இது ஒரு சுலபமான மிக ருசியான ரசம் .இதை சாதத்தில் பிசைந்தும்
சாப்பிடலாம் ,குடிக்கவும் செய்யலாம் .நாவுக்கு மிகவும் ருசியாக
இருக்கும் .
தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம் --------------------------------------ஒன்று (நல்ல சாருவுள்ளது)
தக்காளி பழம் ------------------------------------------ஒன்று
கொத்தமல்லி விதை --------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ----------------------------------------ஒருஸ்பூன்
ஜீரகம் --------------------------------------------------------ஒரு ஸ்பூன்
மிளகு --------------------------------------------------------ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் --------------------------------------இரண்டு
பெருங்காயம் ------------------------------------------கால் ஸ்பூன்
உப்பு ---------------------------------------------------------தேவையான அளவு
கொத்தமல்லி தழை -----------------------------------பொடியாக நறுக்கியது ஒரு பிடி
கடுகு -------------------------------------------------------அரை ஸ்பூன்
கொத்தமல்லி விதை ,கடலை பருப்பு , ஜீரகம் ,மிளகு இவற்றை மிக்ஸியில்
போட்டு அரை
ஒருபாத்திரத்தில் நான்கு கப்தண்ணீர் விட்டு அதில் தக்காளியை பொடியாக
நறுக்கி போட்டு அத்துடன் பச்சை மிளகாய் ,பெருங்காயம் ,உப்பு ஆகியவற்றை போட்டுநன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்பு
மிக்ஸியில் அரைத்த பொடியை போட்டு இரண்டு கொதி வந்ததும் ஒரு கப்
தண்ணீர் விட்டு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழையை போட்டு இறக்கி வை
கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சப்பழத்தின் சாற்றை பிழிந்து கொ ட்டையை
எடுத்து விட்டு சாற்றை ரசத்தில் ஊற்று ..கடுகை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டு ..ரசம் ரெடி
சூடாக இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றை ஊற்றினால் ரசம் கசக்கும் .ஆகையால் ஆரியபின்பு தான் சாற்றை ஊற்ற வேண்டும்
No comments:
Post a Comment