Wednesday, December 4, 2019

vengaya poondu vatha kuzhmbu

Image result for onionவெங்காயம் &  பூண்டு  வத்த குழம்பு


வெங்காயம் கிடைக்காத இந்த நேரத்தில் வத்த குழம்பா ? என்ன தில் இருந்தா
எழுதலாம் ?என கேட்பது காதில் விழுகிறது ..ஆனால் நான்தான் இந்தியாவில்
இல்லையே .நான் uk அல்லவோ இருக்கிறேன் .இங்கு ஐந்து கிலோ பையில்
வெங்காயம் வாங்குகிறோம் .அது சரி இப்போ குழம்பு செய்வதை பார்ப்போம் .
செய்முறை
நான்கு வெங்காயம் இருபது பூண்டு அதாவது இருபது பூண்டு பல் எடுத்து கொள்ளவேண்டும் .வெங்காயம் நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பூண்டையும் நறுக்கி கொள்ளவேண்டும் .வாணலியில்
கூடிய வரை நல்லஎண்ணெய் அல்லதுசன் பிளார் எண்ணெய் நான்கு டேபிள்
ஸ்பூன் ஊற்றி அதில் கால் ஸ்பூன் கடுகு .ஒரு ஸ்பூன் வெந்தயம் .நான்கு
காய்ந்த மிளகாய்,ஒருடேபிள்  ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு கடுகு
வெடித்ததும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் போட்டு வதக்கவும் .
,கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்க்கவும் ஒரு பெரிய எலுமிச்சை அளவு
புளியைநான்கு கப் தண்ணீரில்  .நன்றாக கரைத்துவதக்கிய வெங்காய,பூண்டு கலவை யில் ஊற்றவேண்டும் .இரண்டு ஸ்பூன்சாம்பார் மிளகாய் பொடி  
போடவேண்டும் 

தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும் .மிளகாய் பொடி
பச்சை வாசனை போனதும் தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் போட்டு
தண்ணீர் விட்டு நன்றாக கசக்கி பால் எடுத்து   குழம்பில் ஊற்றவேண்டும் .
நன்றாக கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி கொதிக்க
விடவேண்டும் .எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பில் இருந்து
இறக்கி வைக்கவேண்டும் ..
இப்போ வத்த குழம்பின் வாசனை ஊரையே தூக்கும்
.பரிமாற ரெடி 

No comments:

Post a Comment