Friday, January 3, 2020

chillipaneer

Image result for chillipaneeraசில்லி பன்னீர்
சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று .
ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர் ஆர்டர் செய்வார்கள் .வீட்டில் ஏதாவது விசேஷம்பிறந்தநாள் பார்ட்டி மற்றும் நியூயர்ஸ் பார்ட்டி ஆகியவற்றிற்கு விருந்துகளில் முதலிடம் வகிப்பது சில்லி பன்னீர் தான் இதை செய்வதில் என் மருமகள் expert .அவளிடம் இதை கற்றுக்கொண்டேன் இங்கிலாந்தில் இது இல்லாமல் ஒரு பார்ட்டியும் இல்லை ..இதை சுலபமாக வீட்டில் செய்யும் முறையை கூறுகிறேன் .நீங்களும் செய்து வீருந்தினர்களை அசத்துங்கள்

தேவையான பொருட்கள்

பன்னீர் --------------------------------------------------------- முன்னூறு கிராம்
cornflour ----------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் பச்சை,மஞ்சள் ,சிகப்பு -----------தலா ஒன்று ஆக மூன்று
பெரிய வெங்காயம் ----------------------------------------நான்கு
இஞ்சி -------------------------------------------------------------இரண்டு அங்குல நீளம்
பூண்டு --------------------------------------------------------------பத்து பல்
பச்சைமிளகாய் ---------------------------------------------------இரண்டு
எண்ணெய் -----------------------------------------------------------இரெண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கார்ன் flour மாவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து கொள்
பன்னீரை இரண்டு சென்டிமீட்டர் அளவு cube சதுரமாக நறுக்கு
கால் ஸ்பூன் மிளகு பொடி போடு
கார்ன் மாவு ,மிளகுப்பொடி சேர்த்து பன்னீர் துண்டுகளை பிசறி பத் து  நிமிடம்
ஊற வை
பின் எண்ணெய்யில் வறுத்து எடு
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக மசியஇடித்து  எடு
வெங்காயம் குடைமிளகாய் இவைகளை ஒரு சென்டிமீட்டர் நீள அகலம்
உள்ள துண்டுகளாக நறுக்கு
இஞ்சி ,பூண்டு மிளகாய் கலவையை எண்ணெய் விட்டு வதக்கு
அத்துடன் கறிகாய் துண்டுகளை போட்டு முக்கால் வேக்காட்டில் வதக்கி எடு
அதில் டொமட்டோ சாஸ் (tomatto sauce) , சில்லி சாஸ் (chilli sauce) ,சோயா சாஸ் (soya sauce) மூன்றும் தலா  ஒரு டேபிள் ஸ்பூன்
ஊற்றி கலந்து பின் வறுத்த பன் னீரைசேர் நன்றாக கலந்து வை
அத்துடன் கொத்தமல்லி தழையை தூவு
அழகான நிறத்துடன் சில்லி பன்னீர் ரெடி




No comments:

Post a Comment