Sunday, July 16, 2023
சமையல்இன்ஸ்டன்ட் புளியோதரை பொடிஇன்று என்ன சமையல் என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டு விமலா வந்தாள்.இன்று புளியோதரை மோர் குழம்பு அப்பளம் பொரித்தேன் என்று என்று கூறினேன்என்ன விசேஷம் புளியோதரை எல்லாம் பலமா இருக்கு?அதுவா....,..என் பேத்தி யூஎஸ் போற இல்லையா அதற்கு தான் அவளுக்காக இன்ஸ்டண்ட் புளியோதரை பொடி பண்ணினேன். அது எப்படி இருக்கிறது என்று பார்க்க புளியஞ்சாதம் செய்தேன் அதற்கு சைட் டிஷ் மோர் குழம்பும் அப்பளமும்!!!இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியா அதான் கடையில இருக்கே.....அதுல கெமிக்கல் சேர்த்து இருப்பா உடம்புக்கு ஆகாது எனவே நானே பண்ணி விடுவேன்.சரி சரி அது எவ்வாறு செய்வது என்று எனக்கும் கூறு நானும் செய்யறேன் என்று கூற நான் அதைப்பற்றி கூறினேன். அது உங்களுக்கும் கூறுகிறேன்தேவையான பொருட்கள்புளி.,. ஒரு சாத்துக்குடி அளவுகடலைப்பருப்பு அரை கப்உளுத்தம் பருப்பு அஞ்சு டீஸ்பூன்வெந்தயம் ஒரு டீஸ்பூன்மிளகு ஒரு டீஸ்பூன்கொத்தமல்லி இரண்டு டீஸ்பூன்பெருங்காயம் ஒரு டீஸ்பூன்சீரகம் ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை மூணு கொத்துஎள் ஒரு டீஸ்பூன்இந்த பொருட்களை வாணலியில் தனித்தனியாக பொன் வறுவலாகவறுத்து ஒரு தட்டில் ஆற வைக்க வேண்டும்அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 10 மிளகாய் வறுக்க வேண்டும். அதை தட்டில் எடுத்து வைத்துவிட்டு அந்த எண்ணெயில் புளியை சிறு சிறு துண்டுகளாக செய்து அடுப்பை மெதுவாக வைத்து வறுக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்போது அதை அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைக்க வேண்டும் ஆறியதும் முதலில் மிளகாய் புளி இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும் பிறகு மற்ற வறுத்து வைத்துள்ள பொருட்களை இரண்டுஸ்பூன்மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்புடன் மைய அரைக்க வேண்டும் அத்துடன் வறுத்து தோல் உரித்த வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும்.. இப்பொழுது இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி ரெடி.அதை வைத்து எப்படி புளியசஞ்சாதம் சாதம் செய்வது என்று பார்ப்போம்ஒரு தட்டில் வடித்த (ஒரு ஆழாக்கு அரிசி) சாதத்தை போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஆற வைக்க வேண்டும் பின்பு ஒரு வானொலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் கடுகு நான்கு வர மிளகாய் (சாதத்திற்கு தகுந்தால் போல் காரம்) கருவேப்பிலை போட்டு தாளித்து அதை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும் பின்பு இரண்டு டேபிள் அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும். தேவையானால் உப்பு சேர்க்கலாம் இப்பொழுது கமகம என்ற கண்ணுக்கு ரம்யமான புளியோதரை ரெடி இதற்கு சைட் டிஷ் தயிர்பச்சடி,மோர் குழம்பு ,அவியல் மிக நன்றாக இருக்கும்.இந்த இன்ஸ்டன்ட் பொடியை பிரிட்ஜ்ஜில் மாத கணக்கில் வைத்து உபயோகிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment