Friday, December 9, 2022
டீ மசாலா பொடி தேவையான பொருட்கள் பட்டை பத்து கிராம் ஏலம் 10 கிராம் கிராம்பு ரெண்டு கிராம் மிளகு அஞ்சு கிராம் சோம்பு அஞ்சு கிராம் ஜாதிக்காய் ஒரு சின்ன துண்டு செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து சல்லடையில் சலித்து நன்கு காற்று புகாத பாட்டலில் போட்டு வைத்து டீ போடும்போது போட்டு கொதிக்க வைக்க வேண்டும் இந்த மசாலா டீ சுவைப்பதற்கும் நறுமணத்திற்கும் சிறந்தது
பருப்பு பொடி துவரம் பருப்பு ஒரு கப் பயத்தம் பருப்பு ஒரு கப் பொட்டுக்கடலை ஒரு கப் பெருங்காயம் ஒரு ஸ்பூன் மிளகு ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் 2 ( காரம் தேவையானால்) செய்முறை அனைத்தையும் பொன் வருவலாக வறுத்து ஆறிய தும்மிக்ஸியில் மைய அரைத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும் இதை சூடான சாதத்தில் போட்டுநெய்விட்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்
மசாலா பொடி தேவையான பொருட்கள் கிராம்பு ஒன்றை ஸ்பூன் ஏலக்காய் 10 பட்டை 20 கிராம் சோம்பு 25 கிராம் கசகசா 10 கிராம் ரோஜா மொட்டு பத்து கிராம் மிளகாய் 10 செய்முறை மேலே உள்ள பொருட்களை வானொலியில் வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து ஆறிய தும்மிக்ஸியில் போட்டு அரைத்து சலடையில் சலித்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும் இதை பொரியல் கூட்டு குருமா பிரியாணி ஆகியவற்றுக்கு போடலாம்
Subscribe to:
Comments (Atom)