வாங்கி பாத் &மோர்க்குழம்புவாங்கி பாத் என்பது மிகவும் ருசியான அதே சமயம் சுலபமான கலப்பு சாதம் இது இக்கால குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாதம் .இது என் அனுபவத்தில்
கண்டது .அதற்கு சைடு டிஷ் ஆக மோர் குழம்பும் இருந்தால் சூப்பரோ சூப்பர் ஆஹா
வாங்கி பாத் ற்கு தேவையான பொருட்கள்
நல்ல கத்திரிக்காய் ----------------கால்கிலோ
அரிசி ------------------------------------இரண்டு கப்
கொத்தமல்லி விதை -------------ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு ----------------------ஒரு டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் ---------------------ஐந்து
கடுகு -------------------------------------ஒரு ஸ்பூன்
பெருங்காய தூள் -------------------கால்ஸ்பூன்
வேர்க்கடலை ------------------------அரை கப்
மஞ்சள் தூள் ---------------------------அரைஸ்பூன்
கறிவேப்பிலை ------------------------ஒரு கொத்த
எண்ணெய் ------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு ---------------------------------------தேவையான அளவு
செய்முறை
பொடியாக்கவதற்கு : கொத்தமல்லி விதை ,கடலைப்பருப்பு மிளகாய் ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்துபின்
ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக்கு
கத்தரிக்காயைபொடியாக நறுக்கிவை
இரண்டு கப் அரிசியைகுக்கரில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சாதம் பண்ணு (சாதம் உதிரியாக இருக்க எண்ணெய்
சேர்க்கிறோம் )
சாதம் ஆனதும் அதை ஆறவைக்கவேண்டும்
நறுக்கிய கத்திரிக்காயை எண்ணெயில் கடுகு வெடித்ததும் போட்டு
மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள்வேர்க்கடலை போட்டு நன்கு வதக்கு
மிக்ஸியில் அரைத்த பொடியை அதில் போட்டு நன்கு வதக்கு மீதமுள்ள
எண்ணெயை சேர் .தேவையான உப்பு ,கறிவேப்பிலை சேர் .
ஆறிய சாதத்தில் வதக்கிய கத்திரிக்காயை போட்டு கிளறு
.இப்பொழுது வாங்கி பாத் கம கம மணத்துடன் தயார்
இதற்கு தொட்டு கொள்ள மோர்க்குழம்பு தயார் செய்வதை பார்ப்போம்
மோர் குழம்பிற்கு போடவெண்டைக்காய் எடுத்து கொள்வோம்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்_---------20
தயிர்-------------------------------2கப்
பச்சைமிளகாய்-------------4
சீரகம்-----------------------------1டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல்---------2டேபிள்ஸ்பூன்
கடலைமாவு--------------1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு------------------1டேபிள்ஸ்பூன்
கடுகு---------------------------_1ஸ்பூன்
கறிவேப்பிலை--------_----1கொத்து
உப்பு---------------------_--தேவையான அளவு
எண்ணெய்-_-------------1டேபிள்ஸ்பூன்
செய் முறை
தேங்காய் துருவல் பச்சை மிளகாய்
சீரகம் மிக்ஸியில்அரைத்து வை
வெண்டைகாயைஒருஅங்குலநீளத்திற்குநறுக்கிவை அதைஎண்ணெய்விட்டுஉப்புபோட்டுவதக்கு
அரைத்துவைத்துள்ளவிழுதைதயிரில்கலந்துவதக்கியவெண்டைகாயில்ஊற்றுகடலைமாவுஅரிசிமாவுஇரண்டடையும்கரைத்துதயிர்கலவையில்
ஊற்றிஅடுப்பில்வைநுரைத்துபொங்கிவரும்பொழுதுகறிவேப்பிலை
போட்டுகடுகுதாளிக்கவேண்டும்
கொதிக்கவிடகூடாதுஇனிபறிமாறவேண்டியதுதான்மோர்குழம்பு
ரெடி
No comments:
Post a Comment