பிரண்டை பொடி
தேவையான பொருட்கள்
பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது
உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
மிளகாய் வற்றல் நான்கு
பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் ஒரு ஸ்பூன்
செய்முறை
பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும்
No comments:
Post a Comment