குழி பணியாரம்
தினமும் இட்லிதானா என சலித்து கொள்பவர்களுக்கு இதோ ஒரு அருமையான காலை டிபன் ரெடி .சுலபமாக அதே நேரம் வீட்டில் உள்ள
பொருளை கொண்டு பத்து நிமிடத்தில் டிபன் செய்து அசத்தலாம் .அதுதான்
குழி பணியாரம் .
தேவையான பொருட்கள்
இட்லிமாவு ---------------------------------------------------------------------------இரண்டு கப்
பெரியவெங்காயம் ----------------------------------------------------------------ஒன்று (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
காரட் -------------------------------------------------------------------------------------ஒன்று (துருவி கொள்ளவேண்டும் )
பச்சை மிளகாய் --------------------------------------------------------------------இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
தேங்காய் துருவல் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ----------------------------------------------------------------------ஒரு கொத்து
எண்ணெய் ------------------------------------------------------------------------------பொரிப்பதற்கு தேவையான அளவு
வறுத்து கொள்ள
கடலை பருப்பு -----------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு ---------------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ----------------------------------------------------------------------ஒரு ஸ்பூன்
முந்திரி (இருந்தால்)-----------------------------------------------------------------ஐந்து (பொடியாக உடைத்து கொள்ளவேண்டும் )
வறுத்து கொள்ள வேண்டிய பொருளை எண்ணெய் ஒருஸ்பூன் விட்டு
பொன்னிறமாக வறுத்து மாவில் கொட்டவேண்டும் .நறுக்கிய காய்களை மாவில்போட்டு உப்பு தேவையான அளவு போட்டு நன்கு கலக்க வேண்டும்
குழி பணியார வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவேண்டும்
எண்ணெய் காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் ஊற்ற வேண்டும் பொன்னிறமாக வந்ததும் திருப்பி விடவேண்டும் .பொன்னிறமாக
வந்ததும் எடுத்து வைக்கவும் .பார்ப்பதற்கு அழகான பணியாரம் ரெடி
அதற்கு தேங்காய் சட்னி தொட்டு கொண்டு சாப்பிட சூப்பர் காம்பினேஷன்
No comments:
Post a Comment