Thursday, December 19, 2019

masala pasta


மசாலா பாஸ்டா

எல்லோரும் என்னை இருபது வருடங்களாக பாஸ்டா சாப்பிட வைக்க முயற்சித்தார்கள் .ஆனால் ஏனோ நான் சாப்பிட மறுத்தேன் .தீடீரென்று

மசாலா போட்டு பாஸ்டா செய்து பார்ப்போம் என களத்தில் இறங்கி
விட்டேன் .மேலே தட்டில் உள்ளது நான் செய்த மசாலா பாஸ்டா .என்ன
சூப்பராக இருக்கா பார்க்க ?சாப்பிட்டதும் எல்லோரும் ஆஹா ஓஹோ
என புகழ்ந்தார்கள் .என் மகன் உடனே போட்டோ எடுத்து அசத்திவிட்டான்
நீங்களும் செய்துதான் பாருங்களேன்

தேவையான பொருட்கள்
பாஸ்டா ------------------------------------------------------ஒரு கப்
காய்கள் ================================= வெங்காயம் ஒன்று ,ஒரு காரட் ,
பீன்ஸ் இருபது ,குடைமிளகாய் ஒன்று ,இஞ்சி இரண்டு அங்குலம் ,தக்காளி
பெரியது இரண்டு ,பூண்டு பாத்து பல் சீஸ் துருவியது ஒரு கப்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிவை
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் ,மசாலா பொடி ஒருஸ்பூன்

செய்முறை
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாககொதிக்க வை ,
அதில் பாஸ்டாவை போடுஒரு ஸ்பூன் எண்ணெய் விடு அப்பொழுதான் ஒன்றொடுஒன்று ஒட்டாது .அரைஸ்பூன் உப்பு போடு ,முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டியில் வடிகட்டு .அந்த தண்ணீரை கொட்டாமல் வை .
இஞ்சி ,பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து விழுதாக வை .தக்காளியைதண்ணீரில் வேகவைத்து தோலை உரித்து மிக்ஸியில்
அரைத்து கூழாக வை ..
ஒருவாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு
 விழுதைவதக்கு .அதில் முதலில் வெங்காத்தை பொன்னிறமாக வதக்கு
அதில் மற்ற காய்களை போட்டு வதக்கு .அதில் தக்காளி கூழை  கொட்டு
அதிலொரு ஸ்பூன் மிளகாய் தூள் போடு .ஒரு ஸ்பூன் மசாலா பொடி
போடி நன்றாக கிளறு பாஸ்டா வில் இருந்து வடிகட்டிய தண்ணீர் அரைசுப் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவை .உப்புஅளவாக போடு
பாஸ்டாவை அதிபோட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கி வை துருவிய சீஸ் போடு கொத்தமல்லி போட்டு அலங்கரி .
இப்பொழுது மசாலா வாசனையுடன் பாஸ்டா ரெடி .து செய்வதும் சுலபம்
உடலுக்கும் நல்லது .நீங்களும் செய்து பாருங்கள்ஸ்்




. ,

Tuesday, December 17, 2019

syamalas Arusuvai virunthu: masal vadai

syamalas Arusuvai virunthu: masal vadai: மசால் வடை மசால் வடை எலிகளை பிடிக்க எலிப்பொறியில் வைப்பார்கள் .அந்த வாசனைக்கு எலி எங்கிருந்தாலும் ஓடி வந்து வடையை தின்ன எலிப்பொறியின் உள்ள...

masal vadai

மசால் வடை

மசால் வடை எலிகளை பிடிக்க எலிப்பொறியில் வைப்பார்கள் .அந்த வாசனைக்கு எலி எங்கிருந்தாலும் ஓடி வந்து வடையை தின்ன எலிப்பொறியின் உள்ளே வந்து மாட்டிக்கொள்ளும் .அப்படிப்பட்ட வடைக்கு
முன் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் ?அந்த வடை செய்யும் முறையை
பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -------------------------------------------ஒருகப்
துவரம்பருப்பு -----------------------------------------------கால் கப்
எண்ணெய் ----------------------------------------------------கால் லிட்டர்
பெரிய வெங்காயம் ---------------------------------------ஒன்று
பச்சைமிளகாய் ----------------------------------------------இரண்டு
கறிவேப்பிலை -----------------------------------------------ஒரு கொத்து
 கொத்தமல்லி --------------------------------------------------ஒரு பிடி
சோம்பு ===================================ஒரு டீஸ்பூன்

செய்முறை

பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் உறவைக்கவேண்டும்
வெங்காயம் ,பச்சைமிளகாய் இரண்டையும்போடியாக நறுக்கி வைத்து
கொள்ளவேண்டும .பருப்பை நன்றாக வடிய வைத்து மிக்ஸியில் நறநற
என்று இருக்குமாறு அரைத்து எடு க்கவேண்டும் .அத்துடன் நறுக்கிய
வெங்காயம் ,பச்சைமிளகாய் சோம்பு  ,கறிவேப்பிலை,கொத்தமல்லி
தேவையான உப்பு போட்டு கலக்கவேண்டும்வாணலியில்எண்ணெய் ஊற்றி
அடுப்பில் வைக்கவேண்டும் .  .மாவை நெல்லிக்காய் அளவு இலை அல்லது
aluminiumfoil வட்டமாக தட்டி எண்ணெய் கா ய் ந்ததும் போட்டு பொன்னிறமாக
வந்ததும் ஜல்லி கரண்டியால் எடுத்து எண்ணெய் வடியும் படி பாத்திரத்தில்
வைக்க வேண்டும் .இதற்கு தேங்காய் சட்டினி அல்லது சாம்பாருடன்
சாப்பிட சூப்பரோ சூப்பர் 
பின்குறிப்பு
வெங்காயம் சோம்பு போடாமல் செய்வது ஆமை வடை என்பார்கள்
இதை சமாராதனை ,கல்யாணம் போன்றவற்றில் செய்வார்கள் .

Monday, December 16, 2019

syamalas Arusuvai virunthu: vegetablecuruma

syamalas Arusuvai virunthu: vegetablecuruma: விஜி டேபிள்   குருமா விஜி டேபிள் குருமாசப்பாத்தி .பூரி ஆகிய வற்றிற்கு   ஒரு ஸ்பெஷல் டிஷ் இதை சமைக்கும் பொழுதே வாசனை ஊரையே தூக்கும் .அது ...

vegetablecuruma

விஜி டேபிள்   குருமா

விஜி டேபிள் குருமாசப்பாத்தி .பூரி ஆகிய வற்றிற்கு   ஒரு ஸ்பெஷல் டிஷ்
இதை சமைக்கும் பொழுதே வாசனை ஊரையே தூக்கும் .அது சுலபமாக செய்யும் முறையை விளக்குகிறேன் .
தேவையான காய்கள்( ஆறுநபர்களுக்கு
பெரிய வெங்காயம் ,------------------------ஆறு
பீன்ஸ் --------------------------------------------நூறு கிராம்
காரட் -----------------------------------------------மூன்று
பச்சை பட்டாணி ---------------------------------நூறு கிராம்
சௌசௌ --------------------------------------------ஒன்று
இஞ்சி ----------------------------------------------------இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் ------------------------------------------ஐந்து
கொத்தமல்லித்தழை ----------------------------------ஒரு பிடி
உருளைக்கிழங்கு --------------------------இருநூறு கிராம்

அரைப்பதற்கு

ஏலம் -----------------------------------------------------------நான்கு
கிராம்பு ------------------------------------------------------ஒரு ஸ்பூன்
பட்டை -----------------------------------------------------ஒரு அங்குலம்
சோம்பு ------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
bayleaf ----இலை -------------------------------------------இரண்டு
கசகசா --------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் --------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சி ,பச்சைமிளகாய் மற்றும் ,அரைப்பதற்கு உள்ளபொருட்களை
 மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவேண்டும்
 ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு அரைத்த விழுதை வதக்கவேண்டும்
அதில் காய் துண்டுகளைஇரண்டு நிமிடம்   உப்பு சேர்த்துவதக்க வேண்டும்
அதில் ஆறு கப் தண்ணீர் விடவேண்டும் .நன்றாக கொதித்து காய்கள் நன்றாக
வெந்ததும் உருளைகிழங்கைமசித்து போட்டு   பொட்டுக்கடலை மாவை கரைத்து விட்டுசிறிது நேரம்  நன்றாக கொதிக்க
விடவேண்டும் .பின்பு இறக்கி வைத்து கொத்தமல்லி தழையை பொடியாக
நறுக்கி அதில் போடவேண்டும்.இப்பொழுது ஹோட்டலை மிஞ்சும் குருமா
தயார் .





Thursday, December 12, 2019

syamalas Arusuvai virunthu: elumichampazha rasam

syamalas Arusuvai virunthu: elumichampazha rasam: எலுமிச்சபழம் ரசம்  இது ஒரு சுலபமான மிக ருசியான ரசம் .இதை சாதத்தில் பிசைந்தும்  சாப்பிடலாம் ,குடிக்கவும் செய்யலாம் .நாவுக்கு மிகவும் ருசி...

elumichampazha rasam

Image result for lemonஎலுமிச்சபழம் ரசம் 
இது ஒரு சுலபமான மிக ருசியான ரசம் .இதை சாதத்தில் பிசைந்தும் 
சாப்பிடலாம் ,குடிக்கவும் செய்யலாம் .நாவுக்கு மிகவும் ருசியாக 
இருக்கும் .
தேவையான பொருட்கள் 
எலுமிச்சம் பழம் --------------------------------------ஒன்று (நல்ல சாருவுள்ளது)
தக்காளி பழம் ------------------------------------------ஒன்று 
கொத்தமல்லி விதை --------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கடலைப்பருப்பு ----------------------------------------ஒருஸ்பூன்  
ஜீரகம் --------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
 
மிளகு --------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
பச்சை மிளகாய் --------------------------------------இரண்டு 
பெருங்காயம் ------------------------------------------கால் ஸ்பூன் 
உப்பு ---------------------------------------------------------தேவையான அளவு 
கொத்தமல்லி தழை -----------------------------------பொடியாக நறுக்கியது ஒரு பிடி 
கடுகு -------------------------------------------------------அரை ஸ்பூன் 

செய்முறை 

கொத்தமல்லி விதை ,கடலை பருப்பு , ஜீரகம் ,மிளகு இவற்றை மிக்ஸியில் 

போட்டு அரை 
ஒருபாத்திரத்தில் நான்கு கப்தண்ணீர் விட்டு அதில் தக்காளியை பொடியாக   
நறுக்கி போட்டு அத்துடன் பச்சை மிளகாய் ,பெருங்காயம் ,உப்பு ஆகியவற்றை போட்டுநன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்பு 
மிக்ஸியில் அரைத்த பொடியை போட்டு இரண்டு கொதி வந்ததும் ஒரு கப்  
தண்ணீர் விட்டு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழையை போட்டு இறக்கி வை 
கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சப்பழத்தின் சாற்றை பிழிந்து கொ ட்டையை 
எடுத்து விட்டு சாற்றை ரசத்தில் ஊற்று ..கடுகை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டு ..ரசம் ரெடி 
சூடாக இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றை ஊற்றினால் ரசம் கசக்கும் .ஆகையால் ஆரியபின்பு தான் சாற்றை ஊற்ற வேண்டும் 
   

Tuesday, December 10, 2019

syamalas Arusuvai virunthu: vanky bath& moorkuzhambu

syamalas Arusuvai virunthu: vanky bath& moorkuzhambu: வாங்கி பாத் &மோர்க்குழம்பு வாங்கி பாத் என்பது மிகவும் ருசியான அதே சமயம் சுலபமான கலப்பு சாதம் இது இக்கால குழந்தைகள் விரும்பி சாப்பிடும்...

vanky bath& moorkuzhambu

Image result for brinjalவாங்கி பாத் &மோர்க்குழம்பு
வாங்கி பாத் என்பது மிகவும் ருசியான அதே சமயம் சுலபமான கலப்பு சாதம் இது இக்கால குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாதம் .இது என் அனுபவத்தில்
கண்டது .அதற்கு சைடு டிஷ் ஆக மோர் குழம்பும் இருந்தால் சூப்பரோ சூப்பர் ஆஹா
வாங்கி பாத் ற்கு  தேவையான பொருட்கள்
நல்ல கத்திரிக்காய் ----------------கால்கிலோ
அரிசி ------------------------------------இரண்டு கப்
கொத்தமல்லி விதை -------------ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு ----------------------ஒரு டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் ---------------------ஐந்து
கடுகு -------------------------------------ஒரு ஸ்பூன்
பெருங்காய தூள் -------------------கால்ஸ்பூன்
வேர்க்கடலை ------------------------அரை கப்
மஞ்சள் தூள் ---------------------------அரைஸ்பூன்
கறிவேப்பிலை ------------------------ஒரு கொத்த
எண்ணெய் ------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு ---------------------------------------தேவையான அளவு
செய்முறை
பொடியாக்கவதற்கு :   கொத்தமல்லி விதை ,கடலைப்பருப்பு மிளகாய் ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்துபின்
ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக்கு
கத்தரிக்காயைபொடியாக நறுக்கிவை
இரண்டு கப் அரிசியைகுக்கரில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சாதம் பண்ணு (சாதம் உதிரியாக இருக்க எண்ணெய்
சேர்க்கிறோம் )
சாதம் ஆனதும்  அதை ஆறவைக்கவேண்டும்
நறுக்கிய கத்திரிக்காயை எண்ணெயில் கடுகு வெடித்ததும் போட்டு
மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள்வேர்க்கடலை  போட்டு நன்கு வதக்கு
மிக்ஸியில் அரைத்த பொடியை அதில் போட்டு நன்கு வதக்கு மீதமுள்ள
எண்ணெயை சேர் .தேவையான உப்பு ,கறிவேப்பிலை சேர் .
ஆறிய சாதத்தில் வதக்கிய கத்திரிக்காயை போட்டு கிளறு
.இப்பொழுது வாங்கி பாத் கம கம மணத்துடன் தயார்

இதற்கு தொட்டு கொள்ள மோர்க்குழம்பு தயார் செய்வதை பார்ப்போம்
மோர் குழம்பிற்கு போடவெண்டைக்காய் எடுத்து கொள்வோம்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்_---------20
தயிர்-------------------------------2கப்
பச்சைமிளகாய்-------------4
சீரகம்-----------------------------1டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல்---------2டேபிள்ஸ்பூன்
கடலைமாவு--------------1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு------------------1டேபிள்ஸ்பூன்
கடுகு---------------------------_1ஸ்பூன்
கறிவேப்பிலை--------_----1கொத்து
உப்பு---------------------_--தேவையான அளவு
எண்ணெய்-_-------------1டேபிள்ஸ்பூன்

செய் முறை
தேங்காய் துருவல் பச்சை மிளகாய்
சீரகம் மிக்ஸியில்அரைத்து வை
வெண்டைகாயைஒருஅங்குலநீளத்திற்குநறுக்கிவை அதைஎண்ணெய்விட்டுஉப்புபோட்டுவதக்கு
அரைத்துவைத்துள்ளவிழுதைதயிரில்கலந்துவதக்கியவெண்டைகாயில்ஊற்றுகடலைமாவுஅரிசிமாவுஇரண்டடையும்கரைத்துதயிர்கலவையில்
ஊற்றிஅடுப்பில்வைநுரைத்துபொங்கிவரும்பொழுதுகறிவேப்பிலை
போட்டுகடுகுதாளிக்கவேண்டும்
கொதிக்கவிடகூடாதுஇனிபறிமாறவேண்டியதுதான்மோர்குழம்பு
ரெடி









Monday, December 9, 2019

syamalas Arusuvai virunthu: vegetable biriyani

syamalas Arusuvai virunthu: vegetable biriyani:  விஜி டேபிள்   பிரியாணி தேவையான காய்கள் : வெங்காயம்ஐந்து  .கேரட் இரண்டு .பீன்ஸ்இருபது  பச்சை பட்டாணிஇரண்டு பிடி  .இஞ்சி இரண்டு அங்குலம் ....

vegetable biriyani

 விஜி டேபிள்   பிரியாணி

தேவையான காய்கள் : வெங்காயம்ஐந்து  .கேரட் இரண்டு .பீன்ஸ்இருபது  பச்சை பட்டாணிஇரண்டு பிடி  .இஞ்சி இரண்டு அங்குலம் .பச்சை மிளகாய் ஐந்து பூண்டு பத்து பல்
.

செய்முறை
காய்களை சிறிய துண்டுகளாக நறுக்க    வேண்டும் .வெங்காயத்தை நீள வாட்டில் நறுக்க வேண்டும்
பூண்டு .இஞ்சி ,பச்சை மிளகாய் சிறிது நெய் விட்டு வதக்க வேண்டும்
ஆறியதும் அத்துடன் பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு ,சோம்பு ,,தேங்காய் துருவல் ,புதினா தழை ஒரு கொத்து ,பத்து முந்திரி பருப்புகசகசா ஒரு டேபிள் ஸ்பூன்  ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .
.ஒரு கப் அரிசியைகளைந்து வடித்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவேண்டும் .
நறுக்கி வைத்துள்ள காய்களை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டு வதக்க வேண்டும் இலேசாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள
விழுதை அதில்போட்டு ஒரு கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கிளறி அத்துடன்
வறுத்த அரிசி சேர்த்து அனைத்தையும் ரைஸ் குக்கரில் போட்டு இரண்டு
கப் தண்ணீர் வி  ட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள்  போட்டு தேவையான உப்பு போட்டு
ரைஸ் குக்கரை மூடவேண்டும் ..நன்றாக வெந்ததும் முந்திரி பருப்பு நெய்யில்
தாளித்து அதில் போடவேண்டும் .கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதில் போட்டு கிளறி குக்கரை எடுத்து தனியாக வைக்கலாம் .
.இப்பொழுது கம கம என வாசனையுடன் பிரியாணி ரெடி.
இதற்கு வெள்ளரிக்காய் அல்லது வெங்காய தயிர் பச்சடி சரியான காம்பினேஷன்நீங்களும் பிரியாணி செய்து அசத்துங்கள் பார்ப்போம்  .


syamalacorner:

syamalacorner:

Wednesday, December 4, 2019

syamalas Arusuvai virunthu: vengaya poondu vatha kuzhmbu

syamalas Arusuvai virunthu: vengaya poondu vatha kuzhmbu: வெங்காயம் &  பூண்டு  வத்த குழம்பு வெங்காயம் கிடைக்காத இந்த நேரத்தில் வத்த குழம்பா ? என்ன தில் இருந்தா எழுதலாம் ?என கேட்பது காதில் வ...

vengaya poondu vatha kuzhmbu

Image result for onionவெங்காயம் &  பூண்டு  வத்த குழம்பு


வெங்காயம் கிடைக்காத இந்த நேரத்தில் வத்த குழம்பா ? என்ன தில் இருந்தா
எழுதலாம் ?என கேட்பது காதில் விழுகிறது ..ஆனால் நான்தான் இந்தியாவில்
இல்லையே .நான் uk அல்லவோ இருக்கிறேன் .இங்கு ஐந்து கிலோ பையில்
வெங்காயம் வாங்குகிறோம் .அது சரி இப்போ குழம்பு செய்வதை பார்ப்போம் .
செய்முறை
நான்கு வெங்காயம் இருபது பூண்டு அதாவது இருபது பூண்டு பல் எடுத்து கொள்ளவேண்டும் .வெங்காயம் நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பூண்டையும் நறுக்கி கொள்ளவேண்டும் .வாணலியில்
கூடிய வரை நல்லஎண்ணெய் அல்லதுசன் பிளார் எண்ணெய் நான்கு டேபிள்
ஸ்பூன் ஊற்றி அதில் கால் ஸ்பூன் கடுகு .ஒரு ஸ்பூன் வெந்தயம் .நான்கு
காய்ந்த மிளகாய்,ஒருடேபிள்  ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு கடுகு
வெடித்ததும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் போட்டு வதக்கவும் .
,கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்க்கவும் ஒரு பெரிய எலுமிச்சை அளவு
புளியைநான்கு கப் தண்ணீரில்  .நன்றாக கரைத்துவதக்கிய வெங்காய,பூண்டு கலவை யில் ஊற்றவேண்டும் .இரண்டு ஸ்பூன்சாம்பார் மிளகாய் பொடி  
போடவேண்டும் 

தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும் .மிளகாய் பொடி
பச்சை வாசனை போனதும் தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் போட்டு
தண்ணீர் விட்டு நன்றாக கசக்கி பால் எடுத்து   குழம்பில் ஊற்றவேண்டும் .
நன்றாக கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி கொதிக்க
விடவேண்டும் .எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பில் இருந்து
இறக்கி வைக்கவேண்டும் ..
இப்போ வத்த குழம்பின் வாசனை ஊரையே தூக்கும்
.பரிமாற ரெடி