Wednesday, November 8, 2023

corn flakesமிக்சர்
தீபாவளி வந்துவிட்டது பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விட்டோம் இதில் மிகவும் சுலபமாக வயதானவர்கள் முதல் குழந்தை வரை உடலுக்கு மிகவும் நல்லதான கான்ஃப்ளக்ஸ்மிக்சர் இம்முறை செய்தேன் அதை செய்யும் முறையை விளக்கி உள்ளேன் நீங்களும் செய்து பயனடையுங்கள்
தேவையான பொருட்கள்
காண்பிளக்ஸ் மூன்று கப்
 வேர்க்கடலை அரை கப்
 பொட்டுக்கடலை அரைக்கப் 
காய்ந்த திராட்சை அரைக்கப்
அவல் அரைக்கப்
முந்திரி 20
மஞ்சள் தூள் அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் இரண்டு
செய்முறை
Step one
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வேர்க்கடலை பொட்டுக்கடலை முந்திரி திராட்சை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்
Step 2
ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கான்ப்ளக்
ஸை வறுத்து எடுக்க வேண்டும்
அவலை வெறும் வாணலியில் வறுத்து எடுக்க வேண்டும்
ஒரு கொத்து கருவேப்பிலை மிளகாய் இரண்டையும் ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டும்
Step 3
ஒரு அகலமான பாத்திரத்தில் கான்ப்ளக்ஸ் மற்றும் வறுத்து வைத்துள்ள அத்தனை பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிறிது உப்பு இவற்றை போட்டு கலக்க வேண்டும் கடைசியில் கருவேப்பிலை மிளகாய் போட்டு அலங்கரிக்க வேண்டும் இப்பொழுது கண்ணிற்கு விருந்தாக கான்ப்ளக்ஸ் மிக்சர் காட்சியளிக்கும்!!

• 

Monday, October 30, 2023

வெள்ளை குருமா
 சரவணபவன் வெள்ளை குருமா மிகவும் புகழ்பெற்றது. இது இட்லி சப்பாத்தி தோசை பரோட்டா ஆகியவற்றிற்கு  சைட்டிஷ்ஷாக ஆக பரிமாறப்படும். இதை செய்யும் விதத்தையும் இதற்கு தேவையான பொருட்களையும் பார்ப்போம்
 வதக்குவதற்கு தேவையான பொருட்கள்
 பச்சை மிளகாய் 4
 இஞ்சி ஒரு இன்ச்
 பூண்டு ஆறு பல்
 முந்திரி 15
 கசகசா ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
 தேங்காய் அரை மூடி துருவியது  
 ஸ்டெப் ஒன்
 முதலில் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவைகளை வதக்கி அத்துடன் கசகசா முந்திரியை லேசாக வருத்து தேங்காயையும் நிறம் மாறாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொட்டுகடலையுடன்மைய அரைத்து  வைக்க வேண்டும்
 ஸ்டெப் 2
 வெங்காயம்1
 காலிஃப்ளவர்
கேரட்
 பீன்ஸ்
 இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி  வைக்க வேண்டும் உருளைக்கிழங்கு இரண்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுத்தவும். பச்சை மிளகாய் இரண்டு கீறி வைக்கவும் ஸ்டெப் 3
 எண்ணெயில் பொறிக்க
 சோம்பு ஒரு ஸ்பூன்
 பிரியாணி இலை இரண்டு
 ஸ்டார் ஒன்னு
 மராட்டி மொக்கு ஒன்று
 கிராம்பு மூன்று
 பட்டை ஒரு துண்டு
  ஸ்டெப் 4

 எண்ணெயில் பொறிக்க வேண்டிய பொருட்களை பொரித்துவெங்காயத்தைஇலேசாகவதக்கி அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை நிறம் மாறாமல் லேசாக வதக்கி தண்ணீரில் கொதிக்க விடு காய்கள் வெந்ததும்  தக்காளி ஒன்றை
 நீலவாட்டில் நறுக்கி போடு, பின்பு அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும் இப்பொழுது குருமா கெட்டியாக ஆரம்பிக்கும்,
 அதில் ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சம் கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் இப்பொழுது வெள்ளை வெளேர் என்ற வெள்ளை குருமா கம கம மணத்துடன் ரெடி

Tuesday, October 10, 2023

ஆப்பிள் ஊறுகாய்நான் யுகே யில் இருக்கும் சமயத்தில் இங்கு கிடைக்கும் ஆப்பிள் வைத்து ஊறுகாய் பண்ணுவேன். அந்த ஊறுகாய் கிட்டத்தட்ட நம்ம ஊர் மாங்காய் ஊறுகாய் போல் இருக்கும். அது செய்யும் முறை பற்றி கூறுகிறேன்தேவையான பொருள்ஆப்பிள் 4எண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன்கடுகு ஒரு ஸ்பூன்பெருங்காயம் ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்காஷ்மீர் சில்லி பவுடர் நாலு டேபிள் ஸ்பூன்செய்முறைஆப்பிளை தோல் சீவி ய பிறகு நன்றாக துருவி கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு பெருங்காயத்தூள் போட்டு வெடிக்க விட்டவுடன் துருவிய ஆப்பிளை போட்டு கிளற வேண்டும் அத்துடன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் கிளற வேண்டும் அதன் பின் மிளகாய்த்தூள் போட்டு மீதமுள்ள எண்ணெய் விட்டு நன்றாக கிளற வேண்டும் எண்ணெய் மிதந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்பொழுது பரிமாறுவதற்கு தயார் நிலையில் ஆப்பிள் ஊறுகாய் நல்ல கலருடன் காட்சியளிக்கும். இந்த ஊறுகாயை நான் சென்னையிலும் செய்வேன் உடலுக்கும் மிக நல்லது

Saturday, August 12, 2023

சமையல் மிளகு குழம்பு மிளகு குழம்பு என்பது ஒரு பத்திய குழம்பு. இந்த உடம்பு சரி இல்லாதவர்களுக்கும் பிரசவித்தவர்களுக்கும் தரக்கூடியது இதைப் பற்றி எழுத சொல்லி கேட்டார்கள் எனவே அதைப்பற்றி எழுதுகிறேன் தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை ஒரு பிடி உப்பு தேவையான அளவுபுளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு சீரகம் ஒரு டீஸ்பூன்நல்லெண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு செய்முறை அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட வேண்டும் அதில் துவரம் பருப்பை போட்டு பொன் வருவலாக வறு த்துஎடுக்க வேண்டும். பின்பு மிளகு மிளகாய் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை பொன் வருவலாக வறுத்து எடுக்க வேண்டும் கருவேப்பிலையை ஈரம் போக வறுத்தெடுக்க வேண்டும் பின்புஅனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும் புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வாணலியை அடுப்பில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யை விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணியை விட வேண்டும் அது அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும் தேவையான உப்பை போட்டு அடுப்பை மெதுவாக வைத்து கொதிக்க விட வேண்டும் எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும் இது ஒரு பாட்டிலிலோ அல்லது ஒரு சம்படத்திலோ கொட்டி வைத்தால் நல்லது இது ஒரு வாரம் வரை வெளியே வைத்தால் கெடாது ஃப்ரிட்ஜில் ஒரு மாதம் கூட வைக்கலாம் சூடான சாதத்தில் தேவையான அளவு போட்டுக் கொண்டு ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும் உடலுக்கு நல்லது

 சமையல்
 மிளகு குழம்பு
 மிளகு குழம்பு என்பது ஒரு பத்திய குழம்பு. இந்த உடம்பு சரி இல்லாதவர்களுக்கும் பிரசவித்தவர்களுக்கும் தரக்கூடியது இதைப் பற்றி எழுத சொல்லி கேட்டார்கள் எனவே அதைப்பற்றி எழுதுகிறேன் தேவையான பொருட்கள் 
 துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன்
 மிளகாய் வற்றல் நான்கு
 பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்
 கருவேப்பிலை ஒரு பிடி
 உப்பு தேவையான அளவு
புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு 
 சீரகம் ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு

 செய்முறை
  அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட வேண்டும் அதில் துவரம் பருப்பை போட்டு பொன் வருவலாக வறு த்துஎடுக்க வேண்டும். பின்பு மிளகு மிளகாய் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை பொன் வருவலாக வறுத்து எடுக்க வேண்டும் கருவேப்பிலையை ஈரம் போக வறுத்தெடுக்க வேண்டும் பின்புஅனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும் புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வாணலியை அடுப்பில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யை விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணியை விட வேண்டும் அது அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும் தேவையான உப்பை போட்டு அடுப்பை மெதுவாக வைத்து கொதிக்க விட வேண்டும் எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும் இது ஒரு பாட்டிலிலோ அல்லது ஒரு சம்படத்திலோ கொட்டி வைத்தால் நல்லது இது ஒரு வாரம் வரை வெளியே வைத்தால் கெடாது ஃப்ரிட்ஜில் ஒரு மாதம் கூட வைக்கலாம் சூடான சாதத்தில் தேவையான அளவு போட்டுக் கொண்டு ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும் உடலுக்கு நல்லது

Monday, July 31, 2023

என்ன சியாமளா இரண்டு வாரமா ஒரு சமையல் குறிப்பும்எழுதவில்லையே ஏன் என்று கேட்டுக் கொண்டு மதியமரில் என் ஏன் ரெசிபியை விடாது பார்க்கும் நண்பர்கள் ஒருவர் கேட்டார் அத்துடன் விட்டாரா? மத்தியானம் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதற்கு முன் சாப்பிட ஒரு ஸ்னாக்ஸ் வேண்டும் அதை செய்பவர் கைநோகாமல் சாப்பிடுபவர் பல் நோகாமல் சுலபமாக ஜீரணமாக கூடிய என்று சொல்லிக் கொண்டே போனார் சார் சார் நிறுத்துங்கள் இந்த வாரம் ஒரு ஸ்னாக் கூறுகிறேன் அதை செய்து பார்த்து சாப்பிட்டு பார்த்து எனக்கு கமெண்ட் எழுதுங்கள் என்று கூறினேன் இதோ அந்த ஸ்நேக் செய்ய தேவையான பொருளும் செய்யும் முறையும் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி ஒரு கப் பொட்டுக்கடலை மாவு அரைக்கப் எள்ஒரு டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லதுகாய்ந்த எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் தேவையான உப்புபொரிப்பதற்குதேவையான எண்ணெய் செய்முறை புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்பொட்டுகடலையைமிக்சியில்மைய அரைக்கவேண்டுமதண்ணீரை வடிகட்டி அரிசியைஇட்லி மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்அதை ஒரு பவுலில் கொட்டி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு போட்டு பிசைய வேண்டும் நன்றாக பிசைந்ததும் அத்துடன் வெண்ணெய் எள், உப்பு பெருங்காயம்ஆகியவற்றை போட்டு தண்ணீர் விடாமல் பிசைய வேண்டும் தேவையானால்மட்டும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். ஒரு வாணலியில் முறுக்கு செய்வதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி காய வைக்க வேண்டும் முறுக்கு அச்சில் எண்ணெயை தடவி மாவை போட்டு எண்ணெய் காய்ந்ததும் பிழிய வேண்டும் முறுக்கு பொன்னிறமாக வரும்போது எடுத்து விட வேண்டும் கிட்டதட்ட 20 முறுக்குகளுக்கு மேல் வரும் இது பிழிவதும் ரொம்ப சுலபம். கடினம் இல்லாமல் இருப்பதால் பற்களுக்கும் இதமாக இருக்கும் இந்த முறுக்கு புழுங்கல் அரிசியில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஏனென்றால் புழுங்கல் அரிசியில் பலவிதமான விட்டமின் சத்துக்கள் உள்ளன இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் இருதயதசைகள் வலுவிழிப்பது மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எள்ளில்இரும்பு சத்து உள்ளது பொட்டுக்கடலையில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது சுலபமாக ஜீரண சக்தி உடையது இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த ஸ்னாக்ஸ் எனவே இதை செய்து ருசித்து பாருங்கள்

Monday, July 17, 2023

மோர் கீரை மொளைக்கீரே, அரைக்கீரே, பொன்னாங்கண்ணிக் கீரே என்ற கீரைகாரர்குரல்கேட்டதும் ஆஹா ஆறு மாதம் ஆயிற்று இந்த குரலை கேட்டு என்று வேகமாக வாசலுக்கு வந்தேன் கீரை இங்க வாப்பா என்று கூப்பிட்டேன். கீரை காரர் வண்டியை என்றதள்ளிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார். உன்ன காணோம்னு எதிர் வீட்டு அம்மா கிட்ட கேட்டேன் நீ லண்டன் போனதா சொன்னாங்க. நீ எப்ப ஊர்ல இருந்து வந்த என்று கேட்டுக் கொண்டே முளைக்கீரை எடுத்து எடுத்து கொடுத்தார். பச்சை பசேல் என்ற அந்த கீரை கட்டை ஒரு குழந்தையை தடவு போல் தடவிக் கொண்டு உள்ளே செல்ல திரும்பினேன் அப்பொழுது எதிர் flatவிமலா இன்னைக்கு என்ன கீரை மசியலா என்று கேட்டாள். இல்லைஇன்று மோர் கீரை பண்ணுவதாக இருக்கிறேன். இந்தியாவில் செய்து வருட கணக்காய் விட்டது என்று கூற அது என்ன மோர் கீரை என்று கேட்க நான் உடனே எங்கள் பிளாக்கில் எழுதுகிறேன் பாத்துக்கோ என்று கூறினேன் இதோ அதைப்பற்றி எழுதுகிறேன் நீங்களும் பாருங்கள்...,. மோர் கீரைசெய்வதற்க தேவையான பொருட்கள் முளைக்கீரை ஒரு கட்டு (அரைக்கீரை பாலக்கீரை எதுவானாலும் சரி) தேங்காய் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் சீரகம் ஒரு ஸ்பூன காய்ந்த மிளகாய் ரெண்டு கடுகு ஒரு டீஸ்பூன் தயிர் ஒரு கப் கடைந்தது அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எண்ணொய்ஒரு டீஸ்பூன் செய்முறை கீரையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும் அப்போது தேவையான உப்பு போட வேண்டும் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து அத்துடன் தயிர் அரிசி மாவு கலந்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் கீரையில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும் எண்ணெயில் கடுகு மிளகாய் வெடிக்க விட்டு அதில் கொட்ட வேண்டும் இப்பொழுது அபார ருசியுடன் மோர் கீரை தயார்

Sunday, July 16, 2023

சமையல்இன்ஸ்டன்ட் புளியோதரை பொடிஇன்று என்ன சமையல் என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டு விமலா வந்தாள்.இன்று புளியோதரை மோர் குழம்பு அப்பளம் பொரித்தேன் என்று என்று கூறினேன்என்ன விசேஷம் புளியோதரை எல்லாம் பலமா இருக்கு?அதுவா....,..என் பேத்தி யூஎஸ் போற இல்லையா அதற்கு தான் அவளுக்காக இன்ஸ்டண்ட் புளியோதரை பொடி பண்ணினேன். அது எப்படி இருக்கிறது என்று பார்க்க புளியஞ்சாதம் செய்தேன் அதற்கு சைட் டிஷ் மோர் குழம்பும் அப்பளமும்!!!இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியா அதான் கடையில இருக்கே.....அதுல கெமிக்கல் சேர்த்து இருப்பா உடம்புக்கு ஆகாது எனவே நானே பண்ணி விடுவேன்.சரி சரி அது எவ்வாறு செய்வது என்று எனக்கும் கூறு நானும் செய்யறேன் என்று கூற நான் அதைப்பற்றி கூறினேன். அது உங்களுக்கும் கூறுகிறேன்தேவையான பொருட்கள்புளி.,. ஒரு சாத்துக்குடி அளவுகடலைப்பருப்பு அரை கப்உளுத்தம் பருப்பு அஞ்சு டீஸ்பூன்வெந்தயம் ஒரு டீஸ்பூன்மிளகு ஒரு டீஸ்பூன்கொத்தமல்லி இரண்டு டீஸ்பூன்பெருங்காயம் ஒரு டீஸ்பூன்சீரகம் ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை மூணு கொத்துஎள் ஒரு டீஸ்பூன்இந்த பொருட்களை வாணலியில் தனித்தனியாக பொன் வறுவலாகவறுத்து ஒரு தட்டில் ஆற வைக்க வேண்டும்அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 10 மிளகாய் வறுக்க வேண்டும். அதை தட்டில் எடுத்து வைத்துவிட்டு அந்த எண்ணெயில் புளியை சிறு சிறு துண்டுகளாக செய்து அடுப்பை மெதுவாக வைத்து வறுக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்போது அதை அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைக்க வேண்டும் ஆறியதும் முதலில் மிளகாய் புளி இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும் பிறகு மற்ற வறுத்து வைத்துள்ள பொருட்களை இரண்டுஸ்பூன்மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்புடன் மைய அரைக்க வேண்டும் அத்துடன் வறுத்து தோல் உரித்த வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும்.. இப்பொழுது இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி ரெடி.அதை வைத்து எப்படி புளியசஞ்சாதம் சாதம் செய்வது என்று பார்ப்போம்ஒரு தட்டில் வடித்த (ஒரு ஆழாக்கு அரிசி) சாதத்தை போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஆற வைக்க வேண்டும் பின்பு ஒரு வானொலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் கடுகு நான்கு வர மிளகாய் (சாதத்திற்கு தகுந்தால் போல் காரம்) கருவேப்பிலை போட்டு தாளித்து அதை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும் பின்பு இரண்டு டேபிள் அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை போட்டு நன்றாக கிளற வேண்டும். தேவையானால் உப்பு சேர்க்கலாம் இப்பொழுது கமகம என்ற கண்ணுக்கு ரம்யமான புளியோதரை ரெடி இதற்கு சைட் டிஷ் தயிர்பச்சடி,மோர் குழம்பு ,அவியல் மிக நன்றாக இருக்கும்.இந்த இன்ஸ்டன்ட் பொடியை பிரிட்ஜ்ஜில் மாத கணக்கில் வைத்து உபயோகிக்கலாம்

Sunday, June 18, 2023

 உருளைக்கிழங்கு முறுக்கு
 தேவையான பொருட்கள்
 உருளைக்கிழங்கு 2
 அரிசி மாவு 2 கப் சீரகத்தூள் ஒன்றை ஸ்பூன் பெருங்காயத்தூள் ஹை ஸ்கூல்
 வெண்ணை ரெண்டு டேபிள் ஸ்பூன்
 என்னை தேவையான அளவு 
 செய்முறை
 உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும் ஆரியப் பின் மிக்சியில் அடித்த அத்துடன் அரிசி மாவு உப்பு வெண்ணெய்சேர்த்து நன்றாக பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய் காய்ந்ததும் பிழிந்து எடுக்க வேண்டும் இப்பொழுது மொறு மொறு முறுக்கு தயார்

Saturday, June 10, 2023

இன்றைய காலை டிபன்

இன்று காலை எழுந்தது முதல் மனதிற்குள் ஒரே போராட்டம். என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! காலையில் என்ன டிபன் செய்வது என்று தான்! தினமும் இட்லி தோசை பொங்கல் என்று சாப்பிட்டு அ லுத்துவிட்டது. ஏதாவது மாறுதலா செய்யலாம் என்று தோன்றியது. அப்போது நேற்று வாங்கியmodern whole wheat bread நினைவிற்கு வந்தது. உடனே இரண்டு ஸ்லைஸ் பிரட் எடுத்தேன். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுத்தி ரவை பதத்திற்கு எடுத்தேன் ஒரு வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்தேன். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் கடுகு போட்டேன். அது வெடித்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டேன் அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு கண்ணாடி பதத்திற்கு தேவையான உப்பு போட்டு வதக்கினேன். வதங்கியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பிரட் ரவையை போட்டு ஒரு வதக்கு வதக்கி கீழே இருக்கிறேன். ஆஹா அருமையான பிரட் உப்புமா தயார் இதற்கு சைடு டிஷ் கூட வேண்டாம் பிரமாதமாக இருந்தது உடனே எனக்கு மத்தியமரில் எழுத வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் சாப்பிட்டு விட்டு எழுதலாம் என்று நினைத்தேன் சாப்பிட்டதும் உடனே எழுதி உள்ளேன் மிக நன்றாக இருக்கிறது ஐந்தே நிமிடம் டிபன் ரெடி ஆகிறது எனவே நீங்களும் செய்து அனுபவியுங்கள் செலவும் கம்மி பலனோ அதிகம்! என்ன நான் சொல்வது சரிதானே?

Thursday, February 23, 2023

 ஹலோ சமையல்.......... ஆப்பிள் பருப்பு

 எனக்கு விதவிதமாக சமைப்பது என்றால் மிகவும் இஷ்டம் அதுவும் UKஇல் என் பேத்திக்கு & பேரனுக்குபிடிக்கும் சமையலை செய்வதென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படி இந்த வாரம் ஆப்பிள் பருப்பு என்ற டிஷ் செய்தேன். அதை சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள் அதை உங்களுக்கும் கூறுகிறேன் நீங்களும் செய்து பாருங்கள்.


ஆப்பிள் பருப்பு

 தேவையான பொருள்

 பச்சைஆப்பிள் 2
🍏🍈
 பயத்தம் பருப்பு ஒரு கப்
 கடுகு ஒரு ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் நான்கு
 பெருங்காயம் அரை டீஸ்பூன்
 கருவேப்பிலை ஒரு கொத்து
 எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு

 செய்முறை
 ஆப்பிளை சிறியதுண்டங்களாக நெறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பயத்தம்பருப்பை குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்கவும் அதை வெந்தஆப்பிளுடன் சேர்த்து உப்பு போட்டு சிறிது கொதிக்க வைக்க வேண்டும். அதில் கடுகு உளுத்தம் பருப்பு, மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை அனைத்தையும் தாளித்துக் கொண்டு கிளறி இறக்க வேண்டும். இதை சாதத்தில் பிசைந்துசாப்பிடலாம். சப்பாத்தி இட்லிதோசை போன்றவைகளுக்கு சைட் டிஷ் ஆகும் உபயோகப்படுத்தலாம் இதன் ருசி பிரமாதமாக இருக்கிறது என்று என்று எங்கள் வீட்டில் அனைவரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள் நீங்களும் செய்து பாருங்கள்

Sunday, February 5, 2023

இட்லி மிளகாய் பொடி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு ஒரு கப் உளுத்தம் பருப்பு ஒரு கப் எள்இண்டு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் இரண்டு கப் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்செய்முறை மேலே உள்ள பொருட்களை நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் மிளகாய் தனியா வறுக்க வேண்டும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைக்க வேண்டும் வெல்லத்தை கடைசியில் போட்டு ரெண்டு சுற்றியதும் ஆறிய பின் பாட்டிலில் அல்லது எவர்சில்வர் சம்பளத்தில் போட்டு வைக்க வேண்டும் இதை இட்லி தோசைக்கு போட்டுக்கொள்ள நல்லெண்ணெய் விட்டு குழைத்து தொட்டுக்கொண்டு சாப்பிட சூப்பரோ சூப்பர்!!! இட்லி தோசைக்கு மேல் இதை தடவி ஊற வைத்து சாப்பிட அதனுடைய ருசி தனியே தான் !!!!!

Thursday, February 2, 2023

இன்றைய சமையல் இன்று என்ன சமையல் செய்வது என்று பலத்த யோசனை! அப்புறம் திடீரென்று இந்தக் குளிருக்கு மிளகு குழம்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . உடனே களத்தில் இறங்கினேன். அதை எவ்வாறு செய்தேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் தேவையான பொருட்கள் துவரம் பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் காஞ்ச மிளகாய் 10 பெருங்காயம் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை பொடி ஒரு டேபிள் ஸ்பூன்( இந்தியாவிலிருந்து வரும் பொழுது கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொண்டு வந்து விடுவேன் அவ்வப்போது தேவையானவற்றிற்கு போடுவதற்கு)புளி எலுமிச்சைஅளவுமிளகுஒருடிஸ்புன்சீரகம்ஒருடீஸ்பூன் செய்முறை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம் பருப்பு மிளகாய் பெருங்காயம்மிளகு,சீரகம் இவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அனைத்து பொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக மைய அரைக்க வேண்டும். பின்பு ஒரு வானலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரைத்த விழுதை ஒருடம்ளர்தண்ணீர் விட்டு கரைத்து விட வேண்டும். தேவையான உப்பை போட்டு நன்றாக கலக்க வேண்டும் நன்றாக கொதித்து வரும்போது மீதமுள்ள எண்ணெயை விட்டு கிளற வேண்டும் எண்ணெய்பிரிந்து வரும்போது அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி விட வேண்டும் இப்பொழுது கமகமவென்ற மிளகு குழம்பு தயார் எதற்கு தொட்டுக்கொள்ள கேரட்டை துருவிதேங்காய்போட்டு பொரியல் செய்தேன்.

Friday, January 20, 2023

 கொண்டைக்கடலை பிரியாணி

 தேவையான பொருட்கள் 
 பிரியாணி அரிசி அல்லது பச்சரிசி ஒரு கப்
 ஊற வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
 பிரிஞ்சி இலை பட்டை ஏலக்காய் தலா ஒன்றுகிராம்பு ரெண்டு
 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப்
 இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூ ன்
 பச்சை மிளகாய் ஒன்று
 தக்காளி இரண்டு
 மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தலாஒரு ஸ்பூன்
 கொத்தமல்லி இலை புதினா கொஞ்சம்
 எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

 செய்முறை

 ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை இலை ஏலக்காய் கிராம்பு, வெங்காயம் ஆகியவைகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதன்பின் புதினா கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்க வேண்டும் அதன் பின் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதன் பின் கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும் பின்பு ரெண்டரை கப்தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் தண்ணீர் கொதித்ததும் அதில் அரிசியையும் கொண்டைக்கடலையும் சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். ஆறியதும் குக்கரை திறக்கவும். இப்பொழுது கமகமவென்று கொண்டைக்கடலை பிரியாணி தயாராக இருக்கும். இதற்கு வெங்காய தயிர் பச்சடி அல்லது வெள்ளரிக்காய் தயிர் பச்சடி சூப்பர் காம்பினேஷன் நீங்களும் செய்த அசத்துங்களேன்
 டீக்கடை வடை
 தேவையான பொருட்கள் 
 பட்டாணி பருப்பு ஒரு கப்
 சோம்பு ஒரு டீஸ்பூன் 
  மிளகாய் 10
 பெரிய வெங்காயம் ஒரு கப்
 சின்ன வெங்காயம் அரைக்கப்

 பச்சை மிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்
 பூண்டு ஐந்து பல்
 கருவேப்பிலை கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு



 செய்முறை
 பட்டாணி பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக வடிகட்டி வைக்க வேண்டும் சோம்பு, மிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும் அத்துடன் ஊற வைத்த பருப்பையும் அரைக்க வேண்டும் பிறகு இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு போட்டு பிசைந்து 
 வாணலியில் எண்ணெய் வைத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும் இப்பொழுது டீக்கடை வடை ரெடி இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்

Tuesday, January 17, 2023

 வெங்காய தயிர் பச்சடி
 பெரிய வெங்காயம் இரண்டு
 பச்சை மிளகாய் ஒன்று
 தயிர் ஒரு கப்
 உப்பு தேவையான அளவு

 செய்முறை
 வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் போடவும் பச்சை மிளகாயை நடுவில் கீரி பொடிப்பொடியாக சேர்க்கவும் தேவையான உப்பை போடவும் நன்றாக கிளறி ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவையான பொழுது எடுத்து பரிமாறவும் இந்த பச்சடி பிரியாணிக்கு ஏற்றது

Thursday, January 12, 2023

வத்த குழம்பு பொடி தேவையான பொருட்கள் தனியா நாலு ஸ்பூன் மிளகாய் எட்டு மிளகு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு 3 டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைஎண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் வத்த குழம்பு செய்யும் பொழுது இந்த பொடியை போட்டு செய்தால் வீடே மணக்கும்

தயிர் பச்சடி தேவையான பொருட்கள் தயிர் ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் இரண்டு கடுகு அரை டீஸ்பூன் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது கொஞ்சம் கடுகு அரை டீஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் செய்முறை தேங்காய் பச்சை மிளகாய் உப்பு மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து தயிரில் கலக்க வேண்டும். எண்ணெயில் கடுகைப் போட்டு வெடித்ததும் தயிரில் கொட்டவும். அதன் பின் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும் இது அவசரத்திற்கு செய்யும் பச்சடி என்றாலும் மிகவும் ருசியானது ஈஸியானது

Saturday, January 7, 2023

பிரண்டை பொடி தேவையான பொருட்கள் பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும்

 பிரண்டை பொடி

 தேவையான பொருட்கள்

 பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது
 உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி
 சீரகம் ஒரு ஸ்பூன்
 மிளகு ஒரு ஸ்பூன்
 மிளகாய் வற்றல் நான்கு
 பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
 புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் ஒரு ஸ்பூன்


 செய்முறை

 பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு  தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும்

Thursday, January 5, 2023

கருவேப்பிலை பொடி தேவையான பொருட்கள் பச்சைக் கருவேப்பிலை ஐந்து கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை இரண்டு கைப்பிடி பிரண்டை பொடி தேவையான பொருட்கள் பிரண்டை ஒரு கைப்பிடி அளவு சிறியதாக நறுக்கியது உளுத்தம் பருப்பு ஒரு கைப்பிடி சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நான்கு பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் நறுக்கும் போது கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதனுடைய சாறு படும் இடங்களில் அரிப்பு ஏற்படும். மீதமுள்ள பொருட்களை எண்ணெய்விட்டு பொன்திறமாக வறுக்க வேண்டும் கடைசியில் வாணலியின் சூட்டில் புளியை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து பொருட்களும் நன்றாக ஆரியபின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இதை சூடான சாதத்தில் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர முட்டி வலி சரியாகும் ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் வத்தல் 20 பெருங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன் புளி ஒரு நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் செய்முறை ஒரு வாணலியில் கருவேப்பிலையை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும் அதன்பின் பருப்புகளை தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதன்பின் சீரகத்தை சிவக்க வறுக்க வேண்டும் அத்துடன் பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு சூடான வாணலியில் புளியை புரட்டி எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும் கடைசியாக தேவையான உப்பை போட்டு ஒரு சுத்து சுற்றி அரைத்து அதை ஆறவிட வேண்டும். பொடி நன்றாக ஆறிய உடன் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இதைஉபயோகிக்கலாம். இதை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சிறந்தது.


 கருவேப்பிலை பொடி


 தேவையான பொருட்கள்

 பச்சைக் கருவேப்பிலை ஐந்து கைப்பிடி அளவு
 உளுத்தம் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன்
 கடலைப்பருப்பு டேபிள் ஸ்பூன்
 வேர்க்கடலை இரண்டு கைப்பிடி
 சீரகம் ரெண்டு டேபிள் ஸ்பூன்
 மிளகாய் வத்தல் 20
 பெருங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன்
 புளி ஒரு நெல்லிக்காய் அளவு
 நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

 செய்முறை
 ஒரு வாணலியில் கருவேப்பிலையை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும் அதன்பின் பருப்புகளை தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதன்பின் சீரகத்தை சிவக்க வறுக்க வேண்டும் அத்துடன் பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு சூடான வாணலியில் புளியை புரட்டி எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும் கடைசியாக தேவையான உப்பை போட்டு ஒரு சுத்து சுற்றி அரைத்து அதை ஆறவிட வேண்டும். பொடி நன்றாக ஆறிய உடன் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இதைஉபயோகிக்கலாம். இதை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சிறந்தது.

பொரித்த கூட்டு பொடி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு ரெண்டு கப் மிளகு கால் கப் சீரகம் அரை கப் மிளகாய் வத்தல் பத்து எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை மேலே உள்ள பொருட்களை பொன்னிறமாக வறுக்க வேண்டும் ஆரியபின் மிக்ஸியில் நன்றாக மைய அரைக்க வேண்டும் ஈரம் இல்லாத பாட்டலில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் உபயோகப்படுத்தலாம். இதை புடலங்காய், அவரைக்காய் ,சௌசௌ ,கீரை ,கொத்தவரங்காய் ஆகிய காய்களால் செய்யும் பொரித்தகூட்டிற்கு போடலாம் .