திடீர் புளியோதரைப்பொடி
புளி சாதம் என்னும் புளியோதரை யை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது
கஷ்டம் .ஆனால் இப்பொழுது இன்ஸ்டன்ட் பொடிகள் வந்து விட்டது .
கடையில் வாங்கும் பொடி வீணாகாமல் இருக்க சில ரசாயன பொருட்களை
சேர்க்கிறார்கள் .இது உடலுக்கு கெடுதியை விளைவிக்கும் .நாம் வீட்டிலேயே
அதை செய்யும் முறையை நான் இங்கு கூறுகிறேன் .இதை நீங்களும் செய்து
நல்ல புளியோதரையை செய்து அனைவரையும்மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள்
தேவையான பொருட்கள்
புளி ---------------------------------------------------------------------நூறு கிராம் அதாவது ஒரு சாத்துக்குடி அளவு
கடலைப்பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகு ----------------------------------------------------------------------ஒரு டீஸ் ஸ்பூன்
தனியா --------------------------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன்
மிளகாய் -------------------------------------------------------------------இருபது
பெருங்காயம் ------------------------------------------------------------ஒரு ஸ்பூன்
வெந்தயம் ------------------------------------------------------------------ஒருஸ்பூன்
வெல்லம் ---------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு பிடி
வேர்க்கடலை தோல் நீக்கியது --------------------------------------ஒரு கப்
நல்ல எண்ணெய் ------------------------------------------------------------அரைசுப்( அல்லது)தேவையான அளவு
கடுகு ---------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன்
செய்முறை
கடுகு ,வெல்லம் ,கறிவேப்பிலை ,வேர்க்கடலை எண்ணெய் தவிர மற்ற
பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நன்றாக
பொடியாக அரைத்து எடுக்கவும் கறிவேப்பிலையை தேவையான உப்புடன்
சேர்த்து வறுத்து எடுக்கவும் .உப்பில் நீர் இருக்கும் என்பதால் வறுக்க வேண்டும் .பின்பு வேர்க்கடலை வெல்லம் கறிவேப்பிலை உப்பு அத்துடன் கலந்து ஆறியதும்பாட்டலில்போட்டு வைக்கவும் ..இதுவே இன்ஸ்டன்ட்
புளியோதரை பொடி இது மாதக்கணக்கில் வீணாகாது
புளியம் சாதம் செய்யும் முறை
சாதம் செய்து ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து நல்ல எண்ணெய் ஊற்றி
அதில் தேவையான அளவு பொடி போட்டு கலக்க வேண்டும்
ஹையா
ரம்மியமான புளியோதரை ரெடி .
No comments:
Post a Comment