Thursday, January 9, 2020

thiruvathirai kuzham

திருவாதிரை குழம்பு

இதற்கு முன் திருவாதிரை களி செய்வது கூறினேன்அதற்கு ஏற்றாற்போல்
கூட்டு எனப்படும் திருவாதிரை குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
அதற்கு ஏழு காய்கள் தேவை .கத்தரிக்காய் ,அவரைக்காய் ,உருளை கிழங்கு ,
சேப்பங்கிழங்கு .சேனைக்கிழங்கு ,மொச்சை ,வாழைக்காய்பூசணி காய் ,பரங்கி காய்   இவைகளை நன்றாக கழுவி ஒரே அளவில் நறுக்க வேண்டும் (இதில் கிடைக்கும் காய்களை )போடலாம் .அதில் எலுமிச்சை அளவு புளியை

கரைத்து காய் களை உப்பு போட்டு கொதிக்க வைக்கவேண்டும் .ஒரு
வாணலியில் ஒரு ஸ்பூன் தனியா ,இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு இருபது
மிளகாய் அரை கப் தேங்காய் துருவல் ஆகியவைகளை ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் .ஆறியபின்
மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும் ..குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பை வேகவைத்து தனியாக வைக்கவேண்டும் காய்கள் நன்றாக
வெந்ததும் பருப்பை நன்றாக மசித்து அதில் ஊற்றவேண்டும் .அரைத்து
வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்
அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடுகு இரண்டு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவேண்டும் .இரண்டு கொத்து கறிவேப்பிலை
போட்டு கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் இப்பொழுது
களிக்கு ஏற்ற சாம்பார் தயார் இனி என்ன ஆருத்ரா தரிசனம் நைவேத்தியம்
தயார் .அனைவரது சபாஷ் என்ற பாராட்டு உங்களுக்கு தான் .ஜமாயுங்கள் 

No comments:

Post a Comment