Tuesday, January 31, 2023
பரங்கிக்காய் அல்வா தேவையான பொருட்கள் பரங்கிக்காய் 300 கிராம் நெய் ஐந்து டேபிள் ஸ்பூன் முந்திரி பத்து சர்க்கரை அரை கப் ஏலம் மூன்று செய்முறை பரங்கிக்காயை நன்றாக துருவி நெய்ய விட்டு வதக்க வேண்டும் பின்பு மூடியை போட்டு மூடி லேசாக தீயை வைக்க வேண்டும் பின்பு நன்றாக வதங்கிய பின் அத்துடன் சர்க்கரை சேர்த்து திரண்டு வரும் வரை கிளற வேண்டும் அதன்பின் முந்திரி ஏலம் சேர்க்க வேண்டும் இப்பொழுது தளதளவென்று பரங்கிக்காய் அல்வா ரெடி
Friday, January 20, 2023
கொண்டைக்கடலை பிரியாணி
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி அல்லது பச்சரிசி ஒரு கப்
ஊற வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
பிரிஞ்சி இலை பட்டை ஏலக்காய் தலா ஒன்றுகிராம்பு ரெண்டு
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூ ன்
பச்சை மிளகாய் ஒன்று
தக்காளி இரண்டு
மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தலாஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை புதினா கொஞ்சம்
எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை இலை ஏலக்காய் கிராம்பு, வெங்காயம் ஆகியவைகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதன்பின் புதினா கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்க வேண்டும் அதன் பின் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதன் பின் கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும் பின்பு ரெண்டரை கப்தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் தண்ணீர் கொதித்ததும் அதில் அரிசியையும் கொண்டைக்கடலையும் சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். ஆறியதும் குக்கரை திறக்கவும். இப்பொழுது கமகமவென்று கொண்டைக்கடலை பிரியாணி தயாராக இருக்கும். இதற்கு வெங்காய தயிர் பச்சடி அல்லது வெள்ளரிக்காய் தயிர் பச்சடி சூப்பர் காம்பினேஷன் நீங்களும் செய்த அசத்துங்களேன்
டீக்கடை வடை
தேவையான பொருட்கள்
பட்டாணி பருப்பு ஒரு கப்
சோம்பு ஒரு டீஸ்பூன்
மிளகாய் 10
பெரிய வெங்காயம் ஒரு கப்
சின்ன வெங்காயம் அரைக்கப்
பச்சை மிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்
பூண்டு ஐந்து பல்
கருவேப்பிலை கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
செய்முறை
பட்டாணி பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக வடிகட்டி வைக்க வேண்டும் சோம்பு, மிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும் அத்துடன் ஊற வைத்த பருப்பையும் அரைக்க வேண்டும் பிறகு இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு போட்டு பிசைந்து
வாணலியில் எண்ணெய் வைத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும் இப்பொழுது டீக்கடை வடை ரெடி இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்
Tuesday, January 17, 2023
வெங்காய தயிர் பச்சடி
பெரிய வெங்காயம் இரண்டு
பச்சை மிளகாய் ஒன்று
தயிர் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் போடவும் பச்சை மிளகாயை நடுவில் கீரி பொடிப்பொடியாக சேர்க்கவும் தேவையான உப்பை போடவும் நன்றாக கிளறி ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவையான பொழுது எடுத்து பரிமாறவும் இந்த பச்சடி பிரியாணிக்கு ஏற்றது
Thursday, January 12, 2023
வத்த குழம்பு பொடி தேவையான பொருட்கள் தனியா நாலு ஸ்பூன் மிளகாய் எட்டு மிளகு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு 3 டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைஎண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் வத்த குழம்பு செய்யும் பொழுது இந்த பொடியை போட்டு செய்தால் வீடே மணக்கும்
தயிர் பச்சடி தேவையான பொருட்கள் தயிர் ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் இரண்டு கடுகு அரை டீஸ்பூன் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது கொஞ்சம் கடுகு அரை டீஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் செய்முறை தேங்காய் பச்சை மிளகாய் உப்பு மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து தயிரில் கலக்க வேண்டும். எண்ணெயில் கடுகைப் போட்டு வெடித்ததும் தயிரில் கொட்டவும். அதன் பின் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும் இது அவசரத்திற்கு செய்யும் பச்சடி என்றாலும் மிகவும் ருசியானது ஈஸியானது
Saturday, January 7, 2023
பிரண்டை பொடி தேவையான பொருட்கள் பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும்
பிரண்டை பொடி
தேவையான பொருட்கள்
பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது
உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
மிளகாய் வற்றல் நான்கு
பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் ஒரு ஸ்பூன்
செய்முறை
பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும்
Thursday, January 5, 2023
கருவேப்பிலை பொடி தேவையான பொருட்கள் பச்சைக் கருவேப்பிலை ஐந்து கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை இரண்டு கைப்பிடி பிரண்டை பொடி தேவையான பொருட்கள் பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும் ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் வத்தல் 20 பெருங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன் புளி ஒரு நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் செய்முறை ஒரு வாணலியில் கருவேப்பிலையை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும் அதன்பின் பருப்புகளை தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதன்பின் சீரகத்தை சிவக்க வறுக்க வேண்டும் அத்துடன் பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு சூடான வாணலியில் புளியை புரட்டி எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும் கடைசியாக தேவையான உப்பை போட்டு ஒரு சுத்து சுற்றி அரைத்து அதை ஆறவிட வேண்டும். பொடி நன்றாக ஆறிய உடன் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இதைஉபயோகிக்கலாம். இதை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சிறந்தது.
கருவேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்
பச்சைக் கருவேப்பிலை ஐந்து கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை இரண்டு கைப்பிடி
சீரகம் ரெண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் 20
பெருங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் கருவேப்பிலையை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும் அதன்பின் பருப்புகளை தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதன்பின் சீரகத்தை சிவக்க வறுக்க வேண்டும் அத்துடன் பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு சூடான வாணலியில் புளியை புரட்டி எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும் கடைசியாக தேவையான உப்பை போட்டு ஒரு சுத்து சுற்றி அரைத்து அதை ஆறவிட வேண்டும். பொடி நன்றாக ஆறிய உடன் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இதைஉபயோகிக்கலாம். இதை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சிறந்தது.
பொரித்த கூட்டு பொடி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு ரெண்டு கப் மிளகு கால் கப் சீரகம் அரை கப் மிளகாய் வத்தல் பத்து எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை மேலே உள்ள பொருட்களை பொன்னிறமாக வறுக்க வேண்டும் ஆரியபின் மிக்ஸியில் நன்றாக மைய அரைக்க வேண்டும் ஈரம் இல்லாத பாட்டலில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் உபயோகப்படுத்தலாம். இதை புடலங்காய், அவரைக்காய் ,சௌசௌ ,கீரை ,கொத்தவரங்காய் ஆகிய காய்களால் செய்யும் பொரித்தகூட்டிற்கு போடலாம் .
Subscribe to:
Comments (Atom)