வேப்பம்பூ ரசம்
வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .இதுவயிற்று கோளாறு ,பித்தம் இவைகளுக்கு மிக நல்லது.இதில் ரசம் ஐ ந்து நிமிடத்தில்
வைக்கலாம் .இந்த ரசம் சாப்பிட மிக ருசியாகவும் இருக்கும் .உடலுக்கும் நல்லது
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ ------------------------------------------------------- அரை கப்
புளி -----------------------------------------------------------------ஒரு பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய் ------------------------------------------------------------நான்கு
கடுகு -----------------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
உப்பு -------------------------------------------------------------------தேவையான அளவு
பெருங்காயம் ------------------------------------------------------அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை -----------------------------------------------------இரண்டு கொத்து
எண்ணெய் ------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்
.
செய்முறை
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில்
விடவேண்டும் .தேவையான உப்பு போடவேண்டும் .பெருங்காயம் போடவேண்டும் .அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்
அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு ,மிளகாய் ,போட்டு வெடிக்கவிட்டு வேப்பம்பூ போட்டு வறுத்து (கருப்பாக ).கொட்டவேண்டும் பிறகு நன்றாக
இரண்டு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு ஒருகப் தண்ணீர் விட்டு
நுரைத்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்
இதை அப்படியே யும் குடிக்கலாம் .சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்
No comments:
Post a Comment