Friday, November 29, 2019

syamalas Arusuvai virunthu: potato roast

syamalas Arusuvai virunthu: potato roast:  உருளை கிழங்கு ரோஸ்ட் இதன் பெயரை  கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும் .ஆனால் இதை செய்வது கடினம் என நினைத்து ஹோட்டல் சென்று சாப்பிட்டு ஆசையை ந...

potato roast

Image result for potato" உருளை கிழங்கு ரோஸ்ட்


இதன் பெயரை  கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும் .ஆனால் இதை
செய்வது கடினம் என நினைத்து ஹோட்டல் சென்று சாப்பிட்டு
ஆசையை நிறைவேற்றி கொள்பவர்களே  சுலபமாக சூப்பர்
ரோஸ்ட் செய்யும் முறையை கற்று கொள்ளுங்கள் .

செய்முறை

ஆறு உருளை கிழங்கை நன்றாக அலம்பி ஒவொன்றையும் இரண்டாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்கவும்.அது வெந்ததா என்பதை கூர்மையான முனையுள்ள
கத்தியை கொண்டு அதில் சொருகி பார்த்து எடுக்கவும் .தண்ணீரை வடிக்கவும்
ஆறியதும் அதன் தோலை உரித்து ஒரே அளவாக நறுக்கவும் .அதைஈரமில்லாத பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் சாம்பார்
தூள் ,இரண்டு ஸ்பூன் கடலை மாவு .தேவையான உப்பு ,இரண்டு டேபிள்
ஸ்பூன் கடலை எண்ணெய் அனைத்தையும் போட்டு கலக்கவும் .அப்பொழுது
உடையாமல் கலக்கவும் .அந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம்
ஊற விடவும் .பிறகு ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் .
விட்டு ஒரு ஸ்பூன் கடுகு ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
.அதில் ஊறி கொண்டு இருக்கும் உருளை கிழங்கை கொட்டி மிதமான
சூட்டில் வைத்து கிளறவும் .ரோஸ்ட் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து
இறக்கி பரிமாறவும் .இப்பொழுது மிக coulerful roast  ready


பின் குறிப்பு
இதே போன்று சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யலாம்


Wednesday, November 27, 2019

syamalas Arusuvai virunthu: rameswaremkootu

syamalas Arusuvai virunthu: rameswaremkootu: சௌசௌ ராமேஸ்வரம் கூட்டு இந்த கூட்டு நாங்கள் ராமேஸ்வரம்  போனபொழுது அங்கு சாப்பிட்டோம் .எனவே இதற்கு நாங்கள் இட்ட பெயர் இது . செய்மூறைஎ ஒ...

rameswaremkootu

Image result for sowsow"சௌசௌ ராமேஸ்வரம் கூட்டு
இந்த கூட்டு நாங்கள் ராமேஸ்வரம்  போனபொழுது அங்கு
சாப்பிட்டோம் .எனவே இதற்கு நாங்கள் இட்ட பெயர் இது .


செய்மூறைஎ
ஒரு சௌசௌ காயை தோல் சீவி சின்ன சின்னதாக நறுக்கி
ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் நல்ல பால் ஊற்றி
கொதிக்க விட வேண்டும் .காய் வெந்தது ம் தேவையான
உப்பு போடவேண்டும் .அரைகப் தேங்காய் துருவல் ,ஒருஸ்பூன்
சீரகம் ,இரண்டு பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில்
அரைத்து வெந்த காயில் கொட்டி கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன்
அரிசி மாவை கரைத்து விடவேண்டும் .அதன் பின் ஒரு ஸ்பூன்
எண்ணையில் கடுகு ,உடைத்த உளுத்தம்பருப்பு தாளித்து
கொட்டவேண்டும் .இப்பொழுது கூட்டு ரெடி .இதை பார்ப்பதற்கே
மிக ரம்மியமாக இருக்கும் ..                                                                                                

Tuesday, November 26, 2019

syamalas Arusuvai virunthu: pagarkal pittalai

syamalas Arusuvai virunthu: pagarkal pittalai: பாகற்காய் பிட்டலை தற்பொழுது sugar அதாவது சர்க்கரை நோய் என்பது உலகில் உள்ள அணைத்து தரப்பினருக்கும் உள்ளது .அதற்க்கு சிறந்த நிவாரிணி பாக...

pagarkal pittalai

Image result for pakarkaiபாகற்காய் பிட்டலை


தற்பொழுது sugar அதாவது சர்க்கரை நோய் என்பது உலகில் உள்ள
அணைத்து தரப்பினருக்கும் உள்ளது .அதற்க்கு சிறந்த நிவாரிணி
பாகற்காய் .அதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நம்
உடலில் சர்க்கரை அதிகம் ஆகாமல் கட்டுப்பாட்டில் இருக்கும் .
பிட்லை செய்ய துவரம் பருப்பு கொண்டை கடலை அல்லது வேர்க்கடலை
சேர்ப்பதால் ப்ரோட்டீன் ஆகியவையும் நமக்கு தேவையான அளவு
கிடைக்கிறது .இதில் கசப்பு தெரியாமல் இருக்கநெல்லிக்காய் அளவு
வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்தும் தேங்காய் சேர்ப்பதால் பொட்டாசியம்
ஆகியவை நமக்கு கிடைக்கிறது ..இது செய்யும் முறையை கூறுகிறேன்
அனைவரும் செய்து பயனடையவும்
செய்முறை

தேவையான பொருட்கள்
1பாகற்காய் ------------------------------------------------கால்கிலோ
2புளி ----------------------------------------------------------எலுமிச்சை அளவு
3சாம்பார்பொடி --------------------------------------------இரண்டு டீஸ்பூன்
4வேகவைத்த துவரம் பருப்பு -----------------------இரண்டு கரண்டி
5வேகவைத்த கொண்டைக்கடலை
                        அல்லது
வேர்க்கடலை ============================200கிராம்
6பெருங்காயம் ==================-----------------கால்ஸ்பூன்
7வெல்லம் ================================நெல்லிக்காய் அளவு
8கடலைப்பருப்பு -----------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
9கொத்தமல்லி விதை ----------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
10சிகப்பு மிளகாய் ------------------------------------------------நான்கு
11வெந்தயம் =================================அரைஸ்பூன்
12எண்ணெய் =================================நான்கு டேபிள் ஸ்பூன்
13உப்பு =======================================தேவையான அளவு
14கறிவேப்பிலை ===============================இரண்டு கொத்து
15கடுகு ,உடைத்த உளுத்தம் பருப்பு ================தலா ஒரு ஸ்பூன்
16தேங்காய் துருவல் =============================இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை

கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு மிளகாய்ஆகியவற்றை சிறிது
எண்ணெய் விட்டுபொன்னிறமாக வறுத்து அதனுடன் தேங்காய் துருவல்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்
 பாகற்காயில்  இரண்டு கப் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்றவும்
அதில் மிளகாய்ப்பொடி ,பெருங்காயம் ,உப்பு போட்டு நான்றாக கொதிக்க
விடவும் .காய் நான்றாக வெந்ததும் வெந்த பருப்பு ,கடலை இரண்டையும்
போட்டு கொதிக்க விடவும் பிறகு அதில் மிக்ஸியில் அரைத்த பொடி
வெல்லம் போட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்க விடவும்
கெட்டியாக வரும் நேரம் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
கொட்டவும் ..பிட்டலை யை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
பிட்டலை தயார் .











க்கொட்டி

  

Saturday, November 16, 2019

syamalas Arusuvai virunthu: puli inchi

syamalas Arusuvai virunthu: puli inchi: புளி இஞ்சி  பெரிய கல்யாணங்களில் மோர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு  பதிலாக  புளி இஞ்சி என்றitem போடுவார்கள் .அது மிகவும் ருசியாக இருக்கும் .அ...

puli inchi

புளி இஞ்சி 


பெரிய கல்யாணங்களில் மோர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு  பதிலாக 
புளி இஞ்சி என்றitem போடுவார்கள் .அது மிகவும் ருசியாக இருக்கும் .அது
செய்யும் முறையை பார்ப்போம் .
செய்முறை 
தேவையான   பொருட்கள் 
இஞ்சி துருவியது -----------------------------------ஒரு கப் 
பச்சை மிளகாய் -------------------------------------மூன்று 
புளி ----------------------------------------------------------ஒரு   எலுமிச்சை  அளவு  
மிளகாய்பொடி ------------------------------------- அரை  டேபிள் ஸ்பூன் 
 மஞ்சள் தூள் -------------------------------------------ஒரு சிட்டிகை 
பெருங்காயம் --------------------------------------------ஒரு சிட்டிக
வெல்லம் --------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் -------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
கடுகு -------------------------------------------------------------அரை டீஸ்பூன் 
உப்பு -------------------------------------------------------------தேவையான அளவு 


செய்முறை :

1இஞ்சியை துருவி  வைத்து கொள்ளவேண்டும் 
2புளியை அரைகப்  தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவேண்டும் 
3அடுப்பில் வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகை தாளி  க்கவேண்டும் 
4அதில் மிளகாய் சிறியதாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும் 
5இஞ்சி துருவலை சேர்க்க வேண்டும் .அடுப்பு மெதுவாக எரிய விட வேண்டும்புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்  
6மஞ்சள் தூள் ,பெருங்காயம் சேர்க்கவேண்டும் 
7வெல்லம் சேர்க்க வேண்டும் 
8அடிபிடிக்காமல் கிளறவேண்டும் 9எண்ணெய் பிரிந்து வரும்  சமயம் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் 
9ஈரமில்லாத பாத்திரத்தில் அல்லது பாட்டலில் போட்டு வைக்க வேண்டும் 

இது மிக ருசியாக இருக்கும் .தயிர் சாதத்திற்கு சரியான காம்பினேஷன்  

  

Monday, November 11, 2019

syamalas Arusuvai virunthu: madras hotel sambar

syamalas Arusuvai virunthu: madras hotel sambar: 1960கு முன்னால்  சென்னை க்கு  வருபவர்கள் அனேகமாக ரயிலில் தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும் வந்ததும் நேராக ஹோட்டலுக...

madras hotel sambar

1960கு முன்னால்  சென்னை க்கு  வருபவர்கள் அனேகமாக ரயிலில்
தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும்
வந்ததும் நேராக ஹோட்டலுக்கு தான் போவார்கள் .அப்படி ஒரு பழக்கம்
ஹோட்டலில் இரண்டு இட்லீ ஆர்டர் பண்ணுவார்கள் ..அது சாம்பார் என்ற
குளத்தில் மிதக்கும் ..சாம்பார் இட்லி என்பதால் இரண்டு இட்லிசாப்பிட்டால்
வயறு ரொம்பிவிடும் .எனவே மெட்ராஸ் சாம்பார் ப்ரசித்திபெற்றது .அதன் வாசனைஅப்பப்பாஇன்று நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறும் .இப்பொழுது
எல்லாம் கலப்படம் அந்த ருசியும் இல்லை .அதை அனுபவித்தவர்களை
கேட்டால் தெரியும் நான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் சாம்பார் பற்றி  
எ .ழு து கிரேன் நீங்களும் செய்து பார்த்து அனுபவியுங்கள் .
தேவை யான   பொருட்கள்
துவரம் பருப்பு -----------------------------------------------2டேபிள் ஸ்பூன்
பயத்தம் பருப்பு ---------------------------------------------1டேபிள் ஸ்பூன்
தக்காளி பழம் --------------------------------------------------கால் கிலோ
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் --கால் கிலோ
பச்சை மிளகாய் ---------------------------------------------------5
கறிவேப்பிலை -----------------------------------------------------ஒரூ பிடி ,கடலை  
கடுகு----------------------------------------------------------------------அரை ஸ்பூன்
பொடிசெய்ய
தனியா --------------------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ------------------------------------------------4
கடலை பருப்பு -----------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
வெந்தியம் -------------------------------------------------------------அரை ஸ்பூன்
சேய்முறை
1முதலில் இரண்டு பருப்பையும் குக்கரில் வேகா வைத்து கொள்ளவும்
2வெங்காயம் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
3மிளகாயை நீளவாட்டில்  செய் கீறி வை
4ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விடு
5அதில்கடுகு ,கடலை பருப்புஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறு
6அதில் வெங்காயம் ,தக்காளி ,மிளகாய் போட்டு வதக்கு
7ஆறு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடு 
8பொடிசெய்யவேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பொன்னிறமாக
வறுத்து மிக்ஸியில் பொடிசெய்
9காய்கள் வெந்ததும் அரைத்த பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கு
நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை போடு
10இப்பொழுது சாம்பார் தயார்

இதை இட்லீ ,வடை ,வெண் பொங்கலுக்கு போட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்
.நீங்களும் செய்து அசத்துங்கள் பார்க்கலாம்

பின் குறிப்பு ;  இந்த சாம்பாருக்கு புளி  சேர்க்கவேண்டாம்
 
 





Thursday, November 7, 2019

syamalas Arusuvai virunthu: kele paruppuusili

syamalas Arusuvai virunthu: kele paruppuusili: கேல்   பருப்புஉசிலி  t தேவையான பொருட்கள்  துவரம்பருப்பு -----------------------------------------1கப்  கடலைப்பருப்பு ----...

kele paruppuusili

கேல்   பருப்புஉசிலி 



Image result for kale"t

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு -----------------------------------------1கப் 
கடலைப்பருப்பு --------------------------------------அரை கப் 
கேல் -------------------------------------------------------300கிராம் 
உடைத்தஉளுத்தம்பருப்பு -----------------------1டேபிள் ஸ்பூன் 
கடுகு ---------------------------------------------------------1ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் ----------------------------------------5
எண்ணெய் ----------------------------------------------------2டேபிள் ஸ்பூன் 
செய்முறை 

கேல் கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீர் விட்டு அலசு 
பிறகு பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வை பிறகு 
கீரையை இட்லீ தட்டில் வேக வை பருப்புகளை வடிய வைத்து 
மிக்ஸியில் மிளகாய் தேவையான உப்பு போட்டு அரை 
அதை இட்லீ தட்டில் வேகவை . ஆறவிடு .ஆறியதும் 
மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரை இப்பொழுது 
உதிரி உதிரியாக இருக்கும் .வாணலியில் எண்ணெய் விட்டு 
கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து 
அதில் கேல்  போட்டு ஒரு நிமிடம் வதக்கு பின் அரைத்த 
பருப்பைபோட்டு கிளறு தேவை
யானால் இன்னும் கொஞ்சம் 
எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கு உசிலி தயார் 
இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் .இதற்க்கு 
தொட்டுக்கொள்ள மோர்குழம்பு ,வத்தக்குழம்பு சரியான காம்பினேஷன் 


இந்த receipy US இல் உள்ள  விமலா மன்னி  கூறியது .இதை நா ன் 
செய்து பார்த்தேன் .பிரமாதமாக இருந்தது .எனவே நான் பெற்ற 
இன்பம் அனைவரும் பெற இதை எழுதி உள்ளேன் .விமலா மன்னிக்கு என் நன்றி 

Wednesday, November 6, 2019

syamalas Arusuvai virunthu: califlowermoorkutu

syamalas Arusuvai virunthu: califlowermoorkutu: காலிஃளார் மோர்க்கூட்டு

syamalas Arusuvai virunthu: califlowermore kuttu

syamalas Arusuvai virunthu: califlowermore kuttu: காலிஃளார் மோர்க்கூட்டு ஒரு காலிஃளார் எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வை ..பிறகு மூன்று பச்சைம...

califlowermore kuttu

காலிஃளார் மோர்க்கூட்டு


Image result for cauliflower"
ஒரு காலிஃளார் எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வை ..பிறகு மூன்று பச்சைமிளகாய்
ஒரு ஸ்பூன் சீரகம் .மூன்று ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில்
அரை அதைவெந்த காலிஃளாரில் ஊற்றி நன்றாக மாசி ய  கிளறு .நன்றாக
கொதித்ததும்அடுப்பில் இருந்து இறக்கி வை சிறிது ஆறியதும் தேவையான
தயிரை கடைந்து ஊற்று .கடுகு .உடைத்த உளுத்தம் பருப்பு இரண்டையும்
தாளித்து கொட்டு .கறிவேப்பிலை.அல்லது கொத்தமல்லி போடு .இப்பொழுது
மோர்கூட்டு தயார் .இது எல்லா பதர்த்தங்களுக்கும் தொட்டு கொண்டு
சாப்பிட நன்றாக இருக்கும் 

califlowermoorkutu


காலிஃளார் மோர்க்கூட்டு 

Monday, November 4, 2019

kaliflower more kuttu

Image result for kaliflower"

syamalas Arusuvai virunthu: asokahalwa

syamalas Arusuvai virunthu: asokahalwa: தேவையான பொருட்கள் 1பயத்தம்பருப்பு =====================================1கப் 2சர்க்கரை ---------------------------------------------------...

asokahalwa

தேவையான பொருட்கள்
1பயத்தம்பருப்பு =====================================1கப்
2சர்க்கரை ------------------------------------------------------------------------ஒண்ணரை கப்
3கோதுமை மாவு ---------------------------------------------------------------1டேபிள் ஸ்பூன்
4நெய் ---------------------------------------------------------------------------------அரை கப்
5முந்திரி ----------------------------------------------------------------------------15
கேசரி பவுடர் =========================================கால்ஸ்பூன்
செய்முறை
1பயத்தம்பருப்பை வாசனைவரும் வரை வறு
2அந்த பருப்பில் தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து நான்கு விசில்
வந்ததும் நிறுத்து
3சக்கரையை மிக்ஸியில் பொடி செய்
4ஆறிய பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரை
5வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு முத்திரியை  வறுத்து எடு
6அந்த நெய்யில் கோதுமைமாவை இலேசாக வறுத்து எடு
7அரைத்த பருப்பு கோதுமைமாவு சர்க்கரை அனைத்தையும் கட்டி தட்டாமல்
கிளறு
8கொஞ்சம்நெய் சேர் ,கேசரி பவுடர் சேர்
9கெட்டியாக வரும் வரை கிளறி மீதமுள்ள நெய் முந்திரியை சேர்த்து கிளறு
10ஒட்டாமல் வந்ததும் இறக்கி வை
11இப்பொழுது அசோகா ஹல்வா ரெடி