Friday, January 20, 2023

 கொண்டைக்கடலை பிரியாணி

 தேவையான பொருட்கள் 
 பிரியாணி அரிசி அல்லது பச்சரிசி ஒரு கப்
 ஊற வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
 பிரிஞ்சி இலை பட்டை ஏலக்காய் தலா ஒன்றுகிராம்பு ரெண்டு
 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப்
 இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூ ன்
 பச்சை மிளகாய் ஒன்று
 தக்காளி இரண்டு
 மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தலாஒரு ஸ்பூன்
 கொத்தமல்லி இலை புதினா கொஞ்சம்
 எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

 செய்முறை

 ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை இலை ஏலக்காய் கிராம்பு, வெங்காயம் ஆகியவைகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதன்பின் புதினா கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்க வேண்டும் அதன் பின் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதன் பின் கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும் பின்பு ரெண்டரை கப்தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் தண்ணீர் கொதித்ததும் அதில் அரிசியையும் கொண்டைக்கடலையும் சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். ஆறியதும் குக்கரை திறக்கவும். இப்பொழுது கமகமவென்று கொண்டைக்கடலை பிரியாணி தயாராக இருக்கும். இதற்கு வெங்காய தயிர் பச்சடி அல்லது வெள்ளரிக்காய் தயிர் பச்சடி சூப்பர் காம்பினேஷன் நீங்களும் செய்த அசத்துங்களேன்

No comments:

Post a Comment