் முறையை பற்றி கூறுகிறேன்
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி ----------------------------------------------அரை கப்
பயத்தம் பருப்பு -------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
வெல்லம்------------------------------------------------------ஒரு கப்
தேங்காய் துருவல் ----------------------------------------அரைசுப்
ஏலப்பொடி ------------------------------------------------------ஒருஸ்பூன்
முந்திரிப்பருப்பு ------------------------------------------------இருபது (சிறு துண்டுகளா க்கு )
நெய் ------------------------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன் ,மீதம
செய்முறை
அரிசி ,பயத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுக்க வேண்டும் .ஆறியபின் மிக்ஸியில் ரவைப்பதத்திற்கு அரை க்கவேண்டும்
ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர்விட்டுரவையை போட்டு குக்கரில் இரண்டு விசில் வரஅடுப்பில் . வைக்கவேண்டும் வெல்லத்தைஒரு பாத்திரத்தில் போட்டுஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்வெல்லம் கரைந்ததும்
அதை வடிகட்டியலில் வடிகட்டவேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண்
இருக்கும் .,பிறகுவெந்த ரவையில் வெல்லப்பாகு தேங்காய் துருவலை
கொட்டி நன்றாக கிளற வேண்டும் ஏலக்காய் தூள் போடவும் .முந்திரியை
இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்துகளி யில் போடாவும் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும்
ஜனவரி பத்தாம் தேதி திருவாதிரை பண்டிகை வருவதால் அனைவரும்
களி செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்
.
;
விட வேண்டும் .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டியில்
வடிகட்ட வேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண் இருக்கும்
No comments:
Post a Comment