Wednesday, February 19, 2020
fried idli
ஃப்ரைட் இட்லி. இட்லி தட்டைஎடுத்து அதுல மாவு விட்டு குட்டி இட்லி பண்ணனும் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் இந்த குட்டி இட்லியை போட்டு நல்ல பொன்னிறமாக வறுத்து எடுக்கணும் உடனே சூடாக இருக்கும்போதே அந்த இட்லியை இட்லி மிளகாய்பொடியில்நன்றாக பிரட்டி எடுத்து வைக்கணும் இந்த இட்லி மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவை இல்லை மிகவும் ருசியுடன் கரகரப்பாக காரமாக இருக்கும் இதை நீங்களும் செய்து பாருங்கள்.
finger idli
ஆறின இட்லிய ஒரு தட்டுல வெச்சி பென்சில் மாதிரியே நீளவாக்கில் கட் பண்ணனும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.
இதுக்கு பிரைட் பி ஃபிங்கர் இட்லி என்று பெயர்.
டொமேடோ கெட்சப் இதற்கு சரியான சைட் டிஷ்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்களும் செய்து குழந்தைகளை சந்தோஷப்படுங்கள்.
Sunday, February 16, 2020
syamalas Arusuvai virunthu: orumavu pala tiffin
syamalas Arusuvai virunthu: orumavu pala tiffin: ஒரு மாவு பல டிபன் இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள...
orumavu pala tiffin
ஒரு மாவு பல டிபன்
இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள் வரை இது சிறந்த உணவாக கருதப்படுகிறது .இதை செய்யும் முறையும் அதிலிருந்து வெவேறு ருசியுடன் செய்யும் வேறு பல பலகவகைகளையும் இன்று பார்ப்போம்
இட்லி செய்யும் முறை
இட்லி செய்ய புழுங்கல் அரிசி யும் குண்டு உளுத்தம் பருப்பும் தேவை .நான்கு கப் அரிசியும் ஒரு கப் வெள்ளை உளுத்தம் பருப்பும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தியமும் தேவை .அரிசியநான்கு மணி நேரம் நன்கு களைந்து ஊற வைக்க வேண்டும் உளுந்தையம் வெந்தியதையும் இரண்டு மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் தனித்தனியாக அரைக்கவேண்டும் .வெந்தியதை உளுந்துடன் சேர்த்து அரைக்கவேண்டும் .அரைத்த உளுந்த மாவை ஒரு கரண்டி எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்கவேண்டும் அதுதான் சரியான பதம் பிறகு அரிசிமாவுடன் உளுந்த மாவை சேர்த்து தேவையான உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும் .இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவைஊற்ற வேண்டும் .மாவு கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கவேண்டும் அப்பொழுது தான் இட்லீ பூப்போன்று இருக்கும் .நன்றாக வெந்ததும் ஸ்பூனால் ஈடுத்து பறிமாற வேண்டும் ,சட்னி ,சாம்பார் ,மிளகாய்ப்பொடிசரியான காம்பினேஷன் .

இதே மாவை கொண்டு வேறு பல டடிபன் செய்யும் முறையை இனி
பார்ப்போம்
Saturday, February 8, 2020
syamalas Arusuvai virunthu: aviyal
syamalas Arusuvai virunthu: aviyal: அவியல் அதை கல்யாண சாப்பாடு என்றாலே அவியல் தான் முதலிடம் பெரும் .இலையில் அதை பரிமாறினால் தான் சாப்பாடே சிறப்புறும் .அதை செய்ய தேவையான...
aviyal
அவியல்
அதை கல்யாண சாப்பாடு என்றாலே அவியல் தான் முதலிடம் பெரும் .இலையில் அதை பரிமாறினால் தான் சாப்பாடே சிறப்புறும் .அதை செய்ய
தேவையான பொருளையும் செய்யும் விதத்தையும் பார்ப்போம்
தேவையான காய்கள்
வெள்ளை பூசணிக்காய் --------------------------------------------அரைகிலோ
சேனைக்கிழங்கு --------------------------------------------------------கால் கிலோ
புடலங்காய் -----------------------------------------------------------------அரைகிலோ
உருளை கிழங்கு -----------------------------------------------------------கால் கிலோ
சௌசௌ -----------------------------------------------------------------------கால் கிலோ
வாழைக்காய் ------------------------------------------------------------------இரண்டு
கொத்தவரங்காய் -------------------------------------------------------------நூறு கிராம்
பச்சைமிளகாய் -----------------------------------------------------------------நூறு கிராம்
கறிவேப்பிலை ------------------------------------------------------------------ஒரு பிடி
முருங்கைக்காய் ---------------------------------------------------------------இரண்டு
தேவையான பொருட்கள்
தேங்காய் ---------------------------------------------------------------------------------ஒன்று
சீரகம் ------------------------------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் ----------------------------------------------------------------------------------------------நான்கு கப்
செய்முறை
காய்களை ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
காய்களை கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும் தேவையான உப்பு போடவும் .தேங்காய் ,ஜீரகம் ,பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில்
நன்றாகமைய அரைக்க வேண்டும் .அதை வெந்த காயில் கொட்டி நன்றாக கிளறி விடவேண்டும் மசிக்க கூடாது .கீழே இறக்கி வைத்து தேங்காய் எண்ணையை பச்சையாக ஊற்றவேண்டும் .கொஞ்சம் ஆறியதும் தயிரை
கடைந்து ஊற்றவேண்டும் தயிர் கெட்டியாக இருக்கவேண்டும்கறிவேப்பிலையை போடவும் .இலேசாக கிளறி விடவேண்டும்
கம கம அவியல் தயார் .இலையிலஅதை பரிமாறினால் அதன் அழகே தனிதான் .
Friday, February 7, 2020
syamalas Arusuvai virunthu: adai
syamalas Arusuvai virunthu: adai: அடை அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது ...
adai
அடை
அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது .மேலும் இதன் ருசியோ ஆகா ............ இதை ஹோட்டலில் போடும் அன்று கூட்டம் அலைமோதும் .அப்படிப்பட்ட டிபன் நாமே செய்தால் அதன் சுகமே தனி .இது செய்வது மிக மிக சுலபம் .நீங்களும் செய்து அசத்துங்கள் பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு -----------------------------------------------ஒருகப்
துவரம் பருப்பு -------------------------------------------------அரைசுப்
பச்சரிசி ------------------------------------------------------------அரைசுப்
உளுத்தம் பருப்பு -----------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -----------------------------------------------ஐந்து
பெருங்காயம் ----------------------------------------------------கால் ஸ்பூன்
தேங்காய் --------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் (சிறு சிறு பல்லாக நறுக்கி கொள்ள வேண்டும் )
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு கொத்து
கொத்தமல்லி -----------------------------------------------------------------ஒரு பிடி நறுக்கியது
தேவையான உப்பு
அடை வார்க்க எண்ணெய்
பருப்புகள் அரிசி இவற்றை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து
பின் தண்ணீரை வடித்து மிளகாய் உப்பு சேர்த்து கர கர என மிக்ஸியில்
அரைத்து எடுக்க வேண்டும் .பின் கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,தேங்காய்
சேர்த்து நன்கு கலக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லிமாவு
பதத்தில் இருக்க வேண்டும் .அடுப்பில் தோசை கல்லை போட்டு நன்கு காய்ந்ததும் எண்ணெய் தடவிய பின் அடை மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பவேண்டும் .அதில் நடுவில் சிறிய ஓட்டை போட்டு அதில்
எண்ணெய் ஊற்ற வேண்டும் சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும் அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும் .ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்தது ம் மறு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாகி வந்ததும் எடுத்து பறிமாற வேண்டும்
இதற்க்கு சைடு டிஷ் வெண்ணை ,வெல்லம் அவியல் ஆகியவை
போட்டு சாப்பிட ஹோட்டல் அடையை விட உங்கள் அடை தான் சூப்பர்

Subscribe to:
Comments (Atom)