Thursday, December 19, 2019

masala pasta


மசாலா பாஸ்டா

எல்லோரும் என்னை இருபது வருடங்களாக பாஸ்டா சாப்பிட வைக்க முயற்சித்தார்கள் .ஆனால் ஏனோ நான் சாப்பிட மறுத்தேன் .தீடீரென்று

மசாலா போட்டு பாஸ்டா செய்து பார்ப்போம் என களத்தில் இறங்கி
விட்டேன் .மேலே தட்டில் உள்ளது நான் செய்த மசாலா பாஸ்டா .என்ன
சூப்பராக இருக்கா பார்க்க ?சாப்பிட்டதும் எல்லோரும் ஆஹா ஓஹோ
என புகழ்ந்தார்கள் .என் மகன் உடனே போட்டோ எடுத்து அசத்திவிட்டான்
நீங்களும் செய்துதான் பாருங்களேன்

தேவையான பொருட்கள்
பாஸ்டா ------------------------------------------------------ஒரு கப்
காய்கள் ================================= வெங்காயம் ஒன்று ,ஒரு காரட் ,
பீன்ஸ் இருபது ,குடைமிளகாய் ஒன்று ,இஞ்சி இரண்டு அங்குலம் ,தக்காளி
பெரியது இரண்டு ,பூண்டு பாத்து பல் சீஸ் துருவியது ஒரு கப்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிவை
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் ,மசாலா பொடி ஒருஸ்பூன்

செய்முறை
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாககொதிக்க வை ,
அதில் பாஸ்டாவை போடுஒரு ஸ்பூன் எண்ணெய் விடு அப்பொழுதான் ஒன்றொடுஒன்று ஒட்டாது .அரைஸ்பூன் உப்பு போடு ,முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டியில் வடிகட்டு .அந்த தண்ணீரை கொட்டாமல் வை .
இஞ்சி ,பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து விழுதாக வை .தக்காளியைதண்ணீரில் வேகவைத்து தோலை உரித்து மிக்ஸியில்
அரைத்து கூழாக வை ..
ஒருவாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு
 விழுதைவதக்கு .அதில் முதலில் வெங்காத்தை பொன்னிறமாக வதக்கு
அதில் மற்ற காய்களை போட்டு வதக்கு .அதில் தக்காளி கூழை  கொட்டு
அதிலொரு ஸ்பூன் மிளகாய் தூள் போடு .ஒரு ஸ்பூன் மசாலா பொடி
போடி நன்றாக கிளறு பாஸ்டா வில் இருந்து வடிகட்டிய தண்ணீர் அரைசுப் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவை .உப்புஅளவாக போடு
பாஸ்டாவை அதிபோட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கி வை துருவிய சீஸ் போடு கொத்தமல்லி போட்டு அலங்கரி .
இப்பொழுது மசாலா வாசனையுடன் பாஸ்டா ரெடி .து செய்வதும் சுலபம்
உடலுக்கும் நல்லது .நீங்களும் செய்து பாருங்கள்ஸ்்




. ,

No comments:

Post a Comment