Monday, July 31, 2023

என்ன சியாமளா இரண்டு வாரமா ஒரு சமையல் குறிப்பும்எழுதவில்லையே ஏன் என்று கேட்டுக் கொண்டு மதியமரில் என் ஏன் ரெசிபியை விடாது பார்க்கும் நண்பர்கள் ஒருவர் கேட்டார் அத்துடன் விட்டாரா? மத்தியானம் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதற்கு முன் சாப்பிட ஒரு ஸ்னாக்ஸ் வேண்டும் அதை செய்பவர் கைநோகாமல் சாப்பிடுபவர் பல் நோகாமல் சுலபமாக ஜீரணமாக கூடிய என்று சொல்லிக் கொண்டே போனார் சார் சார் நிறுத்துங்கள் இந்த வாரம் ஒரு ஸ்னாக் கூறுகிறேன் அதை செய்து பார்த்து சாப்பிட்டு பார்த்து எனக்கு கமெண்ட் எழுதுங்கள் என்று கூறினேன் இதோ அந்த ஸ்நேக் செய்ய தேவையான பொருளும் செய்யும் முறையும் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி ஒரு கப் பொட்டுக்கடலை மாவு அரைக்கப் எள்ஒரு டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லதுகாய்ந்த எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் தேவையான உப்புபொரிப்பதற்குதேவையான எண்ணெய் செய்முறை புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்பொட்டுகடலையைமிக்சியில்மைய அரைக்கவேண்டுமதண்ணீரை வடிகட்டி அரிசியைஇட்லி மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்அதை ஒரு பவுலில் கொட்டி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு போட்டு பிசைய வேண்டும் நன்றாக பிசைந்ததும் அத்துடன் வெண்ணெய் எள், உப்பு பெருங்காயம்ஆகியவற்றை போட்டு தண்ணீர் விடாமல் பிசைய வேண்டும் தேவையானால்மட்டும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். ஒரு வாணலியில் முறுக்கு செய்வதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி காய வைக்க வேண்டும் முறுக்கு அச்சில் எண்ணெயை தடவி மாவை போட்டு எண்ணெய் காய்ந்ததும் பிழிய வேண்டும் முறுக்கு பொன்னிறமாக வரும்போது எடுத்து விட வேண்டும் கிட்டதட்ட 20 முறுக்குகளுக்கு மேல் வரும் இது பிழிவதும் ரொம்ப சுலபம். கடினம் இல்லாமல் இருப்பதால் பற்களுக்கும் இதமாக இருக்கும் இந்த முறுக்கு புழுங்கல் அரிசியில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஏனென்றால் புழுங்கல் அரிசியில் பலவிதமான விட்டமின் சத்துக்கள் உள்ளன இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் இருதயதசைகள் வலுவிழிப்பது மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எள்ளில்இரும்பு சத்து உள்ளது பொட்டுக்கடலையில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது சுலபமாக ஜீரண சக்தி உடையது இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த ஸ்னாக்ஸ் எனவே இதை செய்து ருசித்து பாருங்கள்

Monday, July 17, 2023

மோர் கீரை மொளைக்கீரே, அரைக்கீரே, பொன்னாங்கண்ணிக் கீரே என்ற கீரைகாரர்குரல்கேட்டதும் ஆஹா ஆறு மாதம் ஆயிற்று இந்த குரலை கேட்டு என்று வேகமாக வாசலுக்கு வந்தேன் கீரை இங்க வாப்பா என்று கூப்பிட்டேன். கீரை காரர் வண்டியை என்றதள்ளிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார். உன்ன காணோம்னு எதிர் வீட்டு அம்மா கிட்ட கேட்டேன் நீ லண்டன் போனதா சொன்னாங்க. நீ எப்ப ஊர்ல இருந்து வந்த என்று கேட்டுக் கொண்டே முளைக்கீரை எடுத்து எடுத்து கொடுத்தார். பச்சை பசேல் என்ற அந்த கீரை கட்டை ஒரு குழந்தையை தடவு போல் தடவிக் கொண்டு உள்ளே செல்ல திரும்பினேன் அப்பொழுது எதிர் flatவிமலா இன்னைக்கு என்ன கீரை மசியலா என்று கேட்டாள். இல்லைஇன்று மோர் கீரை பண்ணுவதாக இருக்கிறேன். இந்தியாவில் செய்து வருட கணக்காய் விட்டது என்று கூற அது என்ன மோர் கீரை என்று கேட்க நான் உடனே எங்கள் பிளாக்கில் எழுதுகிறேன் பாத்துக்கோ என்று கூறினேன் இதோ அதைப்பற்றி எழுதுகிறேன் நீங்களும் பாருங்கள்...,. மோர் கீரைசெய்வதற்க தேவையான பொருட்கள் முளைக்கீரை ஒரு கட்டு (அரைக்கீரை பாலக்கீரை எதுவானாலும் சரி) தேங்காய் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் சீரகம் ஒரு ஸ்பூன காய்ந்த மிளகாய் ரெண்டு கடுகு ஒரு டீஸ்பூன் தயிர் ஒரு கப் கடைந்தது அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எண்ணொய்ஒரு டீஸ்பூன் செய்முறை கீரையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும் அப்போது தேவையான உப்பு போட வேண்டும் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து அத்துடன் தயிர் அரிசி மாவு கலந்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் கீரையில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும் எண்ணெயில் கடுகு மிளகாய் வெடிக்க விட்டு அதில் கொட்ட வேண்டும் இப்பொழுது அபார ருசியுடன் மோர் கீரை தயார்

Sunday, July 16, 2023

சமையல்இன்ஸ்டன்ட் புளியோதரை பொடிஇன்று என்ன சமையல் என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டு விமலா வந்தாள்.இன்று புளியோதரை மோர் குழம்பு அப்பளம் பொரித்தேன் என்று என்று கூறினேன்என்ன விசேஷம் புளியோதரை எல்லாம் பலமா இருக்கு?அதுவா....,..என் பேத்தி யூஎஸ் போற இல்லையா அதற்கு தான் அவளுக்காக இன்ஸ்டண்ட் புளியோதரை பொடி பண்ணினேன். அது எப்படி இருக்கிறது என்று பார்க்க புளியஞ்சாதம் செய்தேன் அதற்கு சைட் டிஷ் மோர் குழம்பும் அப்பளமும்!!!இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியா அதான் கடையில இருக்கே.....அதுல கெமிக்கல் சேர்த்து இருப்பா உடம்புக்கு ஆகாது எனவே நானே பண்ணி விடுவேன்.சரி சரி அது எவ்வாறு செய்வது என்று எனக்கும் கூறு நானும் செய்யறேன் என்று கூற நான் அதைப்பற்றி கூறினேன். அது உங்களுக்கும் கூறுகிறேன்தேவையான பொருட்கள்புளி.,. ஒரு சாத்துக்குடி அளவுகடலைப்பருப்பு அரை கப்உளுத்தம் பருப்பு அஞ்சு டீஸ்பூன்வெந்தயம் ஒரு டீஸ்பூன்மிளகு ஒரு டீஸ்பூன்கொத்தமல்லி இரண்டு டீஸ்பூன்பெருங்காயம் ஒரு டீஸ்பூன்சீரகம் ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை மூணு கொத்துஎள் ஒரு டீஸ்பூன்இந்த பொருட்களை வாணலியில் தனித்தனியாக பொன் வறுவலாகவறுத்து ஒரு தட்டில் ஆற வைக்க வேண்டும்அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 10 மிளகாய் வறுக்க வேண்டும். அதை தட்டில் எடுத்து வைத்துவிட்டு அந்த எண்ணெயில் புளியை சிறு சிறு துண்டுகளாக செய்து அடுப்பை மெதுவாக வைத்து வறுக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்போது அதை அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைக்க வேண்டும் ஆறியதும் முதலில் மிளகாய் புளி இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும் பிறகு மற்ற வறுத்து வைத்துள்ள பொருட்களை இரண்டுஸ்பூன்மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்புடன் மைய அரைக்க வேண்டும் அத்துடன் வறுத்து தோல் உரித்த வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும்.. இப்பொழுது இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி ரெடி.அதை வைத்து எப்படி புளியசஞ்சாதம் சாதம் செய்வது என்று பார்ப்போம்ஒரு தட்டில் வடித்த (ஒரு ஆழாக்கு அரிசி) சாதத்தை போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஆற வைக்க வேண்டும் பின்பு ஒரு வானொலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் கடுகு நான்கு வர மிளகாய் (சாதத்திற்கு தகுந்தால் போல் காரம்) கருவேப்பிலை போட்டு தாளித்து அதை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும் பின்பு இரண்டு டேபிள் அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும். தேவையானால் உப்பு சேர்க்கலாம் இப்பொழுது கமகம என்ற கண்ணுக்கு ரம்யமான புளியோதரை ரெடி இதற்கு சைட் டிஷ் தயிர்பச்சடி,மோர் குழம்பு ,அவியல் மிக நன்றாக இருக்கும்.இந்த இன்ஸ்டன்ட் பொடியை பிரிட்ஜ்ஜில் மாத கணக்கில் வைத்து உபயோகிக்கலாம்