சர்க்கரை பொங்கல்
பொங்கல் திருநாள் வர உள்ளது .தமிழ் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடும்
பண்டிகை பொங்கல் திருநாள் .இதை தைமாதம் முதல் நாள் கொண்டாடுவோம் .இதை உழவர் திருநாள் என்பர் .உழவர்களின் அருமையை
உணர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது .அன்று சர்க்கரை
பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைத்தது பின் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு கொண்டாடுவார்கள் .அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை இது .அன்று செய்யும்
பொங்கலை எவ்வாறு மிக சுவையாக செய்வது என்பதை கூறுகிறேன்
நீங்களும் செய்து மகிழ்ச்சி யாக கொண்டாடுங்கள்
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி -----------------------------------------------------ஒரு கப்
பயத்தம் பருப்பு -------------------------------------------------கால் கப்
வெல்லம் -----------------------------------------------------------இரண்டு கப்
முந்திரி ---------------------------------------------------------------இருபத்தி ஐந்த( சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் )
ஏலக்காய் தூள் -------------------------------------------------------ஒருஸ்பூன்
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------ஒரு பிடி
நெய் --------------------------------------------------------------------------அரை கப்
பால் ----------------------------------------------------------------------------ஒரு கப்
செய்முறை
பயத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவேண்டும் பின் அரிசி
பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு ஒரு கப் பால் நான்கு கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும் வரை வைத்து இறக்க வேண்டும் .ஒரு வாணலியில்இரண்டு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி திராக்ஷை இரண்டையும்
பொரித்து எடுத்து வைக்கவேண்டும் .அந்த வாணலியில் வெல்லத்தை
போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சு வெல்லம் கரைந்ததும் அதை
வடிகட்டியில் வடிகட்டி திரும்ப வைத்து கெட்டியாக வரும்வரை கொதிக்க
விடவேண்டும் .ரொம்ப கெட்டியாக கூடாது .குக்கரை திறந்து சாதத்தை
நன்கு மசிக்க வேண்டும் .பிறகு வெல்ல பாகை அதில் கொட்டி நன்றாக
கிளறி அடுப்பை சிறியதாக வைத்து அதில் குக்கரை வைத்து ஏலக்காய்,
முந்திரி ,திராக்ஷை மீதமுள்ள நெய் ஆகியவற்றை கொட்டி கிளறி சிறிது
கெட்டி ஆனதும் இறக்கி வைக்கவும் .பொங்கல் தயார்
பொங்கலோ பொங்கல் என கூறி சூரியனுக்கு நைவேத்தியம் செய்து மிக
சிறப்பாக பொங்கலை கொண்டாடுங்கள்
,

No comments:
Post a Comment