Friday, January 20, 2023

 டீக்கடை வடை
 தேவையான பொருட்கள் 
 பட்டாணி பருப்பு ஒரு கப்
 சோம்பு ஒரு டீஸ்பூன் 
  மிளகாய் 10
 பெரிய வெங்காயம் ஒரு கப்
 சின்ன வெங்காயம் அரைக்கப்

 பச்சை மிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்
 பூண்டு ஐந்து பல்
 கருவேப்பிலை கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு



 செய்முறை
 பட்டாணி பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக வடிகட்டி வைக்க வேண்டும் சோம்பு, மிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும் அத்துடன் ஊற வைத்த பருப்பையும் அரைக்க வேண்டும் பிறகு இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு போட்டு பிசைந்து 
 வாணலியில் எண்ணெய் வைத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும் இப்பொழுது டீக்கடை வடை ரெடி இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்

No comments:

Post a Comment