Monday, January 27, 2020

syamalas Arusuvai virunthu: agathikeerai poriyal

syamalas Arusuvai virunthu: agathikeerai poriyal: aஅகத்தி கீரை அகத்தி கீரை உடல் சூட்டை குறைக்கும் .வயிற்று புண்ணை ஆற்றும் .குடல் புழுக்களை நீக்கும் .இது பொரியல் மட்டுமே செய்யமுடியும் .இந்...

agathikeerai poriyal

Image result for agathikeeraiaஅகத்தி கீரை

அகத்தி கீரை உடல் சூட்டை குறைக்கும் .வயிற்று புண்ணை ஆற்றும் .குடல் புழுக்களை நீக்கும் .இது பொரியல் மட்டுமே செய்யமுடியும் .இந்த கீரையை
உருவி எடுத்து நன்கு தண்ணீர் விட்டு அலசி எடுக்கவேண்டும் .இதில் பழுப்பு
இலை இருந்தால் அதை எடுத்து விடவேண்டும் இல்லாவிட்டால் உடலுக்கு
ஒத்துக்கொள்ளாமல் loosemotion ஏற்படும் அபாயம் ஏற்படும் இந்த பொரியல்
செய்வது மிக சுலபம் ..

செய்முறை

இந்த கீரையை கத்தியால் நறுக்கவோ அரிவாள் மனையில் நறுக்கவோ கூடாது .அவ்வாறு செய்தால் கசப்பு தன்மை ஏற்படும் ..கையால் பிய்த்து
துண்டுகளாக்கவும் .வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
அதில் ஒருஸ்பூன் கடுகு ,இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டு காய்ந்த
 மிளகாய்  போட்டு தாளித்து அதில் கீரையை போட்டு கிளறி தேவையான
உப்புபோட்டு கிளற வேண்டும் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
சர்க்கரை போட்டு கிளறி இறக்க வேண்டும்
அவ்வளவு தான்  பொரியல் ரெடி 

Thursday, January 23, 2020

syamalas Arusuvai virunthu: kuzhi paniyaram

syamalas Arusuvai virunthu: kuzhi paniyaram: குழி பணியாரம்  தினமும் இட்லிதானா என சலித்து கொள்பவர்களுக்கு இதோ ஒரு அருமையான காலை டிபன் ரெடி .சுலபமாக அதே நேரம் வீட்டில் உள்ள  பொருளை ...

kuzhi paniyaram

குழி பணியாரம் 

தினமும் இட்லிதானா என சலித்து கொள்பவர்களுக்கு இதோ ஒரு அருமையான காலை டிபன் ரெடி .சுலபமாக அதே நேரம் வீட்டில் உள்ள 
பொருளை கொண்டு பத்து நிமிடத்தில் டிபன் செய்து அசத்தலாம் .அதுதான் 
குழி பணியாரம் .

தேவையான பொருட்கள் 

இட்லிமாவு ---------------------------------------------------------------------------இரண்டு  கப் 
பெரியவெங்காயம் ----------------------------------------------------------------ஒன்று (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
காரட் -------------------------------------------------------------------------------------ஒன்று (துருவி கொள்ளவேண்டும் )
பச்சை மிளகாய் --------------------------------------------------------------------இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
தேங்காய் துருவல் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ----------------------------------------------------------------------ஒரு கொத்து 
எண்ணெய் ------------------------------------------------------------------------------பொரிப்பதற்கு தேவையான அளவு 






வறுத்து கொள்ள 
கடலை பருப்பு -----------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு ---------------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு ----------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
முந்திரி (இருந்தால்)-----------------------------------------------------------------ஐந்து (பொடியாக உடைத்து கொள்ளவேண்டும் )

வறுத்து கொள்ள வேண்டிய பொருளை எண்ணெய் ஒருஸ்பூன் விட்டு 
பொன்னிறமாக வறுத்து மாவில் கொட்டவேண்டும் .நறுக்கிய காய்களை மாவில்போட்டு உப்பு தேவையான அளவு போட்டு நன்கு கலக்க வேண்டும் 
குழி பணியார வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவேண்டும் 
எண்ணெய் காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் ஊற்ற வேண்டும் பொன்னிறமாக வந்ததும் திருப்பி விடவேண்டும் .பொன்னிறமாக 
வந்ததும் எடுத்து வைக்கவும் .பார்ப்பதற்கு அழகான பணியாரம் ரெடி 
அதற்கு  தேங்காய் சட்னி தொட்டு கொண்டு சாப்பிட சூப்பர் காம்பினேஷன் 


 

  

Wednesday, January 22, 2020

syamalas Arusuvai virunthu: milagu kuzhambu

syamalas Arusuvai virunthu: milagu kuzhambu: மிளகு குழம்பு மிளகு குழம்பு பிரசவித்தவர்களுக்கு போடுவதால் இதை பிரசவ குழம்பு என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள் .இது சாப்பாடு பிடிக்காமல...

milagu kuzhambu

மிளகு குழம்பு

மிளகு குழம்பு பிரசவித்தவர்களுக்கு போடுவதால் இதை பிரசவ குழம்பு என்று
கிராமப்புறங்களில் கூறுவார்கள் .இது சாப்பாடு பிடிக்காமல் இரூபவ்ர்கள்
சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு சாப்பாடு செல்லும் .இது மருத்துவ குணம்
உடையது


இது செய்ய தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
 துவரம் பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் --------------------------------------------------------------ஐந்து
மிளகு -----------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் பொடி-----------------------------------------------ஒரு ஸ்பூன்
நல்ல எண்ணெய் --------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பி  லை ------------------------------------------------------------ஒரு பிடி
மேற்கூறிய பொருட்களை ஒருஸ்பூன்சூடான  எண்ணெய் விட்டு பொன்னிறமாகv
வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவேண்டும்
-ஒரு எலுமிச்சை அளவு புளியை நன்கு கரைத்து அதில் அரைத்த பொடியை
கரைத்து தேவையானஉப்பு போட்டு நன்கு கொதி க்க விடவேண்டும்
மீதமுள்ள எண்ணையைகரைசலில்  ஊற்றி அடுப்பை  சிறியதாக வைக்கவேண்டும்
எண்ணெய் மிதந்து பிரிந்து வரும் பொழுது அடுப்பில்இருந்து இறக்கவேண்டும்  இதன்   வாசனை ஊரையே தூக்கும் சூடான சாதத்தில் போட்டு நல்லஎண்ணை அல்லது நெய்விட்டு சாப்பிட பேஷ் பேஷ் பிரமாதம் என சொல்ல தோன்றும்



Monday, January 20, 2020

syamalas Arusuvai virunthu: carrat halwa

syamalas Arusuvai virunthu: carrat halwa: காரட் அல்வா காரட் பூமியின் கீழ் விளையும் கிழங்கு  வகையை சேர்ந்தது .இது மிகவும் சத்துள்ளது .இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .மிக சுலபமாக...

carrat halwa

Image result for carratகாரட் அல்வா
காரட் பூமியின் கீழ் விளையும் கிழங்கு  வகையை சேர்ந்தது .இது மிகவும் சத்துள்ளது .இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .மிக சுலபமாக செய்ய
கூடிய இனிப்பு வகையை சேர்ந்த அல்வா செய்ய  ஏற்றது .இது
மிகவும் ருசியுள்ளது .
தேவையான பொருட்கள்

காரட் துறுவியது --------------------------------------------------நான்கு கப்
பால் ----------------------------------------------------------------------நான்கு கப்
சர்க்கரை ---------------------------------------------------------------ஒரு கப்
நெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்பொடி -----------------------------------------------------ஒரு ஸ்பூன்
முந்திரி -------------------------------------------------------------------இருபது
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்

செய்   முறை
காரட் துருவலில் பாலை ஊற்றி வேக வைக்க வேண்டும் .குக்கரில்
வேகவைப்பது சுலபம் .வெந்ததும் அதை ஒரு வாணலியில் கொட்டி
அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும் .கெட்டியாக வந்ததும்
ஏலக்காய்பொடி சேர்த்து கிளற வேண்டும் .நெய்யில் முந்திரியைபொன்னிறமாக வறுத்துஅத்துடன் திராஷையை போட்டு பொரித்து அல்வாவில் கொட்ட வேண்டும் .அல்வாவை நன்கு கிளறி எடுக்கவேண்டும்
அல்வா வின் கலரும் ருசியும் மிக பிரமாதம் ..




  .

Saturday, January 11, 2020

syamalas Arusuvai virunthu: sarkarai pongal

syamalas Arusuvai virunthu: sarkarai pongal: சர்க்கரை பொங்கல் பொங்கல் திருநாள் வர உள்ளது .தமிழ் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடும் பண்டிகை பொங்கல் திருநாள் .இதை தைமாதம் முதல் நாள் கொண்ட...

sarkarai pongal

சர்க்கரை பொங்கல்

பொங்கல் திருநாள் வர உள்ளது .தமிழ் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடும்
பண்டிகை பொங்கல் திருநாள் .இதை தைமாதம் முதல் நாள் கொண்டாடுவோம் .இதை உழவர் திருநாள் என்பர் .உழவர்களின் அருமையை
உணர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது .அன்று சர்க்கரை
பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைத்தது பின் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு கொண்டாடுவார்கள் .அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை இது .அன்று செய்யும்
பொங்கலை எவ்வாறு மிக சுவையாக செய்வது என்பதை கூறுகிறேன்
நீங்களும் செய்து மகிழ்ச்சி யாக கொண்டாடுங்கள்

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி -----------------------------------------------------ஒரு கப்
பயத்தம் பருப்பு -------------------------------------------------கால் கப்
வெல்லம் -----------------------------------------------------------இரண்டு கப்
முந்திரி ---------------------------------------------------------------இருபத்தி ஐந்த( சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் )

ஏலக்காய் தூள் -------------------------------------------------------ஒருஸ்பூன்
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------ஒரு பிடி
நெய் --------------------------------------------------------------------------அரை கப்
பால் ----------------------------------------------------------------------------ஒரு கப்


செய்முறை

பயத்தம்   பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவேண்டும் பின் அரிசி
பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு ஒரு கப் பால் நான்கு கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும் வரை வைத்து இறக்க வேண்டும் .ஒரு வாணலியில்இரண்டு ஸ்பூன் நெய்விட்டு  முந்திரி திராக்ஷை இரண்டையும்
பொரித்து எடுத்து வைக்கவேண்டும் .அந்த வாணலியில் வெல்லத்தை
போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சு வெல்லம் கரைந்ததும் அதை
வடிகட்டியில் வடிகட்டி திரும்ப வைத்து கெட்டியாக வரும்வரை கொதிக்க
விடவேண்டும் .ரொம்ப கெட்டியாக கூடாது .குக்கரை திறந்து சாதத்தை
நன்கு மசிக்க வேண்டும் .பிறகு வெல்ல பாகை அதில் கொட்டி நன்றாக
கிளறி அடுப்பை சிறியதாக வைத்து அதில் குக்கரை வைத்து ஏலக்காய்,
முந்திரி ,திராக்ஷை மீதமுள்ள நெய் ஆகியவற்றை கொட்டி கிளறி   சிறிது
கெட்டி ஆனதும் இறக்கி வைக்கவும் .பொங்கல் தயார்

பொங்கலோ   பொங்கல் என கூறி சூரியனுக்கு நைவேத்தியம் செய்து மிக
சிறப்பாக பொங்கலை கொண்டாடுங்கள்
 ,


Thursday, January 9, 2020

syamalas Arusuvai virunthu: thiruvathirai kuzham

syamalas Arusuvai virunthu: thiruvathirai kuzham: திருவாதிரை குழம்பு இதற்கு முன் திருவாதிரை களி செய்வது கூறினேன்அதற்கு ஏற்றாற்போல் கூட்டு எனப்படும் திருவாதிரை குழம்பு செய்வது எப்படி என்ப...

thiruvathirai kuzham

திருவாதிரை குழம்பு

இதற்கு முன் திருவாதிரை களி செய்வது கூறினேன்அதற்கு ஏற்றாற்போல்
கூட்டு எனப்படும் திருவாதிரை குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
அதற்கு ஏழு காய்கள் தேவை .கத்தரிக்காய் ,அவரைக்காய் ,உருளை கிழங்கு ,
சேப்பங்கிழங்கு .சேனைக்கிழங்கு ,மொச்சை ,வாழைக்காய்பூசணி காய் ,பரங்கி காய்   இவைகளை நன்றாக கழுவி ஒரே அளவில் நறுக்க வேண்டும் (இதில் கிடைக்கும் காய்களை )போடலாம் .அதில் எலுமிச்சை அளவு புளியை

கரைத்து காய் களை உப்பு போட்டு கொதிக்க வைக்கவேண்டும் .ஒரு
வாணலியில் ஒரு ஸ்பூன் தனியா ,இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு இருபது
மிளகாய் அரை கப் தேங்காய் துருவல் ஆகியவைகளை ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் .ஆறியபின்
மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும் ..குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பை வேகவைத்து தனியாக வைக்கவேண்டும் காய்கள் நன்றாக
வெந்ததும் பருப்பை நன்றாக மசித்து அதில் ஊற்றவேண்டும் .அரைத்து
வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்
அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடுகு இரண்டு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவேண்டும் .இரண்டு கொத்து கறிவேப்பிலை
போட்டு கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் இப்பொழுது
களிக்கு ஏற்ற சாம்பார் தயார் இனி என்ன ஆருத்ரா தரிசனம் நைவேத்தியம்
தயார் .அனைவரது சபாஷ் என்ற பாராட்டு உங்களுக்கு தான் .ஜமாயுங்கள் 

Wednesday, January 8, 2020

syamalas Arusuvai virunthu:  திருவாதிரை களி மார்கழி மாதம் சிவனுக்கு திருவாத...

syamalas Arusuvai virunthu:

 திருவாதிரை களி 
மார்கழி மாதம் சிவனுக்கு திருவாத...
:  திருவாதிரை களி  மார்கழி மாதம் சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம் அந்த நாளை ஆருத...


 திருவாதிரை களி 

மார்கழி மாதம் சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம் அந்த நாளை ஆருத்ரா தரிசனம் 
என்று கூறுவார்கள்  களி செய்யும் முறையை பற்றி கூறுகிறேன் 
தேவையான பொருட்கள் 
பச்சை அரிசி ----------------------------------------------அரை கப் 
பயத்தம் பருப்பு -------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
வெல்லம்------------------------------------------------------ஒரு கப் 
தேங்காய் துருவல் ----------------------------------------அரைசுப் 
ஏலப்பொடி ------------------------------------------------------ஒருஸ்பூன் 
முந்திரிப்பருப்பு ------------------------------------------------இருபது (சிறு துண்டுகளா க்கு )
நெய் ------------------------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன் ,மீதம 




செய்முறை 

அரிசி ,பயத்தம்பருப்பு  இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுக்க வேண்டும் .ஆறியபின் மிக்ஸியில் ரவைப்பதத்திற்கு அரை க்கவேண்டும் 
ஒரு பாத்திரத்தில் மூன்று  கப் தண்ணீர்விட்டுரவையை போட்டு குக்கரில் இரண்டு விசில் வரஅடுப்பில் . வைக்கவேண்டும்  வெல்லத்தைஒரு பாத்திரத்தில்  போட்டுஒரு கப் தண்ணீரில்  கொதிக்க வைக்க வேண்டும்வெல்லம் கரைந்ததும் 
அதை வடிகட்டியலில் வடிகட்டவேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண் 
இருக்கும் .,பிறகுவெந்த ரவையில் வெல்லப்பாகு தேங்காய் துருவலை 
கொட்டி நன்றாக கிளற வேண்டும்  ஏலக்காய் தூள் போடவும் .முந்திரியை 

இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்துகளி யில்  போடாவும்  மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும் 

ஜனவரி பத்தாம் தேதி திருவாதிரை பண்டிகை வருவதால் அனைவரும் 
 களி செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் 
 .
;  


விட வேண்டும் .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டியில் 
வடிகட்ட வேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண் இருக்கும் 


Tuesday, January 7, 2020

syamalas Arusuvai virunthu: vepampoo rasam

syamalas Arusuvai virunthu: vepampoo rasam: வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .இதுவயிற்று கோளாறு ,பித்தம் இவைகளுக்கு மிக நல்லது.இதில் ரசம் ஐ ந்து நிமிடத்த...

vepampoo rasam


வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .இதுவயிற்று கோளாறு ,பித்தம் இவைகளுக்கு மிக நல்லது.இதில் ரசம் ஐ ந்து நிமிடத்தில்
வைக்கலாம் .இந்த ரசம் சாப்பிட மிக ருசியாகவும் இருக்கும் .உடலுக்கும் நல்லது

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ ------------------------------------------------------- அரை     கப்
புளி -----------------------------------------------------------------ஒரு பெரிய எலுமிச்சை அளவு

மிளகாய் ------------------------------------------------------------நான்கு
கடுகு -----------------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
உப்பு -------------------------------------------------------------------தேவையான அளவு
பெருங்காயம் ------------------------------------------------------அரை டீஸ்பூன் 
 கறிவேப்பிலை -----------------------------------------------------இரண்டு கொத்து
எண்ணெய் ------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்

 
.


செய்முறை
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில்
விடவேண்டும் .தேவையான உப்பு போடவேண்டும்  .பெருங்காயம் போடவேண்டும் .அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்
 அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு ,மிளகாய் ,போட்டு வெடிக்கவிட்டு  வேப்பம்பூ போட்டு வறுத்து (கருப்பாக ).கொட்டவேண்டும் பிறகு நன்றாக
இரண்டு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு ஒருகப் தண்ணீர் விட்டு
நுரைத்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்

இதை அப்படியே யும் குடிக்கலாம் .சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்


Sunday, January 5, 2020

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi: திடீர் புளியோதரைப்பொடி  புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது  ...

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi: திடீர் புளியோதரைப்பொடி  புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது  ...

instant puliyitharai podi

திடீர் புளியோதரைப்பொடி 

புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது 
கஷ்டம் .ஆனால் இப்பொழுது இன்ஸ்டன்ட் பொடிகள் வந்து விட்டது .
கடையில் வாங்கும் பொடி வீணாகாமல் இருக்க சில ரசாயன பொருட்களை 
சேர்க்கிறார்கள் .இது உடலுக்கு கெடுதியை விளைவிக்கும் .நாம் வீட்டிலேயே 
அதை செய்யும் முறையை நான் இங்கு கூறுகிறேன் .இதை நீங்களும் செய்து 
நல்ல புளியோதரையை செய்து அனைவரையும்மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள் 
தேவையான பொருட்கள் 

புளி  ---------------------------------------------------------------------நூறு கிராம் அதாவது ஒரு சாத்துக்குடி அளவு 

கடலைப்பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு ----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
மிளகு ----------------------------------------------------------------------ஒரு டீஸ்  ஸ்பூன் 
தனியா --------------------------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
மிளகாய் -------------------------------------------------------------------இருபது 
பெருங்காயம் ------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
வெந்தயம் ------------------------------------------------------------------ஒருஸ்பூன் 
வெல்லம் ---------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு பிடி 
வேர்க்கடலை தோல் நீக்கியது --------------------------------------ஒரு கப் 
நல்ல எண்ணெய் ------------------------------------------------------------அரைசுப்( அல்லது)தேவையான அளவு 
 கடுகு ---------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 


செய்முறை 

கடுகு ,வெல்லம் ,கறிவேப்பிலை ,வேர்க்கடலை  எண்ணெய் தவிர மற்ற 
பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நன்றாக 
பொடியாக அரைத்து எடுக்கவும்  கறிவேப்பிலையை தேவையான உப்புடன் 
சேர்த்து வறுத்து எடுக்கவும் .உப்பில் நீர் இருக்கும் என்பதால் வறுக்க    வேண்டும்  .பின்பு  வேர்க்கடலை வெல்லம் கறிவேப்பிலை உப்பு  அத்துடன் கலந்து ஆறியதும்பாட்டலில்போட்டு வைக்கவும் ..இதுவே இன்ஸ்டன்ட் 
புளியோதரை பொடி இது மாதக்கணக்கில் வீணாகாது 

புளியம் சாதம் செய்யும் முறை 

சாதம் செய்து ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து நல்ல எண்ணெய் ஊற்றி 
அதில் தேவையான அளவு பொடி போட்டு கலக்க வேண்டும்   
ஹையா 

ரம்மியமான புளியோதரை ரெடி .

 
   

 

Friday, January 3, 2020

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

chillipaneer

Image result for chillipaneeraசில்லி பன்னீர்
சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று .
ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர் ஆர்டர் செய்வார்கள் .வீட்டில் ஏதாவது விசேஷம்பிறந்தநாள் பார்ட்டி மற்றும் நியூயர்ஸ் பார்ட்டி ஆகியவற்றிற்கு விருந்துகளில் முதலிடம் வகிப்பது சில்லி பன்னீர் தான் இதை செய்வதில் என் மருமகள் expert .அவளிடம் இதை கற்றுக்கொண்டேன் இங்கிலாந்தில் இது இல்லாமல் ஒரு பார்ட்டியும் இல்லை ..இதை சுலபமாக வீட்டில் செய்யும் முறையை கூறுகிறேன் .நீங்களும் செய்து வீருந்தினர்களை அசத்துங்கள்

தேவையான பொருட்கள்

பன்னீர் --------------------------------------------------------- முன்னூறு கிராம்
cornflour ----------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் பச்சை,மஞ்சள் ,சிகப்பு -----------தலா ஒன்று ஆக மூன்று
பெரிய வெங்காயம் ----------------------------------------நான்கு
இஞ்சி -------------------------------------------------------------இரண்டு அங்குல நீளம்
பூண்டு --------------------------------------------------------------பத்து பல்
பச்சைமிளகாய் ---------------------------------------------------இரண்டு
எண்ணெய் -----------------------------------------------------------இரெண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கார்ன் flour மாவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து கொள்
பன்னீரை இரண்டு சென்டிமீட்டர் அளவு cube சதுரமாக நறுக்கு
கால் ஸ்பூன் மிளகு பொடி போடு
கார்ன் மாவு ,மிளகுப்பொடி சேர்த்து பன்னீர் துண்டுகளை பிசறி பத் து  நிமிடம்
ஊற வை
பின் எண்ணெய்யில் வறுத்து எடு
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக மசியஇடித்து  எடு
வெங்காயம் குடைமிளகாய் இவைகளை ஒரு சென்டிமீட்டர் நீள அகலம்
உள்ள துண்டுகளாக நறுக்கு
இஞ்சி ,பூண்டு மிளகாய் கலவையை எண்ணெய் விட்டு வதக்கு
அத்துடன் கறிகாய் துண்டுகளை போட்டு முக்கால் வேக்காட்டில் வதக்கி எடு
அதில் டொமட்டோ சாஸ் (tomatto sauce) , சில்லி சாஸ் (chilli sauce) ,சோயா சாஸ் (soya sauce) மூன்றும் தலா  ஒரு டேபிள் ஸ்பூன்
ஊற்றி கலந்து பின் வறுத்த பன் னீரைசேர் நன்றாக கலந்து வை
அத்துடன் கொத்தமல்லி தழையை தூவு
அழகான நிறத்துடன் சில்லி பன்னீர் ரெடி