Monday, July 17, 2023

மோர் கீரை மொளைக்கீரே, அரைக்கீரே, பொன்னாங்கண்ணிக் கீரே என்ற கீரைகாரர்குரல்கேட்டதும் ஆஹா ஆறு மாதம் ஆயிற்று இந்த குரலை கேட்டு என்று வேகமாக வாசலுக்கு வந்தேன் கீரை இங்க வாப்பா என்று கூப்பிட்டேன். கீரை காரர் வண்டியை என்றதள்ளிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார். உன்ன காணோம்னு எதிர் வீட்டு அம்மா கிட்ட கேட்டேன் நீ லண்டன் போனதா சொன்னாங்க. நீ எப்ப ஊர்ல இருந்து வந்த என்று கேட்டுக் கொண்டே முளைக்கீரை எடுத்து எடுத்து கொடுத்தார். பச்சை பசேல் என்ற அந்த கீரை கட்டை ஒரு குழந்தையை தடவு போல் தடவிக் கொண்டு உள்ளே செல்ல திரும்பினேன் அப்பொழுது எதிர் flatவிமலா இன்னைக்கு என்ன கீரை மசியலா என்று கேட்டாள். இல்லைஇன்று மோர் கீரை பண்ணுவதாக இருக்கிறேன். இந்தியாவில் செய்து வருட கணக்காய் விட்டது என்று கூற அது என்ன மோர் கீரை என்று கேட்க நான் உடனே எங்கள் பிளாக்கில் எழுதுகிறேன் பாத்துக்கோ என்று கூறினேன் இதோ அதைப்பற்றி எழுதுகிறேன் நீங்களும் பாருங்கள்...,. மோர் கீரைசெய்வதற்க தேவையான பொருட்கள் முளைக்கீரை ஒரு கட்டு (அரைக்கீரை பாலக்கீரை எதுவானாலும் சரி) தேங்காய் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் சீரகம் ஒரு ஸ்பூன காய்ந்த மிளகாய் ரெண்டு கடுகு ஒரு டீஸ்பூன் தயிர் ஒரு கப் கடைந்தது அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எண்ணொய்ஒரு டீஸ்பூன் செய்முறை கீரையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும் அப்போது தேவையான உப்பு போட வேண்டும் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து அத்துடன் தயிர் அரிசி மாவு கலந்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் கீரையில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும் எண்ணெயில் கடுகு மிளகாய் வெடிக்க விட்டு அதில் கொட்ட வேண்டும் இப்பொழுது அபார ருசியுடன் மோர் கீரை தயார்

No comments:

Post a Comment